இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்மா நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே- சரணம் (3)
2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே- சரணம் (3)
3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கிறேன்-சரணம் (3)
4. உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்-சரணம்(3)
5. அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்- சரணம் (3)