நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே
1. பார்வோனை வென்றவரை துதிப்போம் எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை 2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம் நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம் பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை 3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும் பயமின்றி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை