இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
வல்லமையுள்ளது, வல்லமையுள்ளது – 2
1. இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்கள்
கூடிடும் போது வந்திடுவாரே
ஜெபத்தை கேட்பாரே – இயேசு
2. கேளுங்கள் கொடுக்கப்படும் இயேசு உரைக்கின்றார்
எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய்
இயேசுவின் நாமத்தினால் – இயேசு
3. வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேயும்
இரட்சிக்க வல்ல நாமம்
வேறில்லை இயேசுவின் நாமமே – இயேசு
4. பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள்
முடங்கும் நாமம் அதிகாரமுள்ள
இயேசுவின் நாமமே – இயேசு
5. சப்பாணி நடக்கச் செய்யும் குருடர் காண செய்யும்
மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும்
இயேசுவின் நாமமே- இயேசு
6. சாத்தான் எதிர்த்தாலும் சதி பல செய்திட்டாலும்
சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும்
இயேசுவின் நாமமே – இயேசு