இயேசு தான் பதிலும் காரணமும்
என்னை நேசித்துக்
காத்திடும் கர்த்தரவர்
1. வழித் தப்பிப் போன பாவி என்னை
கரம் கொண்டழைத்த கர்த்தரவர்
சிலுவையிலே தான் மரிக்க
தம்மை எனக்கு தந்தனரே – 2
2. கவலையாய் கண்ணீர் சிந்தும் போது
கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ
கல்வாரியின் அன்பை எண்ணி
களிப்புடனே நான் பாடிடுவேன் – 2
3. தூரமாய் போனத் துரோகி என்னை
தூக்கி எடுத்தார் தூய தேவன்
துதித்திடுவேன் பணிந்திடுவேன்
தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை – 2
4. வந்திடும் எந்த பாவியையும்
வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்
வந்திடும் இந்நேரமே
வா என்றழைக்கும் மீட்பரண்டை – 2