இயேசு என் நேசர் சாரோ
இயேசு என் நேசர்
சாரோனின் ரோஜா
ஊற்றுண்ட தைலம்
அவர் நாமம்
1. காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
களைத்த நேரத்தில் கர்த்தரின் சமூகம்
அவரின் நிழலில் தங்கியே மகிழ்வேன்
மதுரக்கனி தருவார் – 2 – இயேசு
2. மரணம் போலவர் நேசம் வலியதே
அக்கினித் தழலாம் அவரின் நேசமே
அணைப்பதில்லையே திரண்ட தண்ணீரும்
ஆஸ்தியும் இணையில்லையே – 2 – இயேசு
3. வருத்தம் பாடுகள் வேதனை சகித்தே
வாசனை வீசிடும் தூபஸ்தம்பமிவர்
வேகமே வருவார் மேகங்களுடனே
நேசரை சேர்த்திடுவோம் – 2 – இயேசு
4. மேனியில் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரமாயிரம் பேரில் சிறந்தவர்
பூரண ரூபமும் இன்பமுமானவர்
முற்றிலும் அழகுள்ளவர் – 2 – இயேசு