இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? – எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் ப+வுலகில்?
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்