இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனய்யா
என்னை மன்னியும் தெய்வமே (2)
துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப்போனேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
அநியாயம் செய்தேன், கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனய்யா
என்னை மன்னியும் தெய்வமே (2)