அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல் அழிந்து போகின்ற
பழுத்துக் கிடக்கும் அறுவடையை பாரும் இறைவா (இறைவா)
1. திறமை மிகுந்த இளைஞர் குலம் சும்மா நிற்குதே
பரமன் உந்தன் அழைப்புக்காக காத்துக்கிடக்குதே
உழைக்க ஆர்வம் உள்ள இந்த இளைஞரையெல்லாம் – 2
அழைத்துச்சேரும் உம்மரசை பரப்புவதற்கே
2. அறவடைக்கு அனுப்பட்டோர் அதிகமில்லையே
அனுப்பப்பட்டோர் அறுவடைக்கும் போதவில்லையே
எத்தனையோ பணிகளிலே மூழ்கி இருப்பதால் – 2
மறைபரப்புப் பணியைச் செய்ய இயலவில்லையே
3. காலநேரம் தேவை எல்லாம் அறிந்த இறைவா
துறவறத்தோர் இப்பணிக்கு துணையாய் வந்திட
தந்தருளும் ஆற்றல்மிக்க இல்லறத்தோரை – 2
உம்மரசாம் மீட்புப்பணி முழுமை எய்திட