உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும்
உந்தன் மகத்துவத்தின் மேன்மையுடன்
உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும்
உயர் பெலத்தினால் எம்மை நிரப்பிடும் – 2
1. சர்வத்தையும் கீழ்ப்படுத்தும் வல்லமை
இன்னும் அளிக்க வல்ல நாயகனே
சகலமும் செய்தோராய் தைரியமாய் நின்றிட
சத்துவம் தாரும் ஐயனே -2
2. மரித்தோரை எழுப்பிடும் மா வல்லமை
எங்கள் மத்தியில் நீர் விளங்க செய்வீர்
சோரும் மண் சரீரம் உள்ளம் உயிர்த்திட
தாரும் நின் அபிஷேகமே – 2
3. மாராவின் நீர் இனிக்க செய்த நீர்
சுவை மாற்றினீரே கானாவின் நீர்
பாழும் என் குணமும் ஆக்கிட திவ்யமாய்
ஆட்கொள்ளும் சக்தியுடனே – 2
4. மெல்கிசேதக் முறைமையிலே வந்த நீர்
நித்திய ஆசாரியராய் விளங்குகிறீர்
காலை பனி சமம் உம் யௌவன ஜனம்
பாரில் நீர் பிறக்க செய்வீர் – 2
5. சாலேமில் ராஜரீகம் செய்குவீர்
நீதி ஓங்கிட உம் ராஜ்யமெங்கும்
ராஜாக்கள் பிரமிக்க ஜாதிகள் நடுங்க
சீயோனை சிறக்கச் செய்வீர் – 2