அபிஷேகம் வந்திறங்குதே
ஆவிக்குள் அகமகிழவே – 2
ஆவியால் நிறைந்திடும் போது
தரிசனம் தோன்றிடுதே – 2
ஆவியின் மாமழை பொழியுதே
மாம்சமான யாவர் மீதும் – 2
2. ஆவிக்குள் ஜீவிப்பதே
ஜெயம் பெறும் வாழ்வாகுமே
மாம்சம் உலகத்தை முற்றும்
மேற்கொள்ளும் ஜீவியமே – ஆவியின்
3. ஆவியின் பெலத்தால் நிறைந்தே
கோலியாத்தை வீழ்த்தினானே
தாவீதைப் போல் அபிஷேகத்தால்
என்றென்றும் நிறைந்திருப்போம்- ஆவியின்
4. அபிஷேகம் இழந்திடாதே
சிம்சோன் சவுலைப் போல
உந்தன் வாலிப ஜீவியத்தில்
எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு – ஆவியின்
5. ஆவிக்குள் ஜீவித்திடு
ஆவியில் அனலாயிரு
ஆண்டவர் இயேசு அளிக்கும்
பரலோக பாக்கியமே – ஆவியின்