பிளவுண்ட மலையே 1. பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே, பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். 2. எந்தக் கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே; கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்; பாவம் நீங்க மாட்டாதே; நீரே மீட்பர் இயேசுவே. 3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்; உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே; தூய ஊற்றை அண்டினேன், தூய்மையாக்கேல் மாளுவேன். 4. நிழல் போன்ற வாழ்விலே, கண்ணை மூடும் சாவிலே, கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில், பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.