இயேசுவைப்போல் அழகுள்ளோர்
யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை
காண்பதுமில்லை
பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன்
வாழ்க்கையதில் – நீரே போதும் வேறே
வேண்டாம் – எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை
விட்டிட மாட்டேன்
2. சம்பூரண அழகுள்ளோர் என்னை ஷ
மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
3. எருசலேம் குமாரிகள் எந்தனை
வளைந்தோராய் – உம் மேல் உள்ள எந்தன்
அன்பை நீக்க முயன்றார் – பூரண
4. லோக சுகமேன்மை எல்லாம் எந்தனைக்
கவர்ச்சித்தால் – பாவ சோதனைகளெல்லாம்
என்னை சோதித்தால்- பூரண
5. நீர் மேல் மோதும் குமிழியைப்
போல் மின்னும் ஜட மோகமே
என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
6. தினந்தோறும் உம்மில் உள்ள
அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே