உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை
மாண்டதில்லை மாண்டதில்லை
1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும்
தொல்லைகள் என்னை அணுகி வந்தாலும்
காக்க வல்லவர் காக்க வல்லவர்
காக்க வல்லவர் காக்க வல்லவர் – (உம்மை)
2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்சியுற்றாலும்
பங்கம் வராதென்னைக் காத்திடுவீரே
ஓங்குவீர் பெலன் ஓங்குவீர் என்னை
தாங்குவீர் துயர் நீக்குவீர் (உம்மை)
3. நிறுத்திடுவீர் என்னை களங்கமில்லாமல்
பொறுத்து என் குறைகள் யாவையும் அகற்றி
காப்பீரே என்னை காப்பீரே
சுத்தம் செய்வீரே முக்தி சேர்ப்பீரே – (உம்மை)
4. தாரகைப் போல் இலங்கின சுத்தர்
பாதை விட்டோடி மறந்து விட்டாலும்
பாதைக்காட்டவும் பாதுகாக்கவும்
பாதம் சேர்க்கவும் வல்லவர் – (உம்மை)
5. மாட்சியிலே இன்றும் வந்திடுவீரே
மகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே
மன்னவர் நீரே வல்லவர்
இன்றும் நல்லவர் என்றும் நல்லவர் – (உம்மை)