ஆ இன்ப நேசர் இயேசுவின்
அதிசய அன்பிதாம்
பார்த்திடாயோ கல்வாரியில்
1. பாவ உலகத்தின் காட்சி
பார்த்தே மனம் பதைத்துருகி
எந்தனை மீட்கவே சொந்த உதிரத்தைச்
சிந்தி மீட்டவரே – ஆ, ஆ
2. நாடிய உமதன்பில் தவறேன்
தேடிய நன்மையை மறவேன்
பாடியே தோத்திரம் கோடியுகங்களாய்
ஏற்று வேனுமக்கே – ஆ, ஆ
3. ஆத்தும வேதனையாலே
அழுதே புலம்பிய தூயர்
ஆவலுடன் சேரும் தேசமதிலுமென்
பங்கை ஈந்திட்டீரே – ஆ, ஆ
4. ஓட்டம் ஜெயத்துடன் ஓடி
ஒளியாம் ஜீவனே சுவைப் போல்
வீசும் ஒளியதில் வீரமாய் நடந்தோர்
கிரீடம் சூடிடுவார் – ஆ, ஆ
5. மாறாத அன்பின் சொரூபி
மாவாதையாலெமை வென்றீர்
கொல்கதாவில் ஜெயம் அல்லேலூயா துதி
ஆசை நேசருக்கே – ஆ, ஆ