1. அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவை துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுற வாடவும்
2. இதைப் போன்றொரு அருணோதயம்
எமை சந்திக்கும் மனமே
ஆ! என்ன ஆனந்தம் ஜோதி சூரியனாம்
எந்தன் நேசர் எழும்பும் நாள்
3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாமேசு காருண்யம்
ஒவ்வொன்றாயிதை தியானஞ் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்
4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்
பூமி விட்டுமே போய் விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரை துதிப்போம்
5. நான் நிர்வாணியாய் வந்த வண்ணம்
நிர்வாணியாயங்கு போகின்றேன்
கூடச் செல்லவும் பூவி லொன்றுண்டோ
நாடிப் போமந்த நாட்டிற்கே
6. ஆ! என் நேசரின் அன்பையெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆயென் நேச ரோர் நவ வான் புவி
தானஞ் செய்வதே ஆனந்தம்
7. பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாரிவர் கானகந்தனில்
எந்தன் நேசரின் கூடச் செல்கின்றேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்
8. கொண்டல் மோதும் வறண்ட நாடதில்
அன்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாரேனென் துக்கம்