அன்பிதோ! அன்பிதோ!
அன்பிதோ! என்னை
அணைத்தீரரசே.. அருளாலே
1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை
நீக்கியதும் கிருபை
நாசமணுகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே
2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்து
என்னை தமக்காய்
மீறிப் போகும் எந்தன்
சிந்தை அகற்றிதம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே
3. ஆவியீந்து எந்தன் காயம்
தன் பரிசுத்தாலயமாய்
ஆதிதேவன் என்னைச்
சொந்தமாக்கிக் கொண்டார்
என்ன பேரின்பமெனக்கே
4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில்
யானும் நடத்த
தூய கீதமுடன் தூயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே
5. உம்மைச் சந்தித்திட தூயா உம்
சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும்
உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும்