இயேசு ராஜன் வந்துவிட்டார் – நாம்
கூடும் இந்த இடத்திலே
ஒசன்னா ஒசன்னா (2)
1. இருளான உன்வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்
2. சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக் கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும் சாபங்களெல்லாம்
பயந்து ஓடிடுதே
3. அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கர்த்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே
4. ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனைலாய் நாழும் கொழுந்துவிட்டெறிய
அக்கினி இறங்கிடுதே
5. ஆசீர்வதிக்கும் கரங்களே
நம் சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகழும்பெலனும்
பாய்ந்து வருகின்றதே
6. துதிகளின் நடுவில் வசிப்பவர்
இப்போ நமக்குள்ளே வந்து இருக்கிறார்
ஒரு மனமாய் நாம் ஆவியில் நிறைந்து
கர்த்தரை துதித்திடுவோம்