இராஜ தூதுவர்கள் புதுப்பார்வை பெற்றவர்கள்
கண்டோம் கேட்டோம் அறிந்தோம் உணர்ந்தோம்
வாழ்ந்து அனுபவிப்போம் புது இராஜ்ஜியம் அமைக்கின்றோம்
இயேசுவை உயிராய் நேசித்து வாழ்வோம்
தேவனைப் பணிவாய் சேவிக்க விரைவோம்
வேதத்தைக் கருத்தாய்க் கைக்கொண்டு வளர்வோம்
ஆழத்தை ஆழம் கூப்பிடக் காண்போம்
உலகம் எமக்கு சாட்சிக் கூண்டு
உயிர்த்தெழுந்தவர் வல்லமை உண்டு
விரைந்து செல்வோம் தீவிரம் கொண்டு
இணைந்து சொல்வோம் ஐக்கியத்தோடு.