இயேசுவின் நாமமே!
கிறிஸ்தேசுவின் நாமமே!
வானம் பூமிதனில்
மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே!-இயேசு
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. மாந்தர் போற்றும் நாமம் – விண்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் -இயேசுவின்
2. பாவம் போக்கும் நாமம் – தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவனருளும்
ஈடில்லாத நாமம் – இயேசுவின்
3. பேய் நடுங்கும் நாமம் – கடும்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் -இயேசுவின்
4. இனிமை தங்கும் நாமம் – தீய
இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லா நாமமே -இயேசுவின்
5. சாவை வென்ற நாமம் – பாவ
சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே -இயேசுவின்