இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்
Merry Merry Christmas
Happy Happy Happy Christmas-2
இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே
சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிப+ரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
ப+லோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே