ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோப்பின் தேவரீரே
உம் நாமத்தோடடே என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்
1. தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயை கட்டினீரே (2)
தேவாதி தேவன் நீர் வாழ்க
இராஜாதி ராஜன் நீர் வாழ்க (2)
2. சாத்ராக் மேசாக் ஆபேத்நேகோவை
அவியாமல் அக்கினியில் காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்
3. எரியும் முட்செடியின் நடுவினிலே
அற்புதக் காட்சியை தந்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க