இயேசுவின் நாமத்தினால் ஒரு
அற்புதம் உனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால் ஒரு
புது வாழ்வு உனக்கு திறக்கும்
1. தூதர்கள் சேனை இறங்கும்
ஒரு யுத்தம் உனக்காய் நடக்கும்
சிலுவையின் வெற்றி யாவும்- உன்
சொந்தமாய் வந்து சேரும்
2. சூழ்நிலை உனக்காய் மாறும் – நீ
சந்தித்த தோல்விகள் மறையும்
சத்துருக் கோட்டை விழுந்திடும்- நீ
ஜெபித்தது வந்து சேரும்
3. மூடிய கதவு திறக்கும்
முன் நிற்கும் தடைகள் விலகும்
இருளின் நாட்கள் நீங்கும்
மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும்