1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி,
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே;
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.
3. அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியாய் ஈவார்;
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்.
4 / 5
ஓ பெத்லெகேமே சிற்றூரே
4. வேண்ட நற் சிறு பாலரும்
இத் தூய பாலனை,
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை;
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவை பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.
5 / 5
ஓ பெத்லெகேமே சிற்றூரே
5. பெத்லெகேம் தூய பாலனே,
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழா தன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen