விண் மோட்ச வீட்டிலே;
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.
2. பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே;
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ!
3. பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில், நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ் வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.
4. பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை;
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.