Church Day
தொழுகை முறைமை
வரவேற்புரை
தந்தை, மைந்தர்,தூய ஆவியாருக்கு மாட்சிமை உண்டாவதாக.
கஞ்சிக்குழி திருச்சபை கடவுள் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை இன்று 203-வது சபை நாள் விழா சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும் அனைவரையும் அன்பினால் இறையாளுகைக்குள்
ஒன்றிணைக்கும் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
(அனைவரும் எழுந்து கடவுளைப் போற்றுவோம்)
துதிப்பாடல் :
1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
இயேசுவே இந்நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ! இன்ப இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும்போது வருவார்
வாக்கு போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
ஆ! இன்ப இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
தொழுகைக்கு அழைப்பு :
பண்டைய நாட்களை நினைத்துப் பாருங்கள்; பல தலைமுறையின் ஆண்டுகளை கவனித்துப் பாருங்கள்; உங்கள் தந்தையிடம் கேளுங்கள்; அவர் உங்களுக்கு அறிவிப்பார்;
பெரியோரிடம் கேளுங்கள்; அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள்.
கழுகு தன் கூட்டின் மேல் அசைந்தாடித் தன் குஞ்சுகளின் மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போலும், கடவுள் ஒருவரே
நம்மை வழிநடத்தினார்; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். வாருங்கள், தாழ் பணிந்து அவரைத் தொழுவோம்.
நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
இறைவேண்டல் :
திருச்சபையை திருமைந்தர் இயேசுவின் இரத்தத்தால் மீட்டு இறையுறவில் வாழ செய்கின்ற அன்பும், ஆற்றலும் மிகுந்த கடவுளே! கஞ்சிக்குழி திருச்சபையின் 203-ம் ஆண்டு
நிறைவு சபைநாளினை நினைவு கூர்ந்து உம்மைத் தொழுதுக்கொள்ள தந்த நல்ல தருணத்திற்காகவும், உம் பேரருளுக்காகவும் உம்மை போற்றுகிறோம். நாங்கள் நெறி தவறி
தடம்புரண்ட நிலைகளை உணர்ந்து வாழ்வில் திருப்பமடையவும், உம் திருக்கரங்களிலிருந்து இந்நாள் வரை பெற்றுக்கொண்ட அருள் வளங்களுக்காக நன்றி செலுத்தவும், தூய
ஆவியாரின் ஆலோசனைப்படி சான்றுடன் வாழ்ந்திட அர்ப்பணிக்கவும், இத்தொழுகையினூடாக எங்களை ஒருமுகப்படுத்தியருளும். இத்தொழுகையில் உம் உடனிருத்தலை
நிறைவாக புரிந்து கொள்ள அருள் தாரும். கிறிஸ்து இயேசுவின் வழியாக வேண்டுகிறோம்.ஆமென்.
பாடல் :
கீர்த்தனை : 19
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை
வாசித்து வாசித்துப்
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னறச்
செப்பின தேவ பரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
வழுத்தின அன்பை விழித்து தியானித்துப்
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
தொலையில் கிடந்த புறச்சாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
3. எத்தனை தீர்க்கர்,அநேக அப்போஸ்தலர்,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
எத்தனை வேண்டுமோ
அத்தனையும் தந்திங்
கித்தனையாய்க் கிருபை
வைத்த நம் கர்த்தனைப்
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
பிழை உணர்வதற்கான அழைப்பு :
தூய்மையை நாடுங்கள்; தூய்மையின்றி எவரும் கடவுளை காணமாட்டார் என கடவுள் உரைக்கிறார். பாவமற்றவரும் தூய்மையுடையவரும், மன்னிக்கிறவருமாகிய
மீட்பின் கடவுள் முன் நாம் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம். நம்முடைய செயல்களெல்லாம் அழுக்கான ஆடைகளைப் போலாயின. நம்முடைய தீச்செயல்கள்
காற்றைப்போல், நம்மை அழைத்து செல்கின்றன. நம் பாவங்களே நம்மை நியாயம் தீர்க்கின்றன என்பதை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்போம்.
(நாம் முழங்காற்படியிட்டு நமது பாவங்களை அறிக்கை செய்வோமாக)
பிழை உணர்தல் :
நடத்துநர் :
திருச்சபையை அடித்தளமாகக் கொண்டு நற்செய்தியின் தகவுகளான அன்பு, நீதி, இரக்கம், சமத்துவம், பகிர்வு இவைகளைப் பெற்றோம். மற்றவர்களுக்கு இவைகளைப்
பகிர்வதில் தவறினோம். தவறறிந்து மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.
சபையார் :
திரம் கொண்டாவி வரங்கொண்டுய்யச்
சிறுமை பார்,ஐயா
ஏழை வறுமை தீர் ஐயா
இரங்கும், இரங்கும் கருணை வாரி
யேசு ராஜனே பாவ நாச நேசனே
நடத்துநர் :
வாழ்வின் ஆதாரங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம் இவைகளை மாசுப்படுத்தி இயற்கையின் சமநிலையினை சிதைத்துப் போட்டோம். இயற்கையோடுள்ள உறவினை
அழித்து வியாபார நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இவைகளால் உடல் நலக்குறைவுகள் ஏற்பட நாங்கள் காரணமானோம். எங்கள் தவறறிந்து மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.
சபையார் :
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன்,
மிகப் பயந்து சாகின்றேன்
இரங்கும், இரங்கும் கருணை வாரி
யேசு ராஜனே பாவ நாச நேசனே
நடத்துநர் :
உறவே செல்வம் என்பதை நாங்கள் அறிந்திருந்தும் பகை, விரோதம்,விட்டுக்கொடாமை, சுயநலம், அநீதி, அவசரம், கீழ்படியாமை இவைகளுக்கு துணை நின்று ஆபத்துக்கள்,
அழிவுகள் இவைகளோடு கைகோர்த்து நின்றோம். தவறறிந்து மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.
சபையார் :
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்துகேள் ஐயா
தயை புரிந்து மீள் ஐயா
இரங்கும், இரங்கும் கருணை வாரி
யேசு ராஜனே பாவ நாச நேசனே
பாவமன்னிப்பின் உறுதி : பேராயர்
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ எவருடைய பாவம் மறக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீயச் செயலை எண்ணவில்லையோ,
எவரது மனதில் வஞ்சகமில்லையோ, அவர் பேறு பெற்றவர். புது வாழ்வு பெற வேண்டும் என பாவங்களை அறிக்கை செய்திருக்கும் அன்பரே, தீங்குக்கு மனஸ்தாபப்படும்
நமது ஆண்டவர், உங்கள் அனைத்து பாவங்களையும் மன்னித்து புது வாழ்வும், புதுப் பொலிவும் தந்து அருள்புரிவாராக ஆமென்.
பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட நாம், இறைவனின் கரங்களில் பெற்று வரும் நன்மைகளுக்காக நன்றி செலுத்துவோம்.
நன்றி மன்றாட்டு :
நடத்துநர் :
கஞ்சிக்குழி சேகர திருச்சபையின் 203-வது சபை நாள் விழாவை காணவும், நற்செய்தியை அநுபவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நல் அனுகூலங்களை
வழங்கிய கடவுளே! எங்கள் திருச்சபை நிறுவப்பட உம் வார்த்தைகளால் எம்மை சாரமேற்றிய எங்களுடைய முன்னோர்களுக்காகவும், அவர்களின் நற்பணிகளுக்காகவும்,
அதன் வழியாக நாங்கள் பெற்ற ஆன்மீக சமூக பொருளாதார வளர்ச்சிகளுக்காகவும், பல நிலைகளில் திருச்சபை வளர இறை பணியாற்றிய முன்னாள்
திருப்பணிவிடையாளர்களுக்காகவும், சபை மூப்பர்கள், இறைமக்கள் அனைவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
நடத்துநர் :
நாம் பெற்றுள்ள நல்வாழ்வு சுகம்பெலன், இயற்கையின் அனுகூலங்கள் இவைகளை எண்ணி படைப்பாளராகிய இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக.
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
நடத்துநர் :
வாழ்வியல் தேவைகளை நாம் பெற்றிட இறைவன் தந்திருக்கும் குடும்பம், குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கைத்துணை, அருங்கொடைகள்
இவைகளுக்காக நன்றி செலுத்துவோமாக.
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
நடத்துநர் :
இறைவன் தருகின்ற உறவுகள், உதவிகள், அறநெறி போதனைகள், அருட்பணிகள், அருட்பணியாளர்கள் இவர்களுக்காக நன்றி செலுத்துவோமாக
சபையார் :
அல்லேலூயா ஒசன்னா
நடத்துநர் :
விடுதலை வாழ்வுக்காக இறைவன் தந்த திருச்சபை, திருமறை, விண்ணரசின் காட்சி, நிலைவாழ்வின் நம்பிக்கை இவைகளுக்காக நன்றி செலுத்துவோமாக.
சபையார் :
அல்லேலூயா ஒசன்னா
(நம்முடைய நன்றிகளை ஒன்றுதிரட்டி தாவீது அரசனின் நன்றி வேண்டலை ஏறெடுப்போம்)
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி;அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்.
வரவேற்புரை : சபை செயலர்
சிறப்பு பாடல் : பாடகர் குழு
அன்பின் விதை விழுந்த மண் இது
ஆவியின் தென்றல் வீசும் நிலம் இது
நூற்றாண்டுகள் சாட்சி சொல்லும் ஆலயம் இது
கஞ்சிக்குழி சேகர சபை ஆண்டுவிழா நாள் இது!
ஒன்றிணைந்து நாமெல்லாம் பாடுவோம்
உயர்ந்த நம் பாரம்பரியம் போற்றுவோம்
1. றிங்கல் தௌபே விதைத்த விதை இது
வேதமாணிக்கம் வளர்த்த பயிர் இது
செபஞானம் ஜெபித்த புனித மண் இது
ஆபிரகாம் உழைத்த திருத்தலம் இது
2. வேத வெளிச்சம் ஜொலித்த ஸ்தலம் இது
ஆவியின் கனிகள் விளைந்த மண் இது
தியாகத்தின் கண்ணீர் நனைந்த நிலம் இது
தேவ அன்பின் தோட்டம் மலர்ந்தது இது
3. ஒலைக்குடிலில் உதித்த ஒளி இது
சேகரமாய் உயர்ந்த சபை இது
கிளைச் சபைகள் குலுங்கும் கனிகள் இது
கிறிஸ்துவின் ராஜ்யம் விரிந்தது இது
4.தேவதாசர் நடந்த தடம் இது
தேவவாக்கு விதைத்த களம் இது
மறையொளியால் மலர்ந்த தேசம் இது
மக்கள் மனம் மாற்றிய இறைஇல்லம் இது
5. கிளைகள் பலவும் தழைத்த மரம் இது,
கிறிஸ்துவின் அன்பைச் சுமக்கும் கரம் இது:
தலைமுறை தோறும் துதிக்கும் சபை இது.
தேவன் காத்த உடன்படிக்கையின் மண் இது.
6. கேட்ட வசனம் வாழ்வின் வழி இது,
கிருபை நிரம்பும் ஜீவநிதி இது:
பகையை மறக்கும் பரிசுத்த சபை இது,
பாசம் மலரும் தேவக் குடும்பம் இது.
7. வாழ்க வாழ்க சபை போதகர்கள்
வாழ்க வாழ்க சபை மூப்பர்கள்
வாழ்க வாழ்க திருச்சபை மக்கள்
வாழ்க இயேசு கிறிஸ்துவின் நாமம்

திருமறை பாடங்கள் :
முதல் பாடம் :
ஏசாயா : 44 : 22 - 26
22. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல
மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
24. உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய்
வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
25. நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.
26. நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும்,
கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
இரண்டாம் பாடம் :
அப்போஸ்தலர் : 2 : 1 - 14
1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும்,
இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13. மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே,
நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
மூன்றாம் பாடம் :
மத்தேயு : 16 : 13 - 20
13. பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,
பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
19. பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்,
பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20. அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
இடையீற்று மன்றாட்டு
நடத்துநர் :
நம் வாழ்வின் ஓர் நல்ல ஆயராக இருந்து வழிநடத்தி நன்மைகளையும், இறையாசிகளையும் நிறைவாகத்தரவும், நாம் இறைவனோடு இணைந்து வாழ்ந்து நற்கனிகளை
உலகிற்கு கொடுக்கவும், வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் உம் மடியில், மாண்டாலும் உம் திருவடியில் எனும் ஒப்படைப்புடன் வாழவும் இறைவன் அருள்தர மன்றாடுவோம்.
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நடத்துநர் :
நம் திருச்சபைக்காக, நமது சேகரத்திற்குட்பட்ட சபைகளுக்காக இறைப்பணியாளர்களுக்காக, சபைக்குழு உறுப்பினர்களுக்காக, இறைமக்களுக்காக,
எல்லா திருச்சபையின் திருப்பணிகளுக்காகவும், ஏழைகள், கைம்பெண்கள், வறுமையில் இருக்கிறவர்கள், கைவிடப்பட்டவர்கள், உடல்நலக் குறைவுடன் இருக்கிறவர்கள் வாழ்வு பெறவும் இறைவனிடம் மன்றாடுவோம்.

அனைத்துத் திருச்சபைக்களுக்காகவும், தென்னிந்திய திருச்சபைக்காகவும், நமது பேராயத்திற்காகவும், நமது பேராயர் The Rt. Rev. Dr. S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்களுக்காகவும்,
ஆயர்கள், திருப்பணிவிடையாளர்கள், தலைவர்கள், இறைமக்கள் அனைவருக்காகவும், பேராயத்தின் கீழ் இயங்கி வரும் எல்லா நிறுவனங்களும் இறையரசின் தன்மைகளை இந்த மண்ணில் வெளிப்படுத்தவும் இறைவனிடம் மன்றாடுவோம்.
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
நடத்துநர் :
நம் நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பதுக்கி வைத்தல், ஊழல், பிறர்நலம் பேணாமல் இருத்தல், எளியவர்களை ஓரம் கட்டுகிற நிலை;
இத்தகைய தீமைகள் நீங்கிடவும், நம் நாட்டில் நீர் ஆதாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எல்லா மக்களுக்கும் சமநிலையில் பகிரப்படவும், அனைத்து மக்களின்
உரிமைகள் பாதுகாக்கப்படவும், நற்செய்தியால் புதிய சிந்தனைகள், புதியன படைத்தல், உண்மை, நீதி, நேர்மை ஆகியன தழைத்திடவும் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

நலிவற்றுக் கொண்டிருக்கும் விவசாயம் பாதுகாக்கப்படவும், இயற்கையின் நல் ஈவுகளுக்காகவும் மன்றாடுவோம். உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற பெருந்தொற்று,
போர் அபாயங்கள், வன்முறை, இயற்கையின் சீற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற அசாதாரண நிலைகள் அகன்றிடவும்,
நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதங்கள், வன்முறைகள் ஒழித்திடவும், தேசத்தை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளை களைந்து நல்லாட்சி
செய்யவும் இறைவா உம்மிடம் மன்றாடுவோம்.

அனைத்து ஆற்றல் நிறைந்தவரே; எங்கும் நிறைந்தவரே; அனைத்தையும் அறிபவரே ;இவ்வேளையில் நாங்கள் ஏறெடுத்த மன்றாட்டுக்களை ஏற்று
ஆசிகளை அருளுமாறு ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
அருளுரை ஆயத்தப்பாடல்:
ஞானப்பாடல் : 347
1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் க்றிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்,
சபை ஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும் !
3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்,
உள்ளானவரின் த்ரோகம்
கிலேசப்படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
"எம்மட்டும்" என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.
4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தைப்
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.
அருளுரை: The Most Rev. Dr. G தேவகடாட்சம்
(முன்னாள் C.S.1. பிரதம பேராயர் & முன்னாள் பேராயர் C.S.I. கன்னியாகுமரி பேராயம்)
பற்றுறுதி அறிக்கை:
வானத்தையும், பூமியையும்,காணப்படுகிறதும், காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய, ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன், அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே,
தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜேதியானவர், மெய்தேவனில் மெய் தேவனானவர், உண்டாடக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர்;
பிதாவோடே ஒரே தன்மையுடையவர்; சகலத்தையும் உண்டாக்கினவர், மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியினாலே,
கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் பண்ணப்பட்டார். வேதவாக்கியங்களின்படி,
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே
திரும்ப வருவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத்தொழுது ஸ்தோத்திரிக்கப்படுகிறவருமாய்
தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.
பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
திருமுழுக்கு :
இறைப்பணிகொடை நேரம் :
இறைவேண்டல் :
அறிக்கை வாசித்தல் : சபை செயலர்
அறிவிப்புகள்
வாழ்த்துரை
நன்றியுரை & பரிசு வழங்குதல்
திருவிருந்து ஆராதனை தொடரும்:
பாடல் :
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
1. உலகைத் தந்தவா
உடலைத் தந்தவா
உயிரைத் தந்தவா
உணவைத் தந்தவா(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
2. உறவைத் தந்தவா
உரிமை தந்தவா
உறவை இழந்தும்
உணர்வில் நின்றவா(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
3. உண்மை உலகே
உருவில் இலங்க
உந்தன் உடலே
உருகச் செய்தவா(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
4. உயிரோடெழுந்தே
உலகை வென்றவா
உயிருக்குயிராய்
உள்ளுறைபவா(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
5. உந்தன் உடலாய்
உடையும் அப்பத்தை
உம் உதிரமாய்
ஊற்றும் இரசத்தை(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
6. உம் உணர்வில்
எம் கண் திறந்தே
உம் போல் என்றுமே
உலகைக் காணுவோம்(2)
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
அப்பம் பிட்குதல்
(எல்லோரும் எழுந்து நிற்க, குரு சொல்வது)
இதோ,சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும், எவ்வளவு இன்பமுமானது (சங்கீதம் : 133:1)
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்கு பெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும், ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.(1 கொரிந்தியர் : 10:17)
நான் அவருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளையிட்டு ஆண்டவரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன் (சங்கீதம் : 27.6)
இறைமக்கள்:
இயேசுவே, உத்தம பிரதான ஆசாரியரே, நீர் உமது சீஷர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்ததுபோலவே எங்கள் மத்தியிலும் பிரசன்னமாகி, அப்பத்தைப் பிட்கையில்,
எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியகுளும். நீரே பிதாவோடும், பரிசுத்த ஆவியரோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிறீர், ஆமென்.
ஆயர்
ஆண்டவரே, பரிசுத்த பிதாவே, சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, நாங்கள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறது தகுதியும் நீதியும்
எங்களுக்கு விசேஷித்த கடமையுமாயிருக்கிறது.
உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் வானங்களையும், பூமியையும் அவைகளிலுள்ள
எல்லாவற்றையும் சிருஷ்டித்தீர்,
மனிதனையும் உமது சாயலாக உண்டாக்கினீர். அவன் பாவத்தில் விழுந்த போது புது சிருஷ்டியின் முதற் பலனாக நீர் அவனை மீட்டுக்கொண்டீர்.
இறைமக்கள்:
ஆதலால் தூதரோடும் பிரதான தூதரோடும் பரம் சபையனைத்தோடும் நாங்களும் உமது மகிமையுள்ள நாமத்தை புகழ்ந்து மேன்மைப்படுத்தி சேனைகளின் கர்த்தராகிய
தேவனே நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதமானவராகிய தேவரீருக்கே மகிமை உண்டாவதாக
என்று இடைவிடாமல் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் ஆமென்.
கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும் வருகிறவருமானவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்தில் ஓசன்னா.
ஆயர் :
ஆம் பிதாவே! நீர் பரிசுத்தர், நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். தேவரீர் மனிதரில் உருக்கமாய் அன்புகூர்ந்து உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து எங்கள்
தன்மையைத் தரித்துக்கொள்ளவும், சிலுவையில் மரித்து எங்களை மீட்டுக் கொள்ளவும், அவரைத் தந்தருளினீரே, அவர் சிலுவையில் ஒரே தரம் தம்மைத்தாமே ஏக பலியாக
ஒப்புக்கொடுத்துச் சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்வதற்கு நிறைவும், பூரணமும், போந்ததுமான, பலியையும் காணிக்கையையும் பரிகாரத்தையும் செலுத்தினதுமல்லாமல்,
தமது அருமையான மரணத்தை என்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து நாம் திரும்ப வருமளவும், நாங்கள் அதை அனுசரித்து வரும்படி தமது பரிசுத்த
சுவிசேஷத்தில் கட்டளையிட்டருளினாரே;
அவர் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு,சீஷர்களுக்குக் கொடுத்து, நீங்கள் வாங்கிப் புசியுங்கள்.
இது உங்களுகாகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். அப்படியே போஜனம் பண்ணி பின்பு, அவர் பாத்திரத்தையும் எடுத்து,
ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லோரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும்.
அநேகருக்காகவும், சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம், இதைப்பானம் பண்ணும்பொழுதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
என்று திருவுளம் பற்றினார்.
இறைமக்கள்:
இந்தச் சாக்கிரமெந்தின் மூலம் உமது மரணத்தை நினைவு கூருகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பி வரக் காத்திருக்கிறோம்.
கிறிஸ்துவே உமக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.
ஆயர் :
இரக்கமுள்ள பிதாவே. நாங்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம் கிறிஸ்துவினுடைய
இரத்தத்தின் ஐக்கியமாயுமிருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும், திராட்சரசத்தையும் உமது பரிசுத்த ஆவியினால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று
மிகுந்த தாழ்மையோடு மன்றாடுகிறோம். நாங்கலொரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்களாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும்.
தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும். அவரோடும், பரிசுத்த ஆவியரோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு, அவர் மூலமாய் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக ஆமென்.
(எல்லோரும் முழங்காலில் நின்று சற்றுநேரம் அமைதியாய் இருந்து பின்வரும் மனத்தாழ்மையின் ஜெபத்தை ஏறெடுப்பர்)
இறைமக்கள்:
இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி, நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத் துணியாமல், தேவரீருடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம்.
உம்முடைய மேஜையின் கீழ் விழும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள்பாத்திரர் அல்ல, ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ் செய்கிற லட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர்,
ஆகையால், கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும், இரத்தத்தாலும், எங்கள் பாவமுள்ள சரீரமும்,
ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்ற விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து,
அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.
ஆயர் :
நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறதல்லவா? (1 கொரிந்தியர் : 10:16)
இறைமக்கள் :
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, உமது சமாதானத்தைத் தாரும்.
ஆயர் :
கர்த்தருடையவைகள் கர்த்தரின் பிள்ளைகளுக்கே! கர்த்தரின் பந்தி உங்களுக்காய் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள்! கர்த்தர் உங்களைப் பந்திக்கு அழைக்கிறார்.
(சபையார் இப்பொழுது நற்கருணை பெறுவார்கள்)
ஜீவ அப்பமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம். மெய்யான திராட்சையாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம்.
(எல்லோரும் பங்கு பெற்றபின் சபையார் முழங்காலில் நிற்க குரு சொல்லுவது)
ஆயர் :
கிறிஸ்துவின் சரீரமும், இரத்தமுமாகிய சாக்கிரமெந்தை விசுவாசத்தினால் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.
இறைமக்கள்:
சர்வ வல்லமையுள்ள கடவுளே, பரமபிதாவே, உமது நேச குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள், எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு,
அவருடையை விலைமதியாத திருசரீரமும் இரத்தமுமாகிய ஞான ஆகாரத்தால் எங்களைப் போஷித்திருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து, நித்திய அளவிடப்படாத
இந்த நன்மைகளுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். சரீரமும் ஆத்துமாவுமாகிய எங்களை, பரிசுத்தமும் ஜீவனுமுள்ள பலியாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
இதுவே நாங்கள் செய்யத்தக்க ஆத்மீக ஆராதனை, நாங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவரீருடைய நன்மையும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று
பகுத்தறியத்தக்கதாக எங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகும்படி எங்களுக்கு அருள்புரியும். கடைசியில் நாங்கள் உமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்
உமது நித்திய ராஜ்யத்தின் ஆனந்தத்தை அடையத்தக்கதாக, இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க எங்களுக்குக் கிருபை செய்யும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
ஒரே கடவுளாய் சதாகாலமும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் இவைகளை வேண்டிக்கொள்கிறோம்.
எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.
ஆயர் :
எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடே இருந்து, நீங்கள் கடவுளையும், அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிவிலும்,
அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காக்கக்கடவது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய
ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
நிறைவு பாடல்:
ஞானப்பாடல் : 416
எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாகும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா!
பொல்லாப்பைப் போக்கும் பேர்மன்னா!
பல்கோடி நன்றி பூரணா!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா!
ஆயர் :
ஆண்டவர் உங்களோடுகூட இருப்பாராக.
இறைமக்கள் :
அவர் உங்களோடும் உங்கள் திருப்பணியோடும் கூட இருப்பாராக.
ஆயர் :
சமாதானத்துடன் சென்று வாருங்கள்.
இறைமக்கள் :
ஆண்டவரின் திருப்பெயராலே ஆமென்.
ஆண்டறிக்கை
"பூர்வ நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாகச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார், உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்,
உன் மூப்பர்களைக் கேள் அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்" (உபா. 32:7)
திருச்சபை வரலாற்றுச் சுருக்கம்:
கஞ்சிக்குழி சேகர திருச்சபை தென் திருவிதாங்கூரின் முதல் மிஷனெறி அருள்திரு. உல்லியம் தொபியாஸ் றிங்கல் தௌபே ஐயர் அவர்களிடம் மயிலாடிக்கு சென்று
திருமறை போதனைபெற்று எழும்புதலடைந்த திருவாளர்கள் ஆபிரகாம், வேதமாணிக்கம், செபஞானம் முதலிய முற்பிதாக்களால் ஆயனிவிளை வீட்டில் 1823-ம் ஆண்டு ஆரம்பமாயிற்று.
திரு. ஆபிரகாம் டீக்கனார் நன்கொடையாக கொடுத்த பூமியில் சபை பெரியவர்களுடன் திரு. சாந்தமுடையான் டீக்கனாரும் இணைந்து கட்டிய முதலாம் ஓலைப்புரை ஆலயம்,
1825-ம் ஆண்டு அருள் திரு. சார்லஸ் மீட் ஐயர் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது. திரு. யோவான் டீக்கனார் அன்பளிப்பாக கொடுத்த பூமியும், 400 பணமும், வார்ப்பு
ஒன்றும், திரு. V. செல்லையன் அவர்கள் அன்பளிப்பாக கொடுத்த பூமியும் திருச்சபையின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமைந்தது. நெய்யூர் சேகர போதகர் அருள் திரு. பேலீஸ் ஐயர்
காலத்தில் இச்சபை கோடியூர் சர்க்கிளின் கிளைச்சபையாய் இணைந்தது.
1946-ல் நமது திருச்சபை சர்க்கிள் உரிமை பெற்றதோடு மருதூர்குறிச்சி, காட்டாத்துறை, பாத்திரமங்கலம். நங்ஙச்சிவிளை, குழிக்கோடு ஆகிய திருச்சபைகள் கஞ்சிக்குழி
சர்க்கிளின் கிளை சபைகளாயின.
1948 ஜனவரி முதல் பணியாற்றிய திரு. சைமன் திருப்பணியாளர் காலத்தில் 50 அடி நீளம் 25 அடி அகலம் கொண்ட "T" வடிவ ஆலயத்திற்கு முன்னாள் பேராயர்
உயர்மறை திரு. லெக் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அருள் திரு. G. தேவதாசன் அவர்கள் தலைமையில் செயலாற்றிய சபைக்குழுவால் கட்டப்பட்ட இந்த ஆலயம் அப்போதைய
பேராயர் உயர் மறைதிரு. I.R.H. ஞானதாசன் அவர்களால் பிரதிஷ்டை பண்ணப்பட்டது.
மறைதிரு. A. டேனியல் அவர்கள் பணி காலத்தில் 1 ஏக்கர் 7 சென்று பூமி ஆலயத்தின் கிழக்குப்பகுதியில் வாங்கப்பட்டது. தபால் அலுவலகம் ஒன்றும் கிணறு ஒன்றும்
அமைக்கப்பட்டன. மறைதிரு. A. ஈனோஸ் அவர்கள் பணி காலத்தில் மேலும் 80 சென்று பூமி ஆலயத்தின் கிழக்கு பகுதியில் வாங்கப்பட்டது. அன்றைய நிலவரப்படி
ரூ. 80,000/-மதிப்பீட்டிற்கான மின்சார பணிகள் சபை பகுதிகளிலும் ஆலயத்திலும் நிறைவேற்றப்பட்டன.
1959 ஜூன் 2-ம் நாள் கன்னியாகுமரி மறைமாவட்டம் உருவாகி ஆயர் மண்டலங்கள் அமைக்கப்பட்டபோது நமது கஞ்சிக்குழி திருச்சபையும் 1960 ஜூன் மாதம்
ஆயர் மண்டல உரிமை பெற்றது.
21-06-1972-ல் நமது பாடசாலை நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. 26-01-1972-ல் செல்லங்கோணம் ஆலத்துறை சாலையும், புதிய நடுநிலைப்பள்ளி கட்டிடமும் அன்றைய
பேராயர் உயர் மறைதிரு. I.R.H ஞானதாசன் அவர்கள் தலைமையில், சபை போதகர் மறைதிரு. A. ஈனோஸ் அவர்கள் முன்னிலையில் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. A.P. முத்துசுவாமி I.A.S. அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. இந்த தடத்தில் ஒரு பேருந்தும் இயக்கப்பட்டது. 21-07-1979-ல் ஆலய கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு
அருள்திரு அறிவர் சாமுவேல் அமிர்தம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1-2-1990 முதல் நமது திருச்சபை சேகர சபையாக உயர்வு பெற்றது. 17-06-1990-ல்
முதலாம் ஆயர் இல்லம் முன்னாள் பேராயர் பேரருள்திரு. G.கிறிஸ்துதாஸ் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. 27-07-1994 அன்று சமூக நலக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு
தரைதளம் முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. முதல் மாடி கட்டி முடிக்கப்பட்டு 11-01-2003 அன்று அப்போதைய பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A.,B.D., M.Th.
அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது. நமது ஆலய விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் 07-09-2003 அன்று அப்போதைய பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th.
அவர்களால் நாட்டப்பட்டு 120 அடி நீளம் 60 அடி அகலம் உள் அளவு கொண்ட ஆலயமும், கோபுரமும், வஸ்திராலயமும் கட்டப்பட்டு 30-12-2007 அன்று அப்போதைய மதிப்பிற்குரிய
பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th. அவர்களால் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. ஆலயக் கட்டிடத்தின் தரைப்பணிகள், மின்சாதனங்கள்
நீங்கலாக 54,05,841 ரூபாய் 45 காசுகள் ஆலய கட்டுமான பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆலய அர்ப்பணத்தினத்தன்று சுமார் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஒலி
அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் 5,83,000 செலவில் தேக்குமரத்தாலான 110 பெஞ்சுகள் வாங்கப்பட்டன. திருச்சபையின் உபயோகத்திற்காக ரூபாய் 2,07,500
விலையில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டு ரூபாய் 21,442 செலவில் அதற்கான மேடை மற்றும் தேவையான இணைப்புகள் அமைக்கப்பட்டு சேகரத்துப் போதகர் Rev. R. ஜஸ்டஸ்
அவர்களால் 05-07-2009 அன்று காலை ஆராதனையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய உபயோகத்திற்காக கணிணி, CPU, UPS ஆகியவை திரு. G. ஜெயதாஸ் தோட்டத்துவிளை
அவர்களால் வாங்கி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இந்திய வேதாகமச் சங்கத்தின் கிளை நமது சபையில் 14-06-2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அதனை
திருமதி. சாந்திபா ஜெயதாஸ் அவர்கள் பொறுப்பேற்று நடத்தி வந்தார்கள். நமது ஆலயத்திலிருந்து போதகர் இல்லம் செல்ல உரிய வழிபாதை இல்லாதிருந்த நிலையில்
தேவனுடைய பெரிதான கிருபையால் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி 12 அடி அகலமுள்ள சாலை ஆலய வளாகத்திலிருந்து போதகர் இல்ல வளாகம் வரை 05-07-2009
அன்று சபைக்குழு மற்றும் சபை மக்களால் அமைக்கப்பட்டது.
கொண்டான்குழி சாலையுடன் ஆலய வளாகம் மற்றும் மிஷன் வீட்டு வளாக சாலையை இணைக்க போதிய வழிஇல்லாதநிலையில் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி
26-07-2009 அன்று அச்சாலை அமைக்கப்பட்டது.
16-08-2009 அன்று நமது சபையில் ஆண்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆலய முன்புற மைதானத்தை சரி செய்யும் விதத்தில் 2009-ம் ஆண்டு ரூபாய் சுமார் 2 லட்சம் செலவில்
குறுக்கு தடுப்பு சுவர் எழுப்பி, மண் நிரப்பி மைதானம் சரி செய்யப்பட்டது.
ஆயினிவிளை பகுதியில் பழுதுபட்ட பழைய போதகர் இல்லம் இருந்த இடத்தில் அதனை அகற்றிவிட்டு இரண்டாம் போதகர் இல்லம் கட்டுவதற்கான பணிகள் 28-09-2009
அன்று ஆரம்பிக்கப்பட்டு போதகர் இல்ல கட்டிடம் மற்றும் நாற்புறமும் மதிற்சுவர் ஆகிய பணிகள் ரூபாய் பதினாறு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று ஐந்து
(16,62,605) செலவில் செய்து முடிக்கப்பட்டு மரியாதைக்குரிய அப்போதைய துணை பிரதம பேராயர் அவர்களால் 01-08-2010 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.
சபை குடும்பத்தினரின் திருமண தினத்தன்று அவர்தம் இல்லத்திற்கு போதகர் சென்று ஜெபித்து ஆசீர் வழங்கும் திட்டம் 01-01-2010 முதல் ஆரம்பிக்கப்பட்டது.
ரூ. 90,900 செலவில் நமது திருச்சபை வளாகத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு 15-8-2010 அன்று அர்ப்பணம் செய்யப்பட்டது.
ஆலய கட்டிடத்தில் முடிக்கப்படாமலிருந்த சுவர் மற்றும் கதவு ஜன்னல்களுக்கு சாயம் பூசும்பணி ரூ. 4,88,213 செலவில் 1-11-2010 அன்று ஆரம்பித்து செய்து முடிக்கப்பட்டது.
சபைக்குழு சார்பில் கப்பியறை பேரூராட்சியை அணுகி, கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கொண்டான்குழி ஆலய வளாகம் போதகர் இல்லம் இணைப்பு சாலை
கப்பியறை பேரூராட்சியால் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு 30-1-2011 அன்று அன்றைய கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு P. தேவராஜ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
நமது சபையை அடுத்த இலுப்பக்காவிளையில் ஒரு ஆலயம் கட்டும் முயற்சியாக ரூ. 5 லட்சம் செலவில் 10 சென்று இடம் கிரயம் செய்யப்பட்டது.
நமது சபையில் 24-03-2011 அன்று தையல் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டது. 12-6-2011 அன்று சமூக செயல்பாட்டுகுழு அமைக்கப்பட்டது. ரூ. 56,790.50 செலவில்
முதலாம் போதகர் இல்லபராமரிப்பு பணிகள் 25-4-2011 அன்று ஆரம்பிக்கப்பட்டு செய்து முடிக்கப்பட்டன ஆலய கோபுர பராமரிப்பு வசதிக்காக ரூ. 75,000
செலவில் ஏணி மற்றும் சுற்று தளம் அமைக்கப்பட்டது.
திருச்சபை மக்களின் வசதிக்காக சபைக்குழு சார்பில் கப்பியறை பேரூராட்சி தலைவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆலயவளாக கிணற்றில்
ஒன்றும் வடக்கு காட்டுவிளை பகுதியில் ஒன்றுமாக இரண்டு சிறுமின்விசை மேல் நிலை நீர் தொட்டிகள் ரூ. 1,80,000 செலவில் பேரூராட்சியால் அமைக்கப்பட்டு
28-8-2011 அன்று அன்றைய கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு. P. தேவராஜ் அவர்களால் போதகர்கள், சபைமக்கள் முன்னிலையில் இயக்கிவைக்கப்பட்டது.
சபை மக்களின் முக்கிய தேவையான கழிவறை ரூ. 2,31,788 செலவில் கட்டப்பட்டு சேகரத்து போதகர் அருட்திரு R. ஜஸ்டஸ் அவர்களால் 4-9-2011 அன்று சபை மக்கள்
முன்னிலையில் அர்ப்பணம் செய்யப்பட்டது.
திருச்சபையின் குடும்பங்களுக்குள்ளும் குடும்பங்களுக் கிடையேயும் உறவுகளை மேம்படுத்தி அதன்மூலம் திருச்சபை தேவனுக்கு சாட்சி பகரும் விதத்தில் குடும்பவிழா
என்னும் புதிய நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு திருச்சபையின் முதல் குடும்பவிழா 13-09-2009 அன்று நடத்தப்பட்டது.
திருச்சபை வளர்ச்சியின் ஒரு மயில் கல்லாக நமது சபை சார்பில் DMPB பணிக்களம் ஒன்று அமைப்பதென முடிவு செய்து, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம்
நரிப்பள்ளி என்ற இடத்தில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் செலவில் 22 சென்று நிலம் 22-02-2010 அன்று கிரயம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்ட 27-06-2010 அன்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணியாக ரூபாய் 50,000 செலவில் மதிற்சுவர் கட்டப்பட்டது.
இடம் கிரயத்திற்கும் மதிற் சுவர் கட்டுவதற்குமான முழுதொகையையும் மனமுவந்து நன்கொடையாக கொடுத்த முன்னாள் செயலர் திரு. தங்கையா மற்றும் அவரது
குடும்பத்தினருக்கு திருச்சபை நன்றி பாராட்டுகிறது. மேலும் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் 01-08-2010 அன்று அன்றைய துணை பிரதம பேராயர்
பேரருட் திரு. G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th. அவர்களால் நாட்டப்பட்டது.
மேற்படிபணிக்களத்தில் ஆலய அஸ்திபார பணிகள் 22-11-2010 அன்று ஆரம்பிக்கப்பட்டன. ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் 22-11-2010 அன்று
பொருத்தப்பட்டு ஆழ்குழாய் கிணறும் மோட்டாரும் அர்ப்பணம் செய்யப்பட்டன.
8-8-2011 திங்கட்கிழமை அன்று சேகரத்து போதகர் Rev. R. ஜஸ்டஸ் அவர்களால் உதவி ஊழியர் திரு மார்ட்டின் ஜெபலால் மற்றும் சபைக்குழுவினர் முன்னிலையில் தலைவாசல்
அமைக்கப்பட்டு கட்டிடபணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலயத்தின் வெளிப்புற பூச்சுவேலைகள் நீங்கலாக கட்டுமானபணிகள் மற்றும் போதகர் தங்கும் இல்ல பணிகள்
முடிக்கப்பட்டு 22-1-2012 அன்று அப்போதைய தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயரும் கன்னியாகுமரி மறைமாவட்ட பேராயருமான அதி உயர்மறை
திரு. G. தேவகடாட்சம் M.A.. B.D., M.Th. அவர்களால் வீடியோ காண்பிரன்ஸிங் மூலம் அர்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணவிழா நிகழ்வுகள் நரிப்பள்ளியிலிருந்து
இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டு நமது திருச்சபை மக்கள் நமது சபையிலேயே அமர்ந்து கண்டுகளிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. தென்னிந்திய திருச்சபை வரலாற்றிலேயே
வீடியோ காண்பிரன்ஸிங் மூலம் ஆலயம் அர்ப்பணம் நடைபெற்றது. கஞ்சிக்குழி சேகர CSI திருச்சபை சார்பில் நடைபெற்ற நரிப்பள்ளி ஆலய அர்ப்பணவிழா என்பது நமது
சபைக்கு சிறப்பு சேர்ப்பதாகும். மேற்படி ஆலய கட்டுமானபணி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டார் வைத்தவகையில் ரூ. 20,44,241.50 செலவிடப்பட்டுள்ளது.
தேவ வழிநடத்துதலாலும் சபைக் குழுவின் முயற்சியாலும் கப்பியறை பேரூர் செயலர் வழக்கிறஞர் S.சுந்தர்சிங் மற்றும் கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு. P. தேவராஜ்
ஆகியோரின் பரிந்துரைகளாலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் செலவில் ஆலயத்தின் முன்புறம் வாய்க்காலின் குறுக்கே
பாலம் அமைத்து 23-12-2013 அன்று அன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. J. ஹெலன் டேவிட்சன். M.Sc. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்தும் நோக்கோடு ரூ.3,56,997/-செலவில் 1000 பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. திருமண மண்படத்தின் உட்புற கழிவறை
அமைத்தல் புதிதாக 25 சாப்பாட்டு மேஜைகள் செய்தல் மற்றும் அனைத்து சாப்பாட்டு மேஜைகளையும் Steel Plate- ஆல் Cover செய்தல் போன்ற பணிகள் ரூ. 2,14,025 செலவில் செய்யப்பட்டன.
சபை உபயோகத்திற்காக ஒரு இன்வர்ட்டர் வாங்கப்பட்டு அர்ப்பணம் செய்யப்பட்டது. சபை ஆண்கள் சங்கம் சார்பில் ரூ. 3,85,000 செலவில் ஒரு 40KVA ஜெனரேட்டர் வாங்கப்பட்டு
15-06-2014 அன்று சேகரத்து போதகர் Rev.S. ஜாண் விக்டர் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. ஆண்கள் சங்க வெளிக்கூட்ட உபயோகத்திற்காக ரூ. 1,65,000 செலவில் ஒலி,
ஒளி சாதனங்கள் ஆண்கள் சங்க செயலர் திரு. T. ராஜசேகர் முயற்சியால் வாங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. 23-02-2014 அன்று கணியாரம் பொற்றவிளை திரு. R. ஜஸ்டஸ்,
திரு. R.ரெவி குடும்ப இல்ல வளாகத்தில் வைத்து கணியாரம் பொற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க குஞ்சன்தண்டலார் நினைவாக
கட்டப்பட்ட மருதூர்குறிச்சி குஞ்சன் தண்டலார் நினைவு ஆலயம் C.S.I. சபையாக அங்கீகரிக்கப்பட்டு 29-06-2014 முதல் கஞ்சிகுழி சேகரசபையின் கிளை சபையாக இணைக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு ரூ. 48,18,365 செலவில் ஆலயத்தை சுற்றிலும் கருங்கற்களால் மதிற்சுவர் அமைத்தும், முன்புறம் கருங்கற்களாலான படிக்கட்டுகள் அலங்கார கற்தூண்கள் மற்றும்
தென்புறம் கல் சிற்பத்தோடு கூடிய தூண்களுடன் gate அமைத்தும், ஆலயத்தை சுற்றிலும் தரை செப்பனிடப்பட்டு Interlock அமைத்தும் புல்தரை மற்றும் பூச்செடிகள் அமைத்தும் ஆலய
வளாகம் அழகுபடுத்தப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பேராய அளவில் நடத்தப்படும் குழு விளையாட்டு போட்டிகள் 4-7-2015 அன்று நமது கஞ்சிக்குழி சேகரசபை வளாகத்தில்
வைத்து அப்போதைய குமரி பேராயர் உயர் மறைதிரு. அறிவர் G. தேவகடாட்சம். MA, BD, MTh, DD அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அப்போதைய
கேரள மாநில சட்டமன்ற சபாநாயகர் மாண்பு மிகு N. சக்தன், MA, LLB, MLA அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் நமது சபை HMS ஊழியர் ஒருவரை மாதம் ரூ. 4,500
கொடுத்து தாங்கிவருகிறது.
சமூக நலக்கூட கைகழுவும் இடநெருக்கடியை போக்கும் விதத்தில் நில உரிமையாளர் திரு. T. ராபின்சன் அவர்கள் 35 சதுர அடி நிலத்தை அன்பளிப்பாக தந்தார்.
சமூக நலக்கூடம் ஏற்கனவே இருந்த அளவோடு 15 அடி நீளம் கூடுதலாக விரிவாக்கப்பட்டு தரைத்தளம் மற்றும் முதல்மாடி அமைக்கப்பட்டது.
அத்துடன் சமூகநலக்கூடம் புதுசமையல் அறை, முன்புற மேல்தள கூரை, அழகுபடுத்துதல், மழைநீர் வடிகால், குளிரூட்டல், மேல்நிலைத் தொட்டி போன்ற பல பணிகள் ரூ. 77,43,525
செலவில் செய்யப்பட்டு புனரமைக்கட்டு 01-04-2018 அன்று அப்போதைய சேகரத்துப் போதகர் அருட்திரு. G.N. ராஜகுமார் அவர்களால் சபைக்குழு மற்றும் சபை மக்கள்
முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சமூக நலக்கூட புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 10,000 நன்கொடை கொடுப்பவர்களுக்கு
அவர்கள் விரும்பும் ஒரு நிகழ்விற்கு சமூகநலக் கூடத்தை வாடகையின்றி பயன்பத்தும் சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இச்சிறப்புத் திட்டத்தில் 198 பேர்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஆலயத்தில் தாழ்தளக்கூரை அமைத்தல், ஆல்ட்டர் புனரமைப்பு, புதிய மின்விசிறி அமைத்தல் மற்றும் ஏற்கெனவே இருந்த ஆலய கோபுரத்தின் முன்பு மாற்று
தோற்றச் சுவர் அமைத்தது ஆகிய பணிகள் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 04-08-2019 அன்று அப்போதைய சேகரத்துப் போதகர் அருட்திரு. Y. தேவதாசன்
அவர்கள் தலைமையில் உதவி போதகர் திரு. J. யாபேஸ் அவர்கள் முன்னிலையில் பேராயர் உயர் மறைதிரு.அறிவர் A.R. செல்லையா அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது.
உதவிப்போதகர் இல்லம் ரூ. 5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு 27-09-2020 அன்று சேகரத்துப் போதகர் அருட்திரு. Y. தேவதாசன் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது.
சினாட் மாமன்றத்தின் C.S.I. உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் தொடர் ஒளிதீபம் 13-04-2022 அன்று நமது சபையில் கொண்டுவரப்பட்டது.
14-04-2020 அன்று பேராய றாலிபெருவிழா நமது சபையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. ஆலய முன் புற மைதான கிழக்கு பகுதியில் வாய்க்கால் ஓரத்தில் மதிற்சுவர் மற்றும்
gate அமைக்கப்பட்டு 12-11-2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் சட்டசபை உறுப்பினர் திரு. J.G. பிரின்ஸ் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சம் செலவில்,
ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன் அவர்கள் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட பாலத்தின் வடபுறம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகநலப்
பயன்பாட்டிற்கான ரூ. 3,60,728/- செலவில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு 20-07-2024 அன்று சேகரத்துப் போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்களால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு சபைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. திருச்சபை அங்கத்தினர்கள் செலுத்தும் காணிக்கைகள் வரவு வைக்கப்பட்ட விவரங்களை அவரவர் கைபேசி
எண்ணிற்கு குறுஞ்செய்திமூலம் தெரிவிக்கும் சேவை 16-03-2025 அன்று சேகரத்து போதகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சேகரத்துப்போதகர் இல்ல வளாகத்தில் ரூ. 83,800/- செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு 02-04-2025 அன்று சேகரத்துப் போதகரால் சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஆலயத்தின் வடபுறமுள்ள திறந்தவெளிக் கிணற்றில் ரூ.61,600/- செலவில் மின்மோட்டார் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்பட்டு 21-05-2025 அன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ரூ. 58,000/- க்கான Inverter வாங்கி சபை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கான வருடாந்திர புத்துணர்வு நிகழ்ச்சி
நமது சபையில் 22-03-2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆலயம் மற்றும் வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 20-07-2025 அன்று சேகரத்துப் போதகரால் இயக்கி வைக்கப்பட்டது.
திருச்சபையின் ஆரம்பகாலம் முதல் இதுநாள் வரை வழி வழியாக திருச்சபையின் அங்கங்களாக தங்களை இணைத்து, கூலித் தொழில் செய்து, நெஞ்சதனை பனைமரச் செதில்
கிழிக்க பனைமரம் ஏறி பதனீர் எடுத்து, இறக்கிய பதனிதனை காய்க்க விறகின்றி, தன் மனைவி காட்டுப் புறத்துக்கு சென்று தருவைப் புல்லறுத்து சுமந்து வந்து காய்த்து
வெல்லமாக்கி, அந்திக் கடைக்கு நடந்து கொண்டு சென்று விற்று அன்றைய நாள் பசி தீர்க்க அரை வயிற்றிற்கான மரவள்ளி கிழக்கு வாங்கியும், மலை உச்சிவெயில்
உடலை அலைக்கழிக்க, தாங்க முடியாமையால் தென்னை ஓலை கிடுகு பின்னி சற்று மறைப்புக்காக முதுகுமேல் தொங்கவிட்டு காலை முதல் மாலைவரை கல் உடைத்து,
மண் வெட்டி, வயல் வெளியில் ஏர் ஓட்டி உழவு செய்து, பாக்களங்களில் பாவாற்றி, வீடுகளில் மகளிர் இராட்டையில் நூல் நூற்று, கைத்தறிகளில் நெசவு செய்து,
பனை ஓலைகளில் கடவம் என்றழைக்கப்படும் பெரிய வசை ஓலைப் பெட்டிகள், சிறு ஓலைப்பெட்டிகள் பின்னி, தென்னை ஓலை பின்னி, தென்னை பயிரிட்டு,
பசிபோக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற உணவு வகைகள், விவசாயம் செய்து தனக்கு உணவளிக்க ஆடுமாடுகளை மேய்த்து இல்லத்தில் வளர்த்து
கடினமாக உழைத்தும் அரிசி சோறதனை அவ்வப்போது கண்ணால் பார்ப்பவர்களாக அரை வயிற்றுக்குகூட உணவின்றி பதனீர் பனங்கருப்புக்கட்டி போன்றவற்றை
உணவாகக் கொண்டு, உடுக்க உடையின்றி அரைகுறை ஆடையோடு பசிதாங்க முடியாமல் அரைதனை இறுக கட்டிக்கொண்டு கேள்விக்குறிபோல் முதுகுவளைய
கடினமாக உழைத்து, கடற்கரை மணல்போல் பெருக ஓரேழிற்குக் குறையாமல் இறைவன் அளித்த பிள்ளைச் செல்வங்கள் மண் சுவர்மேல் ஓலை வேய்ந்த கூரை வீடுகளில்
மின்னொளி எப்படி இருக்குமென தெரியாமல் மண்ணெண்ணெய் விளக்கொளியில் சாணி மெழுகிய தரையில் உருண்டு புரண்டு ஒன்றாக வாழ, பழுதடைந்த ஓட்டை
ஓலைக்கூரை வழி வீட்டினுள் சூரியன் எட்டிப்பார்க்க, மழை தானும் விட்டிடாமல் உள்ளே பாய, ஒழுகும் நீரை பாத்திரத்தில் வடியவிட்டு உறக்கமின்றி ஓரமாக ஒதுங்கிப்போய்
நாட்களைக் கழிக்கும் பரிதாபத்தோடு, உடைந்துபோன ஓட்டை சிலேட்டுடன் கிழிந்து தொங்கும் அரைக்கால் சட்டை மற்றும் மேற்சட்டையுடன் கஞ்சிக்குழி
ஆரம்ப பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பி படிக்கச் சொல்லி பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாத்த நிலையிலும் தங்கள் கடின உழைப்பின் ஒரு பகுதியையும்
கோழிமுட்டை, கருப்புக்கட்டி, நெல், தேங்காய், கிழங்கு என இறைவனளித்த உழைப்பின் பலன்களுடன் ஒருகாசு, இரண்டு காசு, அரை அணா, ஐந்து காசு என திருச்சபைக்கு
காணிக்கையாக அளித்து திருச்சபையை வளர்த்ததன் பயனாக இத்திருச்சபைமூலம் பெற்ற ஆசியால் இன்று எம் சபை மக்கள் சொந்தமாக இருசக்கர,
நான்கு சக்கர சொகுசு வாகனங்கள், ஏர் கண்டிஷன் இல்லாமல் தூங்க முடியவில்லை என குளிரூட்டப்பட்ட மாட மாளிகைகள், வசதியான வாழ்க்கை,
கல்விமான்கள், அதிகாரிகள், அந்தஸ்தான பணியுடையவர்கள், உலக நாடுகளிலெல்லாம் பரவி அந்நாடுகளுக்கே வழிகாட்டுபவர்கள் என தலைநிமிர்ந்து வாழ்வதோடு
மேலாடை அணிய அனுமதியின்றி வெட்கி நாணி வேதனையில் வாழ்ந்த எம் குலப்பெண்கள் இன்று முழு நாகரீகத்துடன் சுதந்திரமாக தலைநிமிர்ந்து வாழவும்
இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை இயக்கி கெம்பீரமாக சாலைகளில் உலாவரும் கண்கொள்ளாக் காட்சி காண முடிகிறதென்றால் கிறிஸ்து
என்னும் ஜீவ ஒளியாகிய விதையை றிங்கள் தோபே போன்ற மிஷினெரிகளுடன் ஆபிரகாம், வேதமாணிக்கம், செபஞானம் போன்ற நம் முற்பிதாக்கள் ஆயினிவிளை
வீட்டில் 203 ஆண்டுகளுக்கு முன்விதைத்து அது முளைத்து நம் மூதாதையரின் வேர்வை தியாகம் என்றும் ஊட்டச்சத்துக்களால் வளர்ந்து பயிராகி பூப்புத்து, காய்காய்த்து,
கனியாகி இன்று நாம் சுவைக்கின்றோம் என்பதனை முன்னோருக்குத் தலைவணங்கி கடந்து வந்த முட்களும் கரடுமுரடானதுமான பாதைகளை இளைய தலைமுறை
அறிய சமர்ப்பிக்கிறேன்.
இன்றைய நமது திருச்சபையின் வளர்ச்சிக்கு அஸ்திபாரமாக ஆரம்ப காலம் முதல் ஆயர்மண்டில அந்தஸ்து பெறும்வரை பணியாற்றிய திருப்பணி விடையாளர்கள் திருவாளர்கள் :
செல்லக்கண், லாசர், அருமைநாயகம், சற்குணம், முத்துநாயகம், இராஜேந்திரன், உல்லியம், சாமுவேல், செல்வநாயம், தாவீது. சின்னத்தம்பி, ஆரிஸ், பொன்னையா,
மோசே, விசுவாசம், ஈசாக்கு. ஏசுதாஸ், ஜாண், மதுரநாயகம், பொன்னையா, சைமன், ஜார்ஜ் ஆகியோர்களும் ஆயர்மண்டில அந்தஸ்து பெற்றபின் பணியாற்றிய
அருட்திருவாளர்கள் : G. தேவதாசன், G. ஐசக், J. ஜோன்ஸ் ரெத்தினம், M. ராஜையன், A. டேனியல், A. ஈனோஸ், G. நெகேமியா, Y. கிறிஸ்டோபர் லேவி,
J. ஞானதாசன், S. ஆர்தர் சாமுவேல், G. தேவகடாட்சம், C. டைட்டஸ், சேகர சபையாக உயர்த்தப்பட்ட பின் சேகரத்து போதகர்களாக பணியாற்றிய அருட்திருவாளர்கள் S.P.வில்சன்,
D.M. நல்லதம்பி, A.D. ரெஜினால்ட் ஜோசப், E. சுகுமார் ஜெபசிங், S. ஐசாயா, R. ஜஸ்டஸ், S. ஜாண் விக்டர், D. ஐசக், T. ஜாண்பீட்டர், P. செல்லக்கண், G.N. ராஜகுமார்,
Y. தேவதாசன். Dr. பிரின்ஸ் வேதமாணிக்கம் ஆகியோர்களும் 01-06-1991 முதல் உதவி போதகர்களாக இருந்த திருவாளர்கள் ஜெபசுஜி, செல்வராஜ், செல்வம், ஆப்ரகாம்,
ஹென்சிலின் நேசராஜ், ஜெப ஐசக் வெஸ்லி, மார்ட்டின் ஜெபலால், சுனில் பெல்ஸ் பெல், ஜேக்குலின் ஜெகன்சிங், J. யாபேஸ் ஆகியவர்களும் முக்கிய
காரணமானவர்கள் ஆவர்.
மேற்சொன்ன திருச்சபை ஊழியர்களுடன் திருச்சபையின் ஆரம்பகாலம் முதல் தற்காலம் வரையிலும் திருச்சபையைக் கட்டி எழுப்பிப் பல முன்னேற்ற பணிகள் புரிந்து,
திருச்சபையின் வாழ்வு ஒன்றையே கருதி பல திட்டங்களை வகுத்து ஒரு மாபெரும் திருச்சபையாக நமது திருச்சபையை உயர்த்திய முன்னாள் சபைக்குழு உறுப்பினர்களான
திருவாளர்கள் : சாமுவேல், தாவீது, மோசே, யோசுவா, வேதக்கண், N. யோசேப்பு. M.யோசேப்பு. S. ராஜையா. S. நல்லதம்பி, யோவான், சின்னையன், எலியா,
யாக்கோபு, நேசமணி, V. செல்லையன், பொன்னையன், செல்லக்கண், வேதமுத்து. P. தேவகடாட்சம், G. ஞானசிகாமணி. G. ஜெயதாஸ், S. இஸ்ரவேல்,
P. ராஜையா, P. சின்னையன், Y. ஜான்றோஸ், G. முத்துநாயகம்,E. தேவராஜ், M. ராஜேந்திரன், E. ஜஸ்டஸ் சாமுவேல், C. ஜோபி பென்சாம், N. ஜாண்சன் சுதேர சுந்தரம்,
T. ஏசுதாஸ், P. தங்கையா, P. ஞானராஜ், J. ஜஸ்டின் சாமுவேல், J. லாறன்ஸ், J. அன்பையா, J. சேம் மங்கள சுகி, R. விஜயன், M. கிறிஸ்து தாஸ், A. சகரியா ஜெயக்குமார்,
N, செல்வராஜ், C. டேவிட்ராஜ், J. சோபிதராஜ், S. சுஜிர்ராஜ் Y. பாலசுந்தர் ராஜ், S. சுனில், M.ரமேஷ், J.S.ஜோஸ்ராஜ், திருமதிகள் ஸ்டெல்லா சுலோசனாபாய்,
T. மேரி பத்மா, A. சாந்தி அப்பாவு, A. மேபல் அக்லா ஆகியோரது பணிகள் திருச்சபையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது. 25-09-2023 முதல் அருட்திரு. S. பெல்சன் கிராமணி
அவர்கள் சபையின் சேகரத்து போதகராகவும் 06-05-2024 முதல் அருட்திரு. I. தங்கச்சன் அவர்கள் நமது திருச்சபையின் உதவி போதகராகவும் பெறுப்பேற்று பணிபுரிந்து
வருகிறார்கள். அவர் தம் பணிகள் இறைவனுக்கு ஏற்புடையதாக அமைய இறைவனை வேண்டுவோம்.
முன்னோர்களின் நல்வழியிலேயே 28-04-2024 முதல் சபைக்குழு உறுப்பினர்களாக பணியாற்றும் திருவாளர்கள்/திருமதி T. ஐசன், J. எலிசா ரெஜின், S. பெல்லா,
T. ராஜசேகர், J.B. ஜாண் ஜெபா, J. ராஜசேகர், I. ரூபன் ஆஸ்டின், A. பிளாட்பின், பொன். சாலமன், G. சிசில் R. ஜஸ்டின், A. ஆர்தர்லிப்னிக்ஷால்
ஆகியோராகிய எமக்கு இறைவனின் திருப்பணியை அவர் சித்தப்படி தொடர்ந்து நிறைவேற்ற சுகமும், பெலனும், ஞானமும். தேவகிருபைகளையும் கடவுள்தாமே
பொழிந்தருள இறைவனிடம் இறைஞ்சி மன்றாடி நிற்கின்றோம். மாமன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள்: E. தேவராஜ், A. சகரியா ஜெயக்குமார், T. ராஜசேகர்,
D. ரவி, S. சுனில், S. பெர்லின் ஜாஸ்பர், S. சுஜிர் ராஜ் ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக நிறைவேற்ற ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
வளர்ச்சி பணிகளோடு நின்றுவிடாதபடி எமது திருச்சபை சார்பில் நமது பேராயம் மற்றும் பல அமைப்புகள் மூலமாக மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்துவரும்
அருட்திருவாளர்கள் H. அருமை ராஜ். K.G. மோகன், A. மகேர்ஷால் அஸ்பாஸ், S. ஜஸ்டின் புஷ்பராஜ், J.S. ஜெயசிங், J. ஹட்சன், R. சுவாமிதாஸ், G. ஞானசெபுலோன்,
S. பிளசின், A. டார்வின் ரிச்சர்ட் லாஸ், மிஷினரிகளாக திருவாளர்கள் T. ஆல்வின் கிஷான்சிங், A.B. தேவ சுபிர். R. கிறிஸ்டோபர் ராஜ், S. பிபின் K. தாஸ்,
செல்வி. S. கமலபாய் ஆகியோரையும் உருவாக்கியுள்ளது. மேலும் நமது பேராயத்தின் முதல் அருட்பொழிவு பெற்ற பெண் போதகர் அருட்திருமதி. தங்க ஜாய் தேவராஜ்
அவர்கள் எமது சபையின் உறுப்பினர் என்பதும் திருச்சபைக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.
இறைப்பணியாற்றி ஓய்வுபெற்ற அருட்திருவாளர்கள் E. செல்வராஜ். T. எடிசன் ஞான ஜாண் லாஸ், Dr. விஜி தம்பி சாலமன், T. ஆஸ்டின் எட்வின் ரிச்சர்ட்,
அருட்திருமதி. தங்க ஜாய், திரு. C. டேவிட் அருள்தாஸ், திரு. G. ஐசக் ஆகியோர் நமது சபையின் அங்கங்கள் என்பது நமது திருச்சபைக்கு சிறப்பு ஆகும்.
நமது கிளை சபைகள்:
1. வண்டவிளை
நமது கிளை சபையான வண்டவிளை சபையின் ஊழியங்கள் நன்முறையில் நடைபெற்று வருகின்றன. இச்சபை மேலும் வளர்ச்சியடையவும்,
ஊழியங்கள் சிறப்பாக நடைபெறவும், ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆலய கட்டிட விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவுற்று, புது ஆலயத்தில் புதுப்பொலிவுடன் இறைவனை
ஆராதிக்கவும், விரைவில் ஆயர்மண்டலம் அந்தஸ்தடையவும், இதே ஒருமைப்பாட்டுடன் இணைந்து சபையைக் கட்ட இறைவன் கிருபை செய்ய வேண்டி வாழ்த்துகிறோம்.
2. இலுப்பக்காவிளை
21-01-2012 அன்று தற்காலிக சிற்றாலயம் அமைக்கப்பட்டு, ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 81.25 சென்ட் நிலத்தை சொந்தமாக்கி,
1-7-2015 முதல் C.S.I. குமரி பேராயத்தின் கீழ், கஞ்சிக்குழி சேகரசபையின் கிளை சபையாக அங்கீகரிக்கப்பட்ட இச்சபை, கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல்
2-8-2015 அன்று நாட்டப்பட்டு, 22-4-2018 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இச்சபையின் வளர்ச்சிக்காகவும் இறைவனிடம் வேண்டுகிறோம்.
3. மருதூர்குறிச்சி குஞ்சன் தண்டலார் நினைவு ஆலயம்
இறைவனுக்காக ரத்த சாட்சியாய் மரித்த குஞ்சன் தண்டலார் பெயரைத் தாங்கிய மருதூர்குறிச்சி சபையும், இறைவனுக்குள் எழுச்சி பெற்று வளர்வதைக்கண்டு
மகிழ்சியுறுவதோடு, இச்சபையும் ஒரு மாபெரும் ஆயர் மண்டில சபையாய் வளரவும் இறைவன் அருள்புரிய மன்றாடுகிறோம்.
4. சபை D.M.P.B. பணிகள் :
நமது திருச்சபையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி என்னும் இடத்தில் D.M.P.B. பணிக்கள ஆலயம் கட்டப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இப் பணிக்களத்தில் முதல் திருமுழுக்கு 21-05-2017 அன்று ஒரு நபருக்கு கஞ்சிக்குழி சேகரசபையின் சேகரத்து போதகர் அருட்திரு. G.N.ராஜகுமார் அவர்களால் அளிக்கப்பட்டது.
