இயேசுவின் அன்பு அற்புதமே – (3)
இயேசுவின் அன்பு ஆச்சரியமே – (3)
1) ஆண்டுகள் பலவாய் ஆதரித்தார்
வேண்டும் பல நன்மைகள் புரிந்தார்
மீண்டும் இந்நாளில் நல் ஆசீர்பெறவே
வேண்டிடுவோம் அவர் பாதம் வீழ்ந்து
2) பஞ்சம் பசியில் பாதுகாத்தார்
மிஞ்சும் நோய்கள் பல தவிர்த்தார்
நஞ்சுகவலையில் மூழ்காமல்
நெஞ்சம் தளரா திடனளித்தார்
3) வஞ்சகன் வெஞ்சமர் புரிந்திடினும்
அஞ்சாமல் வென்றிட அருகில் நின்றார்
சஞ்சலங்கள் நெஞ்சில் நின்று வருத்தாமல்
தஞ்சம் தந்தே எமைத் தாங்கினாரே
4) பாதைகள் நன்மையாய் அமைந்திடவே
நாதனே நாள்தோறும் அருள்புரிவீர்
வேகமாய் வாருமே ஆவலைத் தீருமே
ஏங்கிடும் மாந்தரை சேர்த்திடுமே