இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2
மரணப் பள்ளத்தாக்கில் நான் கடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார்
அலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார்