இன்று கிறிஸ்து இரட்சகர் பிறந்தார்
என்று தூதன் சாற்றிடவே
அன்று மாத்திரமல்ல அந்த சந்தோஷம்
இன்று வரையும் நமக்கு உண்டே
அவர் நாமம் அதிசயமானவர்
அவர் எந்தன் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா
சமாதானப் பிரபு இவரே
1. மரியாளும் ஸ்திரீகளுக்குள்ளே மிக
ஆசீர்வதிக்கப்பட்டாள்
கிருபை பெற்ற மாதே வாழ்க என்றே
வாழ்த்தினான் ஓர் தூதன் வந்தே
2. வழி தப்பி சிதறி அலைந்தோம்
வழி காட்டி நடத்தி சென்றார்
நல்ல மேய்ப்பன் இயேசுவின் குரல் கேட்டோம்
நித்திய ஜீவன் நமக்களித்தார்
3. பெத்லகேம் ஓர் புண்ணிய ஸ்தலமே
பரன் இயேசு அதில் பிறந்தார்
மேய்ப்பன் கூட்டம் வான சாஸ்திரிகளும்
மேசியாவை தொழுதனரே
4. பாவ சாபம் ரோகங்கள் தீரும்
பரன் பாதம் பணிந்திடுவோம்
சிறு பிள்ளையைப் போல தாழ்த்திடுவோம்
மறுபிறப்பை நமக்களித்தார்
5. ஏழை ஆயர் குடியில் பிறந்தார்
எளிமையாய் ஜீவித்தவர்
ஏசு போல நாமும் மாறிடுவோம்
இது நமது நம்பிக்கையே