எந்தன்தந்தை இயேசுவே எனக்காய் ஜீவன் தந்தீரே
உமக்காய் வாழ என்னையும்
அர்ப்பணிக்கின்றேன் நான்
அல்லேலூயா அல்லேலூயா – 3
எந்தன் தந்தையே – 2
மாராவின் நீரை மதுரமாய்
மாற்றின எங்கள் கர்த்தரே
எந்தன் வாழ்வின் கசப்பினை நீக்கும் தந்தையே
– அல்லேலூயா அல்லேலூயா
ஆறுதல் அளிக்கும் அன்பினால்
காயப்பட்ட கரங்களில்
தூக்கி என்னை சுமப்பாரே எந்தன் தந்தையே
– அல்லேலூயா அல்லேலூயா
ஆபத்துக்காலத்தில் என்னையும்
நோக்கி கூப்பிடு என்றீரே
கூப்பிட்ட என்னை விடுவித்தீர் எந்தன் தந்தையே
– அல்லேலூயா அல்லேலூயா
தாய் மறந்தாலும் உன்னையும்
நான் மறவேனே என்று சொன்னீரே
உள்ளங்கையில் வரைந்தீரே எந்தன் தந்தையே
– அல்லேலூயா அல்லேலூயா
சிலுவையில் சிந்தின இரத்தத்தால்
என்னையும் மீட்ட இரட்சகா
உமக்காய் ஊழியம் செய்வேனே எந்தன் தந்தையே
– அல்லேலூயா அல்லேலூயா