இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த
தெய்வமே – எங்கள் சேனாதிபதியாய்
எங்கள் முன்னே செல்லுமே – இஸ்
2. உம்மை நம்பி உம்மை சார்ந்து உம்மை
மகிமைப்படுத்தவே அடியார் தொடுக்கும்
வேலையை நீர் ஆசீர்;வதிக்க வேணுமே – இஸ்
3. ஸ்நானகன் யோவானோடேசு ஸ்நானம் வாங்கும்
வேளையில் – வந்தமர்ந்த வான் புறாவே!
வாரும் இந்த நேரத்தில் – இஸ்
4. அன்று நூற்றிருபது பேர் சென்றதோர் மேல்
வீட்டினில் – வந்தமர்ந்த வான்அக்கினியே!
வாரும் இந்த நேரத்தில் – இஸ்
5. சமுத்திரத்தை இரண்டாக பிளந்த எங்கள்
தெய்வமே – உலர்ந்த தரையை எங்களுக்காய்
செய்ய வேணுமே – இஸ்
6. ஆறு லட்சம் இஸ்ரவேலர் அப்பம் தண்ணீர்
குறைவில்லாமல் – நாற்பதாண்டு வனாந்திரம்
நடத்தின எம் தெய்வமே – இஸ்
7. யோசுவாவின் போர்க்களத்தில் வீரனாய் முன்
நின்றவர் – சந்திர சூர்ய மண்டலங்கள்
தரித்து நிற்கச் செய்தவர் – இஸ்
8. ஏழை எலியாவின் மேலே வல்லமையாய்
நின்றவர் – பாரில் பாகால் கோபுரங்கள்
அழித்துப் போடும் தெய்வமே – இஸ்
9. ஆதிக் கிறிஸ்து சீஷர் முதல் இன்று வரை
பக்தரை – ஆசீர் வதித்து வல்லமையால்
ஆளும் எங்கள் தெய்வமே – இஸ்
10. புதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள
வருவாரே – புதிய எருசலே மீதில்
ஏழைகளைச் சேருமெ – இஸ்