அன்பரின் நேசத்தைக் கண்டேன்
அளவில்லா ஆனந்தம் கொண்டேன்
நான் பாடுவேன் நான் போற்றுவேன்
நல்லவர் இயேசு என்று
-அன்பரின்
1. சொந்த பந்தங்கள் வெறுக்கின்ற போது
சோதனையாலே நான் சோர்கின்ற போது
தஞ்சம் எங்கே நான் செல்வேனே என்று
தவிக்கையில் என் இயேசு என்னைத் தேடிவந்தார்
– அன்பரின்
2. யாருமில்லா அனாதை நான் என்றேன்
யார் என் கண்ணீரை துடைப்பார்கள் என்றேன்
என் மகனே என்றென்னேசு வந்தார்
என் கரம் பிடித்து மார்போடு அணைத்தார்
– அன்பரின்
3. கஷ்டப்படுவோர்க்கு துணையாரோ என்றேன்
கடின வியாதிக்கும் சுகம் யாரோ என்றேன்
உலகில் இருப்போனிலும் உன்னில் இருக்கும் – நானே
கர்த்தர்; பரிகாரி என்றேன்
– அன்பரின்