அற்புதராஜன் இயேசுவை நம்பு
அற்புதங்கள் செய்திடுவார்
அதிசயமான தேவனைத் தேடு
அதிசங்கள் செய்திடுவார்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஸப்தஸ்வரங்களில் சங்கீதம் பாடுங்கள் – அற்புதராஜன் இயேசுவை
1. பாவியை விடுதலை செய்திடுவார்
பாவக் கட்டுகளை அவிழ்த்தெறிந்திடுவார்
சாபத்தை நீக்கி ஷேமம் தருவார்
சந்தோஷமாய் நம்மை வாழ வைப்பார்
-எல்லோரும் பாடுங்கள்
2. நாதியற்ற மனுஷராய் இருந்தாலும் – செத்து
நாலு நாளாய் கல்லறைக்குள் கிடந்தாலும்
உயிருடன் எழுப்பிட அவர்
வருவார் – இயேசு
யாரென்று அப்போது நீ அறிவாய்
-எல்லோரும் பாடுங்கள்
3. குருடரும் வருவார் அவர் பின்னே
பார்வை அடைந்தே செல்வார் அவர் முன்னே
முடவரும் அமர்வார் அவர் பின்னே
துள்ளி எழுந்தே நடப்பார் அவர் முன்னே
ஆச்சரியமான தேவனவர் – நம்மை
ஆதிசயமாய் அசத்துகின்றவர்
-எல்லோரும் பாடுங்கள்