உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா
அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்
கருவில் என்னை சுமந்ததைப்பார்த்தா
அம்மான்னு கூப்பிடுவேன்
தோள் மேலே சுமந்ததைப்பார்த்தா
உம்மை அப்பான்னு கூப்பிடுவேன்
என்னை கொஞ்சுவதை கெஞ்சுவதைப்பார்த்தா
உம்மை அம்மான்னு கூப்பிடுவேன்
என்னைஆற்றுவதை தேற்றுவதை பார்த்தா
உம்மை அப்பான்னு கூப்பிடுவேன்
2. கண்ணீரை துடைச்சதை பார்த்தா உம்மை
அம்மான்னு சொல்லுவேன்
விண்ணப்பட்தை கேட்டதை பார்த்தா உம்மை
அப்பான்னு சொல்லுவேன்
என்னை ஏந்துவதை தாங்குவதை பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லுவேன்
உங்க இரக்கட்தை உருக்கத்த பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லுவேன்