உலகோர் உன்னை பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா 2
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? 2
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்?
2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா? 2 – உனக்காக
3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்க்கிறார் பாவ புல்வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயா 2 – உனக்காக
4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? 2 – உனக்காக
5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக 2 – உனக்காக