அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன்
வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா-6
1. இந்த பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணில் சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்
2. கஷ்ட நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதைநோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே
3. ஆட்டுக்குட்டி பின்னே போவோர் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக மகிழ்ந்து பூரிப்பார்
ஆனந்தம் என்றுமே ஸ்தோத்தரிப்போம் என்றுமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்ய காலம் நாமும் அங்கே வாழ்வோம் என்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றுமே
5. பாவமற்ற பரிசுத்தரின் பரம ராஜ்யத்தில்
தேவ சேயர் தேவ மகிமை அடைந்து தோன்றுவார்
ஜீவ தண்ணீருடன் ஜீவ கனியும் நித்தியமாய்
புசிப்போம் புசிப்போம் புசிப்போம்