10-08-2017 அன்று 4 நபர்களுக்கு சேகரத்து போதகர் அவர்களால் திருமுழுக்கு அளிக்கப்பட்டது.
5. சபை HMS பணிகள் :
நமது சபை மாதந்தோறும் ரூ. 5,000/- கொடுத்து HMS பணிகளை தாங்கி வருகிறது.
6. நமது திருச்சபையின் இந்திய வேதாகம சங்க கிளை பணிகள் :
நமது திருச்சபையில் இந்திய வேதாகம சங்க கிளை கர்த்தரின் பெரிதான கிருபையால் 14-06-2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மொழியில் வேதாகமம் முழுமையும்
மொழிபெயர்ப்புக்கான ரூபாய் 15 லட்சத்தை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் ரூ. 16 லட்சம்
தேவைப்படுவதாக வேதாகம சங்கம் வேண்டுகோள் வைத்ததால் இறைவனின் ஆசியால் சபை மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஈகையோடு ,
சுமார் 6 வருட காலத்தில் ரூபாய் 16 லட்சமும் 6-11-2015 அன்று செலுத்த தேவன் அருள்புரிந்தார். இத்தொகை மூலம் ராபா
மொழியில் திருமறை
மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த வேதபுத்தகம் சீக்கிரம் வெளியிடப்பட சபை மக்களின் ஜெபத்தை வேதாகம சங்கம் நாடுகிறது. பிரெய்லி வேதாகமத்திற்காகவும்
ரூ. 2,92,505/- கொடுக்கப்பட்டது. இப்பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஜெபத்துடனும் செய்து வரும் பொறுப்பாளர்களையும் உற்சாகமாய் கொடுத்து
ஜெபித்து தாங்கிவரும் சபை மக்களையும் சபை நன்றியுடன் பாராட்டுகிறது.
7. நமது புதிய பணிக்களம் :
கணியாரம் பொற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை நடைபெற்று வரும் இடத்தில் மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு அந்த இடத்தை ஒரு பணிக்களமாக
மாற்றி காலஞ்சென்ற திரு. J. தங்கமணி, தெற்கு காட்டுவிளை அவர்களது நிலத்தில் திரு. T. ராஜசேகர் டீக்கனார் செலவில் ஒரு தற்காலிக shed அமைக்கப்பட்டு
1-11-2015 முதல் அந்த ஊழிய பொறுப்பாளராக திரு. V. ஜெபமணி அவர்கள் சபையால் நியமிக்கப்பட்டு திருமறைப்பள்ளியுடன் பணிக்கள ஊழியங்களும் நடைபெற்றன.
தேவனை அறியாத மக்கள் பலர் இங்கு ஆராதனையில் கலந்து கொள்கின்றனர். இப்பணிக்களத்தில் முதல் திருமுழுக்கு ஆறு நபர்களுக்கு 23-04-2017 அன்று சேகரத்து போதகர்
அருட்திரு. G.N. ராஜகுமார் அவர்களால் அளிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது. இப்பணிக்களம் மூலம் ஏராளமான ஆத்தும அறுவடை
நடைபெற இறைவன் அருள்புரிய இறைவனை வேண்டுவோம்.
இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்தி உற்சாகத்துடன் நல்ல பணி ஆற்றிய ஆண்கள் சங்கம், பெண்கள் சங்கம், பக்தி முயற்சி சங்கம், ஓய்வுநாட்பாடசாலை,
பாடகர்குழு, ஜெபக்குழு, இந்திய வேதாகம சங்க கிளை, நூலகம், வண்டவிளை கிளை சபை, இலுப்பக்காவிளை கிளை சபை, மருதூர்குறிச்சி கிளை சபை,
கணியாரம் பெற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை மற்றும் பணிக்களம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தினர்களுக்கு சபை நன்றி பாராட்டி வாழ்த்துகிறது.
நடப்பாண்டு பணிகள் :
திருச்சபை ஊழியங்கள் :
இவ்வாண்டு ஆலய ஆராதனைகள் மற்றும் இறைபணிகள் ஒழுங்காக நடைபெற்றன. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை ஆராதனை மற்றும் புதன்,
வெள்ளி இரவு ஆராதனைகள் ஒழுங்காக நடைபெற்றன. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அதிகாலை அருணோதய ஆராதனை திருவிருந்து ஆராதனையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில்
உபவாச ஜெபமும், மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் முன் இரவு விழிப்பு ஜெபமும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஞாயிறு காலை ஆராதனைக்குப்பின் Fellowship Tea வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை உபவாச கூட்டத்திற்குபின் அன்பின் விருந்தும், 3-ம் வெள்ளி முன்னிரவு ஜெபத்திற்குபின் தேனீர் மற்றும் Snacks வழங்கப்பட்டு வருகிறது.
2025 அக்டோபர் சங்கப்பண்டிகை 19-10-2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கு பெற்றவர்களுக்கு தேனீர் Snacks வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்பைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு செய்தியாளர்களைக் கொண்டு திறந்த வெளிக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
15-02-2026 அன்று கஞ்சிக்குழி C.S.I. சேகரசபையைச் சேர்ந்த 56 அங்கத்தினர்களுக்கு சேகரத்துப்போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்களால் கஞ்சிக்குழி
C.S.I. சேகரசபையில் வைத்து திடப்படுத்தல் வழங்கப்பட்டது. 2025 நவம்பர் 19 முதல் டிசம்பர் 20-ம் நாள் வரை கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப்பாடல் நடைபெற்றது.
2025 நவம்பர் 19 முதல் 23 வரை வெளியூரில் வசிக்கும் நமது சபை அங்கத்தினர்களின் இல்லங்களை சந்தித்து கிறிஸ்துபிறப்பு வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு 23-ம் நாள்
சென்னையில் வசிக்கும் நமது சபை அங்கத்தினர்களை ஒருங்கிணைத்து சென்னை நந்தனம் YMCA வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் வைத்து சிறப்பு கூடுகைநடத்தி
அன்பின்விருந்து வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பு பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் ஆராதனைகள் யாவும் நன்முறையில் நடைபெற்றன.
கிறிஸ்து பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நலிந்தோருக்கு இலவச துணிகள் வழங்கப்பட்டன. கிறிஸ்து பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நமது சபையின் 75 வயது நிரம்பிய
அங்கத்தினர்களை அவர்கள் இல்லங்களில் சந்தித்து ஜெபித்து பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
சேகர ஐக்கிய திருவிருந்து ஆராதனை நமது சபையில் 04-01-2026 அன்று நடத்தப்பட்டு நமது திருச்சபையார் மற்றும் கிளைச் சபைகளின் திருச்சபையாளர்களுக்கும் ஐக்கிய விருந்து
வழங்கப்பட்டது. ஆண்டு இறுதி மற்றும் வருட பிறப்பு ஆராதனைகளும், புதுவருட சிறப்பு ஆராதனையும், புதுவருட வார ஜெப ஆராதனைகளும் நடைபெற்றன.
புது வருட பிறப்பை முன்னிட்டு சபை குடும்பங்களுக்கு இலவசமாக நாள்காட்டி வழங்கப்பட்டது. நமது D.M.P.B. பணித்தளமான நரிப்பள்ளி பணித்தள நடப்பாண்டு சபைநாள்
விழா திரளான கஞ்சிக்குழி திருச்சபையின் மக்களுடன் சேகரத்துப் போதகர் மற்றும் சபைக்குழுவுமாக சென்று 25-01-2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. அங்குள்ள
மக்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. நமது திருச்சபை மாதந்தோறும் ரூ. 12,000/- அளித்து D.M.P.B. மூலம் 3 மிஷினரிகளை தாங்கி வருகிறது.
லெந்து கால ஆராதனைகளும், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகை ஆராதனைகளும் நடைபெற்றன. லெந்து கால சிறப்பு நிகழ்வாக லெந்து காலம் முழுவதும்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை நேரங்களில் சபைக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சிறப்பு செய்தியாளர்களைக் கொண்டு திறந்தவெளி சிறப்பு ஆராதனைகள்
நடத்தப்பட்டன. திரளாக மக்கள் கலந்துகொண்டு இறை ஆசி பெற்றுச் சென்றனர். இக்கூட்டங்களை நடந்த ஆலோசனை தந்து தலைமை தாங்கி சிறப்பாக நடத்தித்தந்த
சேகரத்துப் போதகர், முன்னிலை வகித்து சிறப்பித்த உதவிப்போதகர் மற்றும் அனைத்து திறந்த வெளி கூட்டங்களுக்கும் திருச்சபை நிதியிலிருந்து எந்த செலவும்
செய்யாமல் ஒலி, ஒளி மற்றும் இசை ஆகியவற்றை தன் சொந்த உபகரணங்களைக் கொண்டு நடத்தித் தந்த திரு. T. ராஜசேகர் டீக்கனார் மற்றும் இந்த அனைத்து
உபகரணங்களையும் எடுத்துச் சென்று எல்லா ஒழுங்குகளையும் குறித்த நேரத்தில் செய்து தரும் திருச்சபையின் தன்னார்வ குழு நண்பர்களையும் திருச்சபை வாழ்த்தி
நன்றி தெரிவிக்கின்றது. லெந்து நாட்களை முன்னிட்டு 2026 மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஆன்மீக எழுப்புதல் துறை மூலம் கஞ்சிக்குழி சேகர ஐக்கிய நற்செய்தி
பெருவிழா நமது சபையில் வைத்து சேகரத்து போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்கள் தலைமையில், உதவிப்போதகர் அருட்திரு. I. தங்கச்சன் அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது. குமரிப்பேராய ஆன்மீக எழுப்புதல் துறை இயக்குநர் அருட்திரு. லிபின்ராஜ் அவர்கள் சிறப்பு செய்தி அளித்தார்கள்.
புனித வார சிறப்பு நிகழ்வாக 01-04-2026 புதன் இரவு 'THE PASSION OF THE CHRIST' ஒலி ஒளி காட்சிமூலம் இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் காண்பிக்கப்பட்டன.
05-04-2026 அன்று அதிகாலை நடைபெற்ற உயிர்த்தெழுதல் நாள் சிறப்புத்தொழுகையில் C.S.I. கன்னியாகுமரி பேராயர் உயர்மறைதிரு. முனைவர் S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்பு செய்தி அளித்து சிறப்பித்தார்கள்.
பெண்கள் ஞாயிறு ஆராதனை, வாலிபர் ஞாயிறு ஆராதனை ஆகியவை நடைபெற்றன. நமது திருச்சபையின் ஏப்ரல் சங்க ஆராதனை 19-04-2026 அன்று சங்கப்பண்டிகை
மற்றும் அறுப்பின் பண்டிகையாக நடைபெற்றது. சங்கப்பண்டிகை நிறைவு விழா இரவு ஆராதனை சிறப்பு நிகழ்ச்சியாக பூவன்கோடு “இறைத்தென்றல்” குழுவினரின்
இன்னிலை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. பங்கு பெற்றவர்களுக்கு தேனீர் மற்றும் Snacks வினியோகிக்கப்பட்டது.
05-10-2025 அன்று நமது திருச்சபையின்
நடப்பாண்டு குடும்பவிழா நடைபெற்றது. குடும்பவிழா காலை தொழுகையில் Dr. வில்லியம் தர்மராஜா அவர்கள் சிறப்பு செய்தி அளித்தார்கள். காலை
ஆராதனையைத் தொடர்ந்து மதியம் அன்பின் விருந்தும் அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இரவு சிறப்பு நிகழ்ச்சியாக "ARMY OF JESUS" பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரவு விருந்தும் அளிக்கப்பட்டது. 10-05-2026 முதல் 17-05-2026 வரை நடப்பாண்டு VBS சிறப்பாக நடைபெற்றது. நிறைவு தினத்தன்று கலந்துகொண்ட
பிள்ளைகளுக்கு சபை சார்பில் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சபை பிள்ளைகளின் படிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் சபைக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன. மேலும் 12-ம் வகுப்பில் 500 / 600 மற்றும் 10-ம் வகுப்பில் 400 / 500 மற்றும் அதற்கு மேலும் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் அளித்து ஊக்குவிக்கப்பட்டனர்.
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாம் இவ்வாண்டு 07-03-2026 அன்று அருட்திரு. S. பெல்சன் கிராமணி
அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி தூய பேதுரு C.S.I. திருச்சபையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. நமது சபையின் மூத்த குடிமக்கள் பலர் ஆர்வத்தோடு
கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இக்கூடுகைக்கான முழுச் செலவையும் வெளிநாடுகளில் பணிபுரியும் நமது சபை அங்கத்தினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் சபை மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.
வளர்ச்சிப் பணிகள்:
1. சமூக நலக்கூட சமையலறையிலிருந்து புகை உள்ளே வருவதை தடுக்க ரூ. 91,640/- செலவில் புகையில்லா அடுப்பு அமைக்கப்பட்டு தரை செப்பனிடப்பட்டது.
2. ஆலய முன்புற மைதானத்தில் ரூ. 1,35,000/- செலவில் டிஜிட்டல் வசனப் பலகை அமைக்கப்பட்டது. முழுத்தொகையும் அன்பளிப்பாக வழங்கிய திரு. T. கிறிஸ்டோபர் ராஜ்,
மேற்குக் காட்டுவிளை அவர்களுக்கு சபை நன்றி தெரிவிக்கிறது.
3. ஆலயத்தின் வடபுறத்திலுள்ள Stage ரூ. 30,300/- செலவில் செப்பனிடப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.
4. ஆலயத்தின் உட்புற முன்பகுதியில் இருபுறமும் ஆராதனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வசதியாக இரண்டு டிஜிட்டல் பலகைகள் ரூ.5,50,000/- செலவில் அமைக்கப்பட்டன.
5. C.S.I. நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனைக்கு Linear Accelenator வாங்க ரூ. 5,50,000/- வழங்கப்பட்டது.
6. சிறு குழந்தைகளுக்கு மகளிர் பாலூட்ட வசதியாக பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு 19-07-2026 அன்று திருச்சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
7. திருச்சபையில் ஏற்கெனவே 28-04-2024க்கு முன் உள்ள திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையில் இவ்வாண்டு ரூ.11,85,350/- சம்மந்தப்பட்டவர்களுக்கு திருப்பி செலுத்தப்பட்டது.
சேவைத் திட்ட பணிகள்:
1. நலிவடைந்த நிலையிலுள்ளோர், நலிவடைந்த நிலையில் மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் நலிவடைந்த சிறுவர்கள் என 49 பேருக்கு மாதந்தோறும் மொத்தம்
ரூ.47,500/- வழங்கப்பட்டு வருகிறது.
2. நலிவடைந்த நிலையிலுள்ள மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தங்கள் எழுதுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.
3. மிகவும் நலிந்த நிலையில் நோயால் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்த இரு நபருக்கு மொத்தம் ரூ. 50,000/- உதவித்தொகை வழங்கப்பட்டது.
4. கிறிஸ்துபிறப்பு பண்டிகையை முன்னிட்டு நலிந்த நிலையில் உள்ள தேவைப்பட்டோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
நலிந்தோருக்கு உதவிட தாராளமாய்
கொடுத்துவரும் அன்பு உள்ளங்களுக்கு சபை நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
திருமறைப்பள்ளி பணிகள் :
நமது திருச்சபையின் திருமறைப்பள்ளி நன்முறையில் நடைபெற்று வருகிறது.
திருச்சபை பக்தி முயற்சி சங்க பணிகள்:
நமது சபையின் பக்திமுயற்சி சங்கம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. 01-02-2026 அன்று அகில உலக பக்தி முயற்சி சங்க தினவிழா றாலி கொண்டாடப்பட்டது.
சபை பாடகர் குழு பணிகள் :
ஆராதனைக்கு அழகு சேர்ப்பது பாடகர்குழு. நமது பாடகர்குழுவும் நல்முறையில் சபையின் ஆரதனைகளிலும், மற்றும் சிறப்பு ஆராதனைகளிலும் பங்கெடுத்து சிறப்பித்து வருகிறது.
