உம் சமூகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமூகம் வந்து நிற்கிறேன்
உம் சாயலாக மாறத்தானை யா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கிறேன்
1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் உந்தன் சுவாசம் என க்குள் வைத்தீர்
உம் சாயலாக தானே என்னை உண்டாக்கினீரே
உம் ரூபமாக தானே என்னை உருவாக்கினீர்
2. அனை த்தையும் ஆளுகை செய்ய என்னை படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதேன்றீர்
உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததாலே – நானே
சாபமாகி போனே ன் தேவ சாயலை இழந்தேன் நானே
3. சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை
என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்
என் அக்கிரமங்கள் ஏற்றீர் என் மீறுதலை சுமந்தீர்
என்னை சாயலாக மாற்ற உம் ஜீவனை யும் தந்தீர் – இயேசுவே
4. குமாரனின் சாயலுக்குள் ஒப்பாயிருக்க
முன்குறித்தீரே என்னை தெரிந்து கொண்டீரே
என்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே
உந்தன் மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரும் நீரே