அன்புள்ள தேவன்
உன்னோடு இருக்கின்றார்
அணைத்து அணைத்து
நடத்தியே சென்றிடுவார்
கலங்காதே திகையாதே
கண்மணிபோல் உன்னை காத்திடுவார்-2
1. பாசமா ய் உன்னை பார்த்திடுவார்
பரிசுத்தமாக்கி நடத்திடுவார்
2. வியாதியில் சுகத்தை பெற்றிடுவாய்
துன்பத்தில்இன்பம் அடைந்திடுவாய்
3. கடன் தொல்லை கஷ்டங்கள் மாற்றிடுவார்
கீழாக்காமல்மேலாக்கி நடத்திடுவார்
4. சத்துருவை கீழாக்கி முடக்கிடுவார்
சாபம் நீக்கி சந்தோசம் தந்திடுவார்