உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் அதிசய மானதே!
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே!
1. என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர்
என் நினைவுகளையும் தூரத்தில் அறிவீர்
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
என் தேவனே அவை யாவும் அறிவீர்
2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலைப்போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என் மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே
3. என்னைச் சோதித்து அறிந்துகொள்ளுமே
வேதனைவழி – என்னின்று அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட