அழைக்கிறார் – (2) இயேசு உன்னை
உனக்காய் ஜீவன் ஈந்தவர் அவரே
கனிவாய் அழைக்கிறார்
– அழைக்கிறார்
1. கல்வாரி மீதிலே மீறுதல் தொலைக்க
காயங்கள் அடைந்தனரே – 2
வாதைகள் யாவும் போக்கிட வல்ல
வார்த்தையை நம்பி வா – 2
– அழைக்கிறார்
2. இதயம் நொந்து நொறுங்குண்டோரை
இதயத்தில் பேசிடுவார் – 2
உடலும் நைந்து நொந்திடுவோரை
ஆற்றித் தேற்றிடுவார் – 2
– அழைக்கிறார்