திருச்சபை பெண்கள் சங்கம்:
நமது திருச்சபையின் பெண்கள் சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் பெண்கள் சங்கம் சபையில் கூடி சபையின் பல்வேறு ஊழியங்கள், தேவைகள்,
குடும்பங்களுக்காக ஜெபித்து வருகிறது. மேலும் நோயுற்றோரை சந்தித்து ஜெபித்தும், துயருற்றோருக்கு ஆறுதல் கூறியும் பணி செய்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பெண்கள் சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் சபை குடும்பங்களை சந்தித்து ஜெபித்து வருகின்றனர்.
08-03-2026 அன்று பெண்கள் ஞாயிறு சிறப்பு ஆராதனை மற்றும் விற்பனை விழா நடைபெற்றது. ஐரேனிபுரம் பார்வையற்ற பள்ளி பிள்ளைகளுக்கும்,
குளச்சல் தொழுநோய் மருத்துவமனை மக்களுக்கும் ஒருநாள் மதிய உணவு வழங்கப்பட்டது. C.S.I. நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையில்
Linear Accetarator வாங்க ரூ. 1,47,000/- கொடுக்கப்பட்டது.
சபை ஜெபக்குழு:
நமது திருச்சபையின் ஜெபக்குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகலில் ஆலயத்தில் மகளிர் கூடி ஜெபித்து வருகிறார்கள்.
தினமும் காலை 5 மணியிலிருந்து மாலை 7 மணி வரை சபை மக்கள் ஜெபிப்பதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
திருச்சபை ஆண்கள் சங்கம்:
நமது திருச்சபையின் ஆண்கள் சங்கம் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. ஆண்கள் சங்கம் சார்பில் ரூ. 4,000/- கொடுத்து DMP மூலம் ஒரு மிஷினரி தாங்கப்பட்டு வருகிறார்.
22-03-2026 அன்று சமூகநலக்கூட்டத்தில் வைத்து இலவச கண்சிகிட்சை முகாம் நடைபெற்றது. 27-07-2025 அன்று மூலச்சல் ஹோமிலுள்ள பிள்ளைகளுக்கும், 05-07-2026
அன்று ஆலங்கோட்டிலுள்ள பிள்ளைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நூலக பணிகள் :
திருச்சபை மக்கள் வேத அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நூலக அருட்பணி இயக்கம் வழியாக ஒரு நூலகம் அமைக்கப்பட்டு நன்முறையில் செயல்பட்டு
வருகின்றது. நூலகம் சார்ந்த போட்டிகளிலும் பங்குபெற்று பரிசுகளை பெற்று வருகின்றனர்.
1. இந்த ஆண்டு நமது சபையில் பிறந்த பிள்ளைகள் - 14
2. இந்த ஆண்டு நமது சபையில் திருமுழுக்கு பெற்றவர்கள் -30
3. திருமண வாழ்க்கையில் பிரவேசித்தவர்கள் - 24
திருமண வாழ்க்கைக்குள் பிரவேசித்த நமது சபை பிள்ளைகளை, எல்லா வளமும் பெற்று வாழ சபை வாழ்த்துகிறது.
4. இவ்வுலக வாழ்வை முடித்து மறுமை எய்தியவர்கள் - 23
இவ்வுலக வாழ்வை முடித்து மறுமை எய்திய நமது சபை அங்கத்தினர்கள், இவ்வுலக வாழ்வின்போது சபைக்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய சேவையை சபை நினைவு
கூருவதோடு பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் சமாதானத்தையும் ஆறுதலையும் அளிக்க சபை பிரார்த்திக்கின்றது.
வருங்கால திட்டங்கள்:
நமது திருச்சபையை இறைப்பணியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் கீழ்க்காணும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
1. HMS முருங்கவிளை மற்றும் HMS வலிய வீட்டு வளாகம் திருச்சபைகளை அச்சபை மக்களின் விருப்பத்திற்கிணங்க நமது திருச்சபையின் கிளை சபையாக இணைக்க
உரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2. கணியாரம் பொற்றைவிளை பணித்தளத்தை நமது திருச்சபையின் கிளை திருச்சபையாக இணைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
3. ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சகோ. மோகன் சி. லாசரஸ், நாலுமாவடி அவர்களைக் கொண்டு நமது சபை வளாகத்தில்
நடத்தவிருக்கும் நற்செய்தி பெருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டும் நாம் சபையாக கூடி
ஒன்றிணைந்து சபைநாள் விழா கொண்டாட எல்லா சூழ்நிலைகளையும், வாய்ப்பையும், ஐக்கியத்தையும். சுகத்தையும் தந்த இறைமகன் இயேசுவுக்கே எல்லா துதிகளையும்,
மகிமைகளையும், ஸ்தோத்திரங்களையும் காணிக்கையாக்குகிறோம். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த Rev.J. பிரகாஷ் நாயகம் அவர்கள்,
முன்னாள் போதகர்கள், ஊழியர்கள், விருந்தினர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
வளர்ந்து வரும் நமது திருச்சபையின் வளர்ச்சி எவ்வளவேனும் குறையாத நிலையில் நாம் இணைந்து செயல்படவும் பிரிவினை என்னும் சாத்தானுக்கு இடங்கொடாமல் ஒன்றுபட்டு
உழைத்து சோதனைகளை முறியடித்து முன்னேற இயேசுகிறிஸ்துவின் கிருபை நம் சபை பணிகளோடு எப்போதும் இருக்க நமது ஜெபங்களில் இறைவனிடம் வேண்டுவோம்.
சபை பணிகளில் நாம் வளர்வதோடு நின்றுவிடாமல் இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவரை எதிர்கொள்ளுகிறவர்களாக காணப்பட ஆவிக்குரிய வாழ்க்கையிலும்
நம் சபை வளர பாடுபடுவோம். ஊக்கமாக ஜெபிப்போம்.
வாழ்க, வளர்க திருச்சபை! பெருகட்டும் ஊழியங்கள்!
ஓங்குக கிறிஸ்துவின் புகழ்!
திக்கெட்டும் பரம்புக கிறிஸ்து நாமம்!
வாழ்க வளர்க நம் கஞ்சிக்குழி திருச்சபை!
கஞ்சிக்குழி திருச்சபை கடவுள் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை இன்று 203-வது சபை நாள் விழா சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும் அனைவரையும் அன்பினால் இறையாளுகைக்குள்
5 / 575
Church Day
ஒன்றிணைக்கும் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
6 / 575
Church Day
(அனைவரும் எழுந்து கடவுளைப் போற்றுவோம்)
7 / 575
Church Day
துதிப்பாடல் :
8 / 575
Church Day
1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
இயேசுவே இந்நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
9 / 575
Church Day
ஆ! இன்ப இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
10 / 575
Church Day
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும்போது வருவார்
வாக்கு போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
11 / 575
Church Day
ஆ! இன்ப இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
12 / 575
Church Day
தொழுகைக்கு அழைப்பு :
13 / 575
Church Day
பண்டைய நாட்களை நினைத்துப் பாருங்கள்; பல தலைமுறையின் ஆண்டுகளை கவனித்துப் பாருங்கள்; உங்கள் தந்தையிடம் கேளுங்கள்; அவர் உங்களுக்கு அறிவிப்பார்;
14 / 575
Church Day
பெரியோரிடம் கேளுங்கள்; அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள்.
15 / 575
Church Day
கழுகு தன் கூட்டின் மேல் அசைந்தாடித் தன் குஞ்சுகளின் மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போலும், கடவுள் ஒருவரே
16 / 575
Church Day
நம்மை வழிநடத்தினார்; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். வாருங்கள், தாழ் பணிந்து அவரைத் தொழுவோம்.
17 / 575
Church Day
நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
18 / 575
Church Day
இறைவேண்டல் :
19 / 575
Church Day
திருச்சபையை திருமைந்தர் இயேசுவின் இரத்தத்தால் மீட்டு இறையுறவில் வாழ செய்கின்ற அன்பும், ஆற்றலும் மிகுந்த கடவுளே! கஞ்சிக்குழி திருச்சபையின் 203-ம் ஆண்டு
20 / 575
Church Day
நிறைவு சபைநாளினை நினைவு கூர்ந்து உம்மைத் தொழுதுக்கொள்ள தந்த நல்ல தருணத்திற்காகவும், உம் பேரருளுக்காகவும் உம்மை போற்றுகிறோம். நாங்கள் நெறி தவறி
21 / 575
Church Day
தடம்புரண்ட நிலைகளை உணர்ந்து வாழ்வில் திருப்பமடையவும், உம் திருக்கரங்களிலிருந்து இந்நாள் வரை பெற்றுக்கொண்ட அருள் வளங்களுக்காக நன்றி செலுத்தவும், தூய
3. எத்தனை தீர்க்கர்,அநேக அப்போஸ்தலர்,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
எத்தனை வேண்டுமோ
அத்தனையும் தந்திங்
கித்தனையாய்க் கிருபை
வைத்த நம் கர்த்தனைப்
34 / 575
Church Day
பாடித் துதி மனமே; பரனைக்
கொண்டாடித் துதி தினமே.
35 / 575
Church Day
பிழை உணர்வதற்கான அழைப்பு :
36 / 575
Church Day
தூய்மையை நாடுங்கள்; தூய்மையின்றி எவரும் கடவுளை காணமாட்டார் என கடவுள் உரைக்கிறார். பாவமற்றவரும் தூய்மையுடையவரும், மன்னிக்கிறவருமாகிய
37 / 575
Church Day
மீட்பின் கடவுள் முன் நாம் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம். நம்முடைய செயல்களெல்லாம் அழுக்கான ஆடைகளைப் போலாயின. நம்முடைய தீச்செயல்கள்
38 / 575
Church Day
காற்றைப்போல், நம்மை அழைத்து செல்கின்றன. நம் பாவங்களே நம்மை நியாயம் தீர்க்கின்றன என்பதை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்போம்.
39 / 575
Church Day
(நாம் முழங்காற்படியிட்டு நமது பாவங்களை அறிக்கை செய்வோமாக)
வாழ்வின் ஆதாரங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம் இவைகளை மாசுப்படுத்தி இயற்கையின் சமநிலையினை சிதைத்துப் போட்டோம். இயற்கையோடுள்ள உறவினை
49 / 575
Church Day
அழித்து வியாபார நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இவைகளால் உடல் நலக்குறைவுகள் ஏற்பட நாங்கள் காரணமானோம். எங்கள் தவறறிந்து மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.
50 / 575
Church Day
சபையார் :
51 / 575
Church Day
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன்,
மிகப் பயந்து சாகின்றேன்
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ எவருடைய பாவம் மறக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீயச் செயலை எண்ணவில்லையோ,
61 / 575
Church Day
எவரது மனதில் வஞ்சகமில்லையோ, அவர் பேறு பெற்றவர். புது வாழ்வு பெற வேண்டும் என பாவங்களை அறிக்கை செய்திருக்கும் அன்பரே, தீங்குக்கு மனஸ்தாபப்படும்
62 / 575
Church Day
நமது ஆண்டவர், உங்கள் அனைத்து பாவங்களையும் மன்னித்து புது வாழ்வும், புதுப் பொலிவும் தந்து அருள்புரிவாராக ஆமென்.
63 / 575
Church Day
பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட நாம், இறைவனின் கரங்களில் பெற்று வரும் நன்மைகளுக்காக நன்றி செலுத்துவோம்.
64 / 575
Church Day
நன்றி மன்றாட்டு :
65 / 575
Church Day
நடத்துநர் :
66 / 575
Church Day
கஞ்சிக்குழி சேகர திருச்சபையின் 203-வது சபை நாள் விழாவை காணவும், நற்செய்தியை அநுபவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நல் அனுகூலங்களை
67 / 575
Church Day
வழங்கிய கடவுளே! எங்கள் திருச்சபை நிறுவப்பட உம் வார்த்தைகளால் எம்மை சாரமேற்றிய எங்களுடைய முன்னோர்களுக்காகவும், அவர்களின் நற்பணிகளுக்காகவும்,
68 / 575
Church Day
அதன் வழியாக நாங்கள் பெற்ற ஆன்மீக சமூக பொருளாதார வளர்ச்சிகளுக்காகவும், பல நிலைகளில் திருச்சபை வளர இறை பணியாற்றிய முன்னாள்
69 / 575
Church Day
திருப்பணிவிடையாளர்களுக்காகவும், சபை மூப்பர்கள், இறைமக்கள் அனைவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
70 / 575
Church Day
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
71 / 575
Church Day
நடத்துநர் :
நாம் பெற்றுள்ள நல்வாழ்வு சுகம்பெலன், இயற்கையின் அனுகூலங்கள் இவைகளை எண்ணி படைப்பாளராகிய இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக.
72 / 575
Church Day
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
73 / 575
Church Day
நடத்துநர் :
வாழ்வியல் தேவைகளை நாம் பெற்றிட இறைவன் தந்திருக்கும் குடும்பம், குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கைத்துணை, அருங்கொடைகள்
74 / 575
Church Day
இவைகளுக்காக நன்றி செலுத்துவோமாக.
75 / 575
Church Day
சபையார் :
அல்லேலூயா ஓசன்னா
76 / 575
Church Day
நடத்துநர் :
இறைவன் தருகின்ற உறவுகள், உதவிகள், அறநெறி போதனைகள், அருட்பணிகள், அருட்பணியாளர்கள் இவர்களுக்காக நன்றி செலுத்துவோமாக
77 / 575
Church Day
சபையார் :
அல்லேலூயா ஒசன்னா
78 / 575
Church Day
நடத்துநர் :
விடுதலை வாழ்வுக்காக இறைவன் தந்த திருச்சபை, திருமறை, விண்ணரசின் காட்சி, நிலைவாழ்வின் நம்பிக்கை இவைகளுக்காக நன்றி செலுத்துவோமாக.
79 / 575
Church Day
சபையார் :
அல்லேலூயா ஒசன்னா
80 / 575
Church Day
(நம்முடைய நன்றிகளை ஒன்றுதிரட்டி தாவீது அரசனின் நன்றி வேண்டலை ஏறெடுப்போம்)
81 / 575
Church Day
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி;அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்.
82 / 575
Church Day
வரவேற்புரை : சபை செயலர்
83 / 575
Church Day
சிறப்பு பாடல் : பாடகர் குழு
84 / 575
Church Day
அன்பின் விதை விழுந்த மண் இது
ஆவியின் தென்றல் வீசும் நிலம் இது
நூற்றாண்டுகள் சாட்சி சொல்லும் ஆலயம் இது
கஞ்சிக்குழி சேகர சபை ஆண்டுவிழா நாள் இது!
85 / 575
Church Day
ஒன்றிணைந்து நாமெல்லாம் பாடுவோம்
உயர்ந்த நம் பாரம்பரியம் போற்றுவோம்
86 / 575
Church Day
1. றிங்கல் தௌபே விதைத்த விதை இது
வேதமாணிக்கம் வளர்த்த பயிர் இது
செபஞானம் ஜெபித்த புனித மண் இது
ஆபிரகாம் உழைத்த திருத்தலம் இது
87 / 575
Church Day
2. வேத வெளிச்சம் ஜொலித்த ஸ்தலம் இது
ஆவியின் கனிகள் விளைந்த மண் இது
தியாகத்தின் கண்ணீர் நனைந்த நிலம் இது
தேவ அன்பின் தோட்டம் மலர்ந்தது இது
88 / 575
Church Day
3. ஒலைக்குடிலில் உதித்த ஒளி இது
சேகரமாய் உயர்ந்த சபை இது
கிளைச் சபைகள் குலுங்கும் கனிகள் இது
கிறிஸ்துவின் ராஜ்யம் விரிந்தது இது
89 / 575
Church Day
4.தேவதாசர் நடந்த தடம் இது
தேவவாக்கு விதைத்த களம் இது
மறையொளியால் மலர்ந்த தேசம் இது
மக்கள் மனம் மாற்றிய இறைஇல்லம் இது
90 / 575
Church Day
5. கிளைகள் பலவும் தழைத்த மரம் இது,
கிறிஸ்துவின் அன்பைச் சுமக்கும் கரம் இது:
தலைமுறை தோறும் துதிக்கும் சபை இது.
தேவன் காத்த உடன்படிக்கையின் மண் இது.
91 / 575
Church Day
6. கேட்ட வசனம் வாழ்வின் வழி இது,
கிருபை நிரம்பும் ஜீவநிதி இது:
பகையை மறக்கும் பரிசுத்த சபை இது,
பாசம் மலரும் தேவக் குடும்பம் இது.
