ஆசை மணாளனே ஆமேன் நீர் வாருமே
ஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே
ஓ! ஓ! வேகம் வாருமே
எம் கர்த்தனே நீர்
ஆ, ஆ ஆவல் பெருகுதே
அல்லேலூயா கீ;தங்கள்
பாடி பறந்து செல்வோமே
2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்
சித்திர தையலாய் யேசுடை அணிந்தவர்
3. பிதாவின் நாமமே நெற்றியில் அணிந்தவர்
புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறார்
4. குற்றம் குறைகளும் மற்றும் கரைகளும்
அற்ற மகிமையை பெற்ற சபையதோ
5. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதே
பொற்பரன் இயேசுவை கண்டு களிக்கவே
6. பரிசுத்த ஆவியால் மறுரூபமாகியே
திரியேக தேவனை சேவிக்க நித்தியமாய்