இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே இயேசு நாமமே!
பாவம் போக்க வந்த நாமம் இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம் இயேசுவின் நாமமே
நேற்றும் இன்றும் மாறா நாமம் இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம் இயேசுவின் நாமமே
ஜீவ பாதை காட்டும் நாமம் இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம் இயேசுவின் நாமமே
சாவு பயங்கள் நீக்கும் நாமம் இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம் இயேசுவின் நாமமே
தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே
தேவநீதி நிறைந்த நாமம் இயேசுவின் நாமமே