92 / 575
Church Day
7. வாழ்க வாழ்க சபை போதகர்கள்
வாழ்க வாழ்க சபை மூப்பர்கள்
வாழ்க வாழ்க திருச்சபை மக்கள்
வாழ்க இயேசு கிறிஸ்துவின் நாமம்
93 / 575
Church Day
அன்பின் விதை விழுந்த மண் இது
ஆவியின் தென்றல் வீசும் நிலம் இது
நூற்றாண்டுகள் சாட்சி சொல்லும் ஆலயம் இது
கஞ்சிக்குழி சேகர சபை ஆண்டுவிழா நாள் இது!
94 / 575
Church Day
ஒன்றிணைந்து நாமெல்லாம் பாடுவோம்
உயர்ந்த நம் பாரம்பரியம் போற்றுவோம்
95 / 575
Church Day
திருமறை பாடங்கள் :
96 / 575
Church Day
முதல் பாடம் :
97 / 575
Church Day
ஏசாயா : 44 : 22 - 26
98 / 575
Church Day
22. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
116 / 575
Church Day
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
117 / 575
Church Day
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும்,
118 / 575
Church Day
இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
119 / 575
Church Day
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
120 / 575
Church Day
12. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
121 / 575
Church Day
13. மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
122 / 575
Church Day
14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே,
123 / 575
Church Day
நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
124 / 575
Church Day
மூன்றாம் பாடம் :
125 / 575
Church Day
மத்தேயு : 16 : 13 - 20
126 / 575
Church Day
13. பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
127 / 575
Church Day
14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
128 / 575
Church Day
15. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
129 / 575
Church Day
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
130 / 575
Church Day
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,
131 / 575
Church Day
பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
132 / 575
Church Day
18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
133 / 575
Church Day
19. பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்,
134 / 575
Church Day
பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
135 / 575
Church Day
20. அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
136 / 575
Church Day
இடையீற்று மன்றாட்டு
137 / 575
Church Day
நடத்துநர் :
138 / 575
Church Day
நம் வாழ்வின் ஓர் நல்ல ஆயராக இருந்து வழிநடத்தி நன்மைகளையும், இறையாசிகளையும் நிறைவாகத்தரவும், நாம் இறைவனோடு இணைந்து வாழ்ந்து நற்கனிகளை
139 / 575
Church Day
உலகிற்கு கொடுக்கவும், வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் உம் மடியில், மாண்டாலும் உம் திருவடியில் எனும் ஒப்படைப்புடன் வாழவும் இறைவன் அருள்தர மன்றாடுவோம்.
140 / 575
Church Day
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
141 / 575
Church Day
நடத்துநர் :
நம் திருச்சபைக்காக, நமது சேகரத்திற்குட்பட்ட சபைகளுக்காக இறைப்பணியாளர்களுக்காக, சபைக்குழு உறுப்பினர்களுக்காக, இறைமக்களுக்காக,
142 / 575
Church Day
எல்லா திருச்சபையின் திருப்பணிகளுக்காகவும், ஏழைகள், கைம்பெண்கள், வறுமையில் இருக்கிறவர்கள், கைவிடப்பட்டவர்கள், உடல்நலக் குறைவுடன் இருக்கிறவர்கள் வாழ்வு பெறவும் இறைவனிடம் மன்றாடுவோம்.
143 / 575
Church Day
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
144 / 575
Church Day
நடத்துநர் :
145 / 575
Church Day
அனைத்துத் திருச்சபைக்களுக்காகவும், தென்னிந்திய திருச்சபைக்காகவும், நமது பேராயத்திற்காகவும், நமது பேராயர் The Rt. Rev. Dr. S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்களுக்காகவும்,
146 / 575
Church Day
ஆயர்கள், திருப்பணிவிடையாளர்கள், தலைவர்கள், இறைமக்கள் அனைவருக்காகவும், பேராயத்தின் கீழ் இயங்கி வரும் எல்லா நிறுவனங்களும் இறையரசின் தன்மைகளை இந்த மண்ணில் வெளிப்படுத்தவும் இறைவனிடம் மன்றாடுவோம்.
147 / 575
Church Day
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
148 / 575
Church Day
நடத்துநர் :
நம் நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பதுக்கி வைத்தல், ஊழல், பிறர்நலம் பேணாமல் இருத்தல், எளியவர்களை ஓரம் கட்டுகிற நிலை;
149 / 575
Church Day
இத்தகைய தீமைகள் நீங்கிடவும், நம் நாட்டில் நீர் ஆதாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எல்லா மக்களுக்கும் சமநிலையில் பகிரப்படவும், அனைத்து மக்களின்
150 / 575
Church Day
உரிமைகள் பாதுகாக்கப்படவும், நற்செய்தியால் புதிய சிந்தனைகள், புதியன படைத்தல், உண்மை, நீதி, நேர்மை ஆகியன தழைத்திடவும் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
151 / 575
Church Day
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
152 / 575
Church Day
நடத்துநர் :
நலிவற்றுக் கொண்டிருக்கும் விவசாயம் பாதுகாக்கப்படவும், இயற்கையின் நல் ஈவுகளுக்காகவும் மன்றாடுவோம். உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற பெருந்தொற்று,
153 / 575
Church Day
போர் அபாயங்கள், வன்முறை, இயற்கையின் சீற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற அசாதாரண நிலைகள் அகன்றிடவும்,
154 / 575
Church Day
நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதங்கள், வன்முறைகள் ஒழித்திடவும், தேசத்தை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளை களைந்து நல்லாட்சி
155 / 575
Church Day
செய்யவும் இறைவா உம்மிடம் மன்றாடுவோம்.
156 / 575
Church Day
சபையார் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
157 / 575
Church Day
நடத்துநர் :
அனைத்து ஆற்றல் நிறைந்தவரே; எங்கும் நிறைந்தவரே; அனைத்தையும் அறிபவரே ;இவ்வேளையில் நாங்கள் ஏறெடுத்த மன்றாட்டுக்களை ஏற்று
158 / 575
Church Day
ஆசிகளை அருளுமாறு ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
159 / 575
Church Day
அருளுரை ஆயத்தப்பாடல்:
160 / 575
Church Day
ஞானப்பாடல் : 347
161 / 575
Church Day
1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் க்றிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
162 / 575
Church Day
2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்,
சபை ஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும் !
163 / 575
Church Day
3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்,
உள்ளானவரின் த்ரோகம்
கிலேசப்படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
"எம்மட்டும்" என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.
164 / 575
Church Day
4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தைப்
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.
165 / 575
Church Day
அருளுரை: The Most Rev. Dr. G தேவகடாட்சம்
(முன்னாள் C.S.1. பிரதம பேராயர் & முன்னாள் பேராயர் C.S.I. கன்னியாகுமரி பேராயம்)
166 / 575
Church Day
பற்றுறுதி அறிக்கை:
167 / 575
Church Day
வானத்தையும், பூமியையும்,காணப்படுகிறதும், காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய, ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன்.
168 / 575
Church Day
ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன், அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே,
தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.
176 / 575
Church Day
பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
177 / 575
Church Day
திருமுழுக்கு :
178 / 575
Church Day
இறைப்பணிகொடை நேரம் :
179 / 575
Church Day
இறைவேண்டல் :
180 / 575
Church Day
அறிக்கை வாசித்தல் : சபை செயலர்
181 / 575
Church Day
அறிவிப்புகள்
182 / 575
Church Day
வாழ்த்துரை
183 / 575
Church Day
நன்றியுரை & பரிசு வழங்குதல்
184 / 575
Church Day
திருவிருந்து ஆராதனை தொடரும்:
185 / 575
Church Day
பாடல் :
186 / 575
Church Day
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
தமது அருமையான மரணத்தை என்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து நாம் திரும்ப வருமளவும், நாங்கள் அதை அனுசரித்து வரும்படி தமது பரிசுத்த
219 / 575
Church Day
சுவிசேஷத்தில் கட்டளையிட்டருளினாரே;
220 / 575
Church Day
அவர் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு,சீஷர்களுக்குக் கொடுத்து, நீங்கள் வாங்கிப் புசியுங்கள்.
221 / 575
Church Day
இது உங்களுகாகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். அப்படியே போஜனம் பண்ணி பின்பு, அவர் பாத்திரத்தையும் எடுத்து,
222 / 575
Church Day
ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லோரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும்.
223 / 575
Church Day
அநேகருக்காகவும், சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம், இதைப்பானம் பண்ணும்பொழுதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
224 / 575
Church Day
என்று திருவுளம் பற்றினார்.
225 / 575
Church Day
இறைமக்கள்:
இந்தச் சாக்கிரமெந்தின் மூலம் உமது மரணத்தை நினைவு கூருகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பி வரக் காத்திருக்கிறோம்.
226 / 575
Church Day
கிறிஸ்துவே உமக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.
227 / 575
Church Day
ஆயர் :
இரக்கமுள்ள பிதாவே. நாங்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம் கிறிஸ்துவினுடைய
228 / 575
Church Day
இரத்தத்தின் ஐக்கியமாயுமிருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும், திராட்சரசத்தையும் உமது பரிசுத்த ஆவியினால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று
229 / 575
Church Day
மிகுந்த தாழ்மையோடு மன்றாடுகிறோம். நாங்கலொரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்களாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும்.
230 / 575
Church Day
தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும். அவரோடும், பரிசுத்த ஆவியரோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு, அவர் மூலமாய் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக ஆமென்.
231 / 575
Church Day
(எல்லோரும் முழங்காலில் நின்று சற்றுநேரம் அமைதியாய் இருந்து பின்வரும் மனத்தாழ்மையின் ஜெபத்தை ஏறெடுப்பர்)
232 / 575
Church Day
இறைமக்கள்:
இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி, நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத் துணியாமல், தேவரீருடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம்.
233 / 575
Church Day
உம்முடைய மேஜையின் கீழ் விழும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள்பாத்திரர் அல்ல, ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ் செய்கிற லட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர்,
234 / 575
Church Day
ஆகையால், கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும், இரத்தத்தாலும், எங்கள் பாவமுள்ள சரீரமும்,
235 / 575
Church Day
ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்ற விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து,
236 / 575
Church Day
அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.
இறைமக்கள் :
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, உமது சமாதானத்தைத் தாரும்.
ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
257 / 575
Church Day
நிறைவு பாடல்:
258 / 575
Church Day
ஞானப்பாடல் : 416
259 / 575
Church Day
எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாகும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா!
பொல்லாப்பைப் போக்கும் பேர்மன்னா!
260 / 575
Church Day
பல்கோடி நன்றி பூரணா!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா!
261 / 575
Church Day
ஆயர் :
ஆண்டவர் உங்களோடுகூட இருப்பாராக.
262 / 575
Church Day
இறைமக்கள் :
அவர் உங்களோடும் உங்கள் திருப்பணியோடும் கூட இருப்பாராக.
263 / 575
Church Day
ஆயர் :
சமாதானத்துடன் சென்று வாருங்கள்.
264 / 575
Church Day
இறைமக்கள் :
ஆண்டவரின் திருப்பெயராலே ஆமென்.
265 / 575
Church Day
ஆண்டறிக்கை
266 / 575
Church Day
"பூர்வ நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாகச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார், உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்,
267 / 575
Church Day
உன் மூப்பர்களைக் கேள் அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்" (உபா. 32:7)
268 / 575
Church Day
திருச்சபை வரலாற்றுச் சுருக்கம்:
269 / 575
Church Day
கஞ்சிக்குழி சேகர திருச்சபை தென் திருவிதாங்கூரின் முதல் மிஷனெறி அருள்திரு. உல்லியம் தொபியாஸ் றிங்கல் தௌபே ஐயர் அவர்களிடம் மயிலாடிக்கு சென்று
270 / 575
Church Day
திருமறை போதனைபெற்று எழும்புதலடைந்த திருவாளர்கள் ஆபிரகாம், வேதமாணிக்கம், செபஞானம் முதலிய முற்பிதாக்களால் ஆயனிவிளை வீட்டில் 1823-ம் ஆண்டு ஆரம்பமாயிற்று.
271 / 575
Church Day
திரு. ஆபிரகாம் டீக்கனார் நன்கொடையாக கொடுத்த பூமியில் சபை பெரியவர்களுடன் திரு. சாந்தமுடையான் டீக்கனாரும் இணைந்து கட்டிய முதலாம் ஓலைப்புரை ஆலயம்,
272 / 575
Church Day
1825-ம் ஆண்டு அருள் திரு. சார்லஸ் மீட் ஐயர் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது. திரு. யோவான் டீக்கனார் அன்பளிப்பாக கொடுத்த பூமியும், 400 பணமும், வார்ப்பு
273 / 575
Church Day
ஒன்றும், திரு. V. செல்லையன் அவர்கள் அன்பளிப்பாக கொடுத்த பூமியும் திருச்சபையின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமைந்தது. நெய்யூர் சேகர போதகர் அருள் திரு. பேலீஸ் ஐயர்
274 / 575
Church Day
காலத்தில் இச்சபை கோடியூர் சர்க்கிளின் கிளைச்சபையாய் இணைந்தது.
275 / 575
Church Day
1946-ல் நமது திருச்சபை சர்க்கிள் உரிமை பெற்றதோடு மருதூர்குறிச்சி, காட்டாத்துறை, பாத்திரமங்கலம். நங்ஙச்சிவிளை, குழிக்கோடு ஆகிய திருச்சபைகள் கஞ்சிக்குழி
276 / 575
Church Day
சர்க்கிளின் கிளை சபைகளாயின.
277 / 575
Church Day
1948 ஜனவரி முதல் பணியாற்றிய திரு. சைமன் திருப்பணியாளர் காலத்தில் 50 அடி நீளம் 25 அடி அகலம் கொண்ட "T" வடிவ ஆலயத்திற்கு முன்னாள் பேராயர்
278 / 575
Church Day
உயர்மறை திரு. லெக் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அருள் திரு. G. தேவதாசன் அவர்கள் தலைமையில் செயலாற்றிய சபைக்குழுவால் கட்டப்பட்ட இந்த ஆலயம் அப்போதைய
279 / 575
Church Day
பேராயர் உயர் மறைதிரு. I.R.H. ஞானதாசன் அவர்களால் பிரதிஷ்டை பண்ணப்பட்டது.
280 / 575
Church Day
மறைதிரு. A. டேனியல் அவர்கள் பணி காலத்தில் 1 ஏக்கர் 7 சென்று பூமி ஆலயத்தின் கிழக்குப்பகுதியில் வாங்கப்பட்டது. தபால் அலுவலகம் ஒன்றும் கிணறு ஒன்றும்
281 / 575
Church Day
அமைக்கப்பட்டன. மறைதிரு. A. ஈனோஸ் அவர்கள் பணி காலத்தில் மேலும் 80 சென்று பூமி ஆலயத்தின் கிழக்கு பகுதியில் வாங்கப்பட்டது. அன்றைய நிலவரப்படி
282 / 575
Church Day
ரூ. 80,000/-மதிப்பீட்டிற்கான மின்சார பணிகள் சபை பகுதிகளிலும் ஆலயத்திலும் நிறைவேற்றப்பட்டன.
283 / 575
Church Day
1959 ஜூன் 2-ம் நாள் கன்னியாகுமரி மறைமாவட்டம் உருவாகி ஆயர் மண்டலங்கள் அமைக்கப்பட்டபோது நமது கஞ்சிக்குழி திருச்சபையும் 1960 ஜூன் மாதம்
284 / 575
Church Day
ஆயர் மண்டல உரிமை பெற்றது.
285 / 575
Church Day
21-06-1972-ல் நமது பாடசாலை நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. 26-01-1972-ல் செல்லங்கோணம் ஆலத்துறை சாலையும், புதிய நடுநிலைப்பள்ளி கட்டிடமும் அன்றைய
286 / 575
Church Day
பேராயர் உயர் மறைதிரு. I.R.H ஞானதாசன் அவர்கள் தலைமையில், சபை போதகர் மறைதிரு. A. ஈனோஸ் அவர்கள் முன்னிலையில் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர்
287 / 575
Church Day
திரு. A.P. முத்துசுவாமி I.A.S. அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. இந்த தடத்தில் ஒரு பேருந்தும் இயக்கப்பட்டது. 21-07-1979-ல் ஆலய கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு
288 / 575
Church Day
அருள்திரு அறிவர் சாமுவேல் அமிர்தம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1-2-1990 முதல் நமது திருச்சபை சேகர சபையாக உயர்வு பெற்றது. 17-06-1990-ல்
289 / 575
Church Day
முதலாம் ஆயர் இல்லம் முன்னாள் பேராயர் பேரருள்திரு. G.கிறிஸ்துதாஸ் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. 27-07-1994 அன்று சமூக நலக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு
290 / 575
Church Day
தரைதளம் முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. முதல் மாடி கட்டி முடிக்கப்பட்டு 11-01-2003 அன்று அப்போதைய பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A.,B.D., M.Th.
291 / 575
Church Day
அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது. நமது ஆலய விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் 07-09-2003 அன்று அப்போதைய பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th.
292 / 575
Church Day
அவர்களால் நாட்டப்பட்டு 120 அடி நீளம் 60 அடி அகலம் உள் அளவு கொண்ட ஆலயமும், கோபுரமும், வஸ்திராலயமும் கட்டப்பட்டு 30-12-2007 அன்று அப்போதைய மதிப்பிற்குரிய
293 / 575
Church Day
பேராயர் உயர்மறைதிரு G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th. அவர்களால் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. ஆலயக் கட்டிடத்தின் தரைப்பணிகள், மின்சாதனங்கள்
294 / 575
Church Day
நீங்கலாக 54,05,841 ரூபாய் 45 காசுகள் ஆலய கட்டுமான பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆலய அர்ப்பணத்தினத்தன்று சுமார் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஒலி
295 / 575
Church Day
அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் 5,83,000 செலவில் தேக்குமரத்தாலான 110 பெஞ்சுகள் வாங்கப்பட்டன. திருச்சபையின் உபயோகத்திற்காக ரூபாய் 2,07,500
296 / 575
Church Day
விலையில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டு ரூபாய் 21,442 செலவில் அதற்கான மேடை மற்றும் தேவையான இணைப்புகள் அமைக்கப்பட்டு சேகரத்துப் போதகர் Rev. R. ஜஸ்டஸ்
297 / 575
Church Day
அவர்களால் 05-07-2009 அன்று காலை ஆராதனையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய உபயோகத்திற்காக கணிணி, CPU, UPS ஆகியவை திரு. G. ஜெயதாஸ் தோட்டத்துவிளை
298 / 575
Church Day
அவர்களால் வாங்கி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இந்திய வேதாகமச் சங்கத்தின் கிளை நமது சபையில் 14-06-2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அதனை
299 / 575
Church Day
திருமதி. சாந்திபா ஜெயதாஸ் அவர்கள் பொறுப்பேற்று நடத்தி வந்தார்கள். நமது ஆலயத்திலிருந்து போதகர் இல்லம் செல்ல உரிய வழிபாதை இல்லாதிருந்த நிலையில்
300 / 575
Church Day
தேவனுடைய பெரிதான கிருபையால் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி 12 அடி அகலமுள்ள சாலை ஆலய வளாகத்திலிருந்து போதகர் இல்ல வளாகம் வரை 05-07-2009
301 / 575
Church Day
அன்று சபைக்குழு மற்றும் சபை மக்களால் அமைக்கப்பட்டது.
302 / 575
Church Day
கொண்டான்குழி சாலையுடன் ஆலய வளாகம் மற்றும் மிஷன் வீட்டு வளாக சாலையை இணைக்க போதிய வழிஇல்லாதநிலையில் சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி
303 / 575
Church Day
26-07-2009 அன்று அச்சாலை அமைக்கப்பட்டது.
304 / 575
Church Day
16-08-2009 அன்று நமது சபையில் ஆண்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆலய முன்புற மைதானத்தை சரி செய்யும் விதத்தில் 2009-ம் ஆண்டு ரூபாய் சுமார் 2 லட்சம் செலவில்
305 / 575
Church Day
குறுக்கு தடுப்பு சுவர் எழுப்பி, மண் நிரப்பி மைதானம் சரி செய்யப்பட்டது.
306 / 575
Church Day
ஆயினிவிளை பகுதியில் பழுதுபட்ட பழைய போதகர் இல்லம் இருந்த இடத்தில் அதனை அகற்றிவிட்டு இரண்டாம் போதகர் இல்லம் கட்டுவதற்கான பணிகள் 28-09-2009
307 / 575
Church Day
அன்று ஆரம்பிக்கப்பட்டு போதகர் இல்ல கட்டிடம் மற்றும் நாற்புறமும் மதிற்சுவர் ஆகிய பணிகள் ரூபாய் பதினாறு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று ஐந்து
308 / 575
Church Day
(16,62,605) செலவில் செய்து முடிக்கப்பட்டு மரியாதைக்குரிய அப்போதைய துணை பிரதம பேராயர் அவர்களால் 01-08-2010 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.
309 / 575
Church Day
சபை குடும்பத்தினரின் திருமண தினத்தன்று அவர்தம் இல்லத்திற்கு போதகர் சென்று ஜெபித்து ஆசீர் வழங்கும் திட்டம் 01-01-2010 முதல் ஆரம்பிக்கப்பட்டது.
310 / 575
Church Day
ரூ. 90,900 செலவில் நமது திருச்சபை வளாகத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு 15-8-2010 அன்று அர்ப்பணம் செய்யப்பட்டது.
311 / 575
Church Day
ஆலய கட்டிடத்தில் முடிக்கப்படாமலிருந்த சுவர் மற்றும் கதவு ஜன்னல்களுக்கு சாயம் பூசும்பணி ரூ. 4,88,213 செலவில் 1-11-2010 அன்று ஆரம்பித்து செய்து முடிக்கப்பட்டது.
312 / 575
Church Day
சபைக்குழு சார்பில் கப்பியறை பேரூராட்சியை அணுகி, கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கொண்டான்குழி ஆலய வளாகம் போதகர் இல்லம் இணைப்பு சாலை
313 / 575
Church Day
கப்பியறை பேரூராட்சியால் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு 30-1-2011 அன்று அன்றைய கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு P. தேவராஜ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
314 / 575
Church Day
நமது சபையை அடுத்த இலுப்பக்காவிளையில் ஒரு ஆலயம் கட்டும் முயற்சியாக ரூ. 5 லட்சம் செலவில் 10 சென்று இடம் கிரயம் செய்யப்பட்டது.
315 / 575
Church Day
நமது சபையில் 24-03-2011 அன்று தையல் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டது. 12-6-2011 அன்று சமூக செயல்பாட்டுகுழு அமைக்கப்பட்டது. ரூ. 56,790.50 செலவில்
316 / 575
Church Day
முதலாம் போதகர் இல்லபராமரிப்பு பணிகள் 25-4-2011 அன்று ஆரம்பிக்கப்பட்டு செய்து முடிக்கப்பட்டன ஆலய கோபுர பராமரிப்பு வசதிக்காக ரூ. 75,000
317 / 575
Church Day
செலவில் ஏணி மற்றும் சுற்று தளம் அமைக்கப்பட்டது.
318 / 575
Church Day
திருச்சபை மக்களின் வசதிக்காக சபைக்குழு சார்பில் கப்பியறை பேரூராட்சி தலைவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆலயவளாக கிணற்றில்
319 / 575
Church Day
ஒன்றும் வடக்கு காட்டுவிளை பகுதியில் ஒன்றுமாக இரண்டு சிறுமின்விசை மேல் நிலை நீர் தொட்டிகள் ரூ. 1,80,000 செலவில் பேரூராட்சியால் அமைக்கப்பட்டு
320 / 575
Church Day
28-8-2011 அன்று அன்றைய கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு. P. தேவராஜ் அவர்களால் போதகர்கள், சபைமக்கள் முன்னிலையில் இயக்கிவைக்கப்பட்டது.
321 / 575
Church Day
சபை மக்களின் முக்கிய தேவையான கழிவறை ரூ. 2,31,788 செலவில் கட்டப்பட்டு சேகரத்து போதகர் அருட்திரு R. ஜஸ்டஸ் அவர்களால் 4-9-2011 அன்று சபை மக்கள்
என்னும் புதிய நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு திருச்சபையின் முதல் குடும்பவிழா 13-09-2009 அன்று நடத்தப்பட்டது.
325 / 575
Church Day
திருச்சபை வளர்ச்சியின் ஒரு மயில் கல்லாக நமது சபை சார்பில் DMPB பணிக்களம் ஒன்று அமைப்பதென முடிவு செய்து, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம்
326 / 575
Church Day
நரிப்பள்ளி என்ற இடத்தில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் செலவில் 22 சென்று நிலம் 22-02-2010 அன்று கிரயம் செய்யப்பட்டது.
327 / 575
Church Day
அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்ட 27-06-2010 அன்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணியாக ரூபாய் 50,000 செலவில் மதிற்சுவர் கட்டப்பட்டது.
328 / 575
Church Day
இடம் கிரயத்திற்கும் மதிற் சுவர் கட்டுவதற்குமான முழுதொகையையும் மனமுவந்து நன்கொடையாக கொடுத்த முன்னாள் செயலர் திரு. தங்கையா மற்றும் அவரது
329 / 575
Church Day
குடும்பத்தினருக்கு திருச்சபை நன்றி பாராட்டுகிறது. மேலும் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் 01-08-2010 அன்று அன்றைய துணை பிரதம பேராயர்
330 / 575
Church Day
பேரருட் திரு. G. தேவகடாட்சம் M.A., B.D., M.Th. அவர்களால் நாட்டப்பட்டது.
331 / 575
Church Day
மேற்படிபணிக்களத்தில் ஆலய அஸ்திபார பணிகள் 22-11-2010 அன்று ஆரம்பிக்கப்பட்டன. ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் 22-11-2010 அன்று
332 / 575
Church Day
பொருத்தப்பட்டு ஆழ்குழாய் கிணறும் மோட்டாரும் அர்ப்பணம் செய்யப்பட்டன.
333 / 575
Church Day
8-8-2011 திங்கட்கிழமை அன்று சேகரத்து போதகர் Rev. R. ஜஸ்டஸ் அவர்களால் உதவி ஊழியர் திரு மார்ட்டின் ஜெபலால் மற்றும் சபைக்குழுவினர் முன்னிலையில் தலைவாசல்
334 / 575
Church Day
அமைக்கப்பட்டு கட்டிடபணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலயத்தின் வெளிப்புற பூச்சுவேலைகள் நீங்கலாக கட்டுமானபணிகள் மற்றும் போதகர் தங்கும் இல்ல பணிகள்
335 / 575
Church Day
முடிக்கப்பட்டு 22-1-2012 அன்று அப்போதைய தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயரும் கன்னியாகுமரி மறைமாவட்ட பேராயருமான அதி உயர்மறை
336 / 575
Church Day
திரு. G. தேவகடாட்சம் M.A.. B.D., M.Th. அவர்களால் வீடியோ காண்பிரன்ஸிங் மூலம் அர்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணவிழா நிகழ்வுகள் நரிப்பள்ளியிலிருந்து
337 / 575
Church Day
இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டு நமது திருச்சபை மக்கள் நமது சபையிலேயே அமர்ந்து கண்டுகளிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. தென்னிந்திய திருச்சபை வரலாற்றிலேயே
338 / 575
Church Day
வீடியோ காண்பிரன்ஸிங் மூலம் ஆலயம் அர்ப்பணம் நடைபெற்றது. கஞ்சிக்குழி சேகர CSI திருச்சபை சார்பில் நடைபெற்ற நரிப்பள்ளி ஆலய அர்ப்பணவிழா என்பது நமது
339 / 575
Church Day
சபைக்கு சிறப்பு சேர்ப்பதாகும். மேற்படி ஆலய கட்டுமானபணி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டார் வைத்தவகையில் ரூ. 20,44,241.50 செலவிடப்பட்டுள்ளது.
340 / 575
Church Day
தேவ வழிநடத்துதலாலும் சபைக் குழுவின் முயற்சியாலும் கப்பியறை பேரூர் செயலர் வழக்கிறஞர் S.சுந்தர்சிங் மற்றும் கப்பியறை பேரூராட்சி தலைவர் திரு. P. தேவராஜ்
341 / 575
Church Day
ஆகியோரின் பரிந்துரைகளாலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் செலவில் ஆலயத்தின் முன்புறம் வாய்க்காலின் குறுக்கே
342 / 575
Church Day
பாலம் அமைத்து 23-12-2013 அன்று அன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. J. ஹெலன் டேவிட்சன். M.Sc. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
343 / 575
Church Day
சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்தும் நோக்கோடு ரூ.3,56,997/-செலவில் 1000 பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. திருமண மண்படத்தின் உட்புற கழிவறை
344 / 575
Church Day
அமைத்தல் புதிதாக 25 சாப்பாட்டு மேஜைகள் செய்தல் மற்றும் அனைத்து சாப்பாட்டு மேஜைகளையும் Steel Plate- ஆல் Cover செய்தல் போன்ற பணிகள் ரூ. 2,14,025 செலவில் செய்யப்பட்டன.
345 / 575
Church Day
சபை உபயோகத்திற்காக ஒரு இன்வர்ட்டர் வாங்கப்பட்டு அர்ப்பணம் செய்யப்பட்டது. சபை ஆண்கள் சங்கம் சார்பில் ரூ. 3,85,000 செலவில் ஒரு 40KVA ஜெனரேட்டர் வாங்கப்பட்டு
346 / 575
Church Day
15-06-2014 அன்று சேகரத்து போதகர் Rev.S. ஜாண் விக்டர் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. ஆண்கள் சங்க வெளிக்கூட்ட உபயோகத்திற்காக ரூ. 1,65,000 செலவில் ஒலி,
347 / 575
Church Day
ஒளி சாதனங்கள் ஆண்கள் சங்க செயலர் திரு. T. ராஜசேகர் முயற்சியால் வாங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. 23-02-2014 அன்று கணியாரம் பொற்றவிளை திரு. R. ஜஸ்டஸ்,
348 / 575
Church Day
திரு. R.ரெவி குடும்ப இல்ல வளாகத்தில் வைத்து கணியாரம் பொற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க குஞ்சன்தண்டலார் நினைவாக
349 / 575
Church Day
கட்டப்பட்ட மருதூர்குறிச்சி குஞ்சன் தண்டலார் நினைவு ஆலயம் C.S.I. சபையாக அங்கீகரிக்கப்பட்டு 29-06-2014 முதல் கஞ்சிகுழி சேகரசபையின் கிளை சபையாக இணைக்கப்பட்டது.
350 / 575
Church Day
2014-ம் ஆண்டு ரூ. 48,18,365 செலவில் ஆலயத்தை சுற்றிலும் கருங்கற்களால் மதிற்சுவர் அமைத்தும், முன்புறம் கருங்கற்களாலான படிக்கட்டுகள் அலங்கார கற்தூண்கள் மற்றும்
351 / 575
Church Day
தென்புறம் கல் சிற்பத்தோடு கூடிய தூண்களுடன் gate அமைத்தும், ஆலயத்தை சுற்றிலும் தரை செப்பனிடப்பட்டு Interlock அமைத்தும் புல்தரை மற்றும் பூச்செடிகள் அமைத்தும் ஆலய
352 / 575
Church Day
வளாகம் அழகுபடுத்தப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பேராய அளவில் நடத்தப்படும் குழு விளையாட்டு போட்டிகள் 4-7-2015 அன்று நமது கஞ்சிக்குழி சேகரசபை வளாகத்தில்
353 / 575
Church Day
வைத்து அப்போதைய குமரி பேராயர் உயர் மறைதிரு. அறிவர் G. தேவகடாட்சம். MA, BD, MTh, DD அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அப்போதைய
354 / 575
Church Day
கேரள மாநில சட்டமன்ற சபாநாயகர் மாண்பு மிகு N. சக்தன், MA, LLB, MLA அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் நமது சபை HMS ஊழியர் ஒருவரை மாதம் ரூ. 4,500
355 / 575
Church Day
கொடுத்து தாங்கிவருகிறது.
356 / 575
Church Day
சமூக நலக்கூட கைகழுவும் இடநெருக்கடியை போக்கும் விதத்தில் நில உரிமையாளர் திரு. T. ராபின்சன் அவர்கள் 35 சதுர அடி நிலத்தை அன்பளிப்பாக தந்தார்.
357 / 575
Church Day
சமூக நலக்கூடம் