இதோ ஒரு திறந்த வாசல்
உனக்காக எனக்காக இயேசு தருகிறார்
ஒருவரும் பூட்ட முடியாது – இதை
ஒருவரும் பூட்ட முடியாது
1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட
2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட
3. கிராமமெல்லாம் வீதியெல்லாம் சென்றிட
இயேசுவின் ஊழியத்தை செய்திட
4. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட
5. தேசத்திலே அக்கினி ஊற்றப்பட
நீயும் நானும் அக்கினியாய் மாறிட