இராஜாதி இராஜாவைப் போற்றிப் பாடுவோம் – இயேசு
இராஜன் தேவராஜியத்தை நாமும் தேடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. பறவைகளைப் பாரு அவைகள் விதைப்பது மில்லை
பசிக்காக் களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும்
நீதியையும் தேடு அவைகள் கூடவருமே
2. கவலைப் படுவதாலே உங்கள் சரீர அளவினை
கூட்டிடவோ குறைத்திடவோ உன்னால் முடியுமா
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும்
நீதியையும் தேடு அவைகள் கூடவருமே
3. என்ன உண்போம் என குடிப்போம்
எப்படி உடுத்துவோம் என்று
அஞ்ஞானிகளைப் போல் அலைந்து திரியாதே
இன்று பூத்து நாளை மறையும் புல்லை காப்பவர்
உன்னை காக்க மறப்பாரோ உன்னில் கவலை ஏன்
4. நாளை என்று நாளைக்காக கவலைப்படாதே
நாளை நமக்கு உரியதல்ல பெருமை கொள்ளாதே
முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும்
நீதியையும் தேடு அவைகள் கூடவருமே