இயேசு இருக்கின்ற போது
உனக்கென்ன உள்ளத்தில் மனக்கவலை
துன்பங்கள் உனக்கு வரலாம்
துயரங்கள் தொல்லை தரலாம்
அன்பாய் நேசித்த எவரும்
உனக்கு எதிராய் மாறலாம்.
1. உனக்குள்ள பாரம் சுமப்பவர்யாரோ
உன்னைத் தன் தோளினில் சுமந்தது யாரோ
உலகத்திலே உள்ள உயர்ந்தோரை காட்டி
உனக்குள்ள இருக்கின்ற இயேசுவே போதும் போதும்
2. யாருமில்லாத அனாதை நான் என்று
யாரிடமும் போய் சொல்லாதே இன்று
யாரிருந்தாலும் பயம் ஒன்றும் இல்லை
இயேசுவைத் தவிர துணை யாருமில்லை
3. கடந்ததை எண்ணி கலங்கிட வேண்டாம்
நடப்பதை நினைத்து அழுதிட வேண்டாம்
உயிர் தந்த இயேசுன்னை கை விடுவாரோ
உனக்காக மரித்தவர் உi;னை மறப்பாரோ