அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல்.. ஓ..ஓ.. நீரே என் ஆறுதல் (2)
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் -2
கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் (2)
என் ராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 2 – அற்புத
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றிப் பாடுமு; சர்வ வல்ல ராஜன் (2)
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 3 – அற்புத
ஒருவராக பெரியக் காரியங்களைச் செய்பவர்
இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் (2)
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்குரியவர் என் இயேசு – 2 – அற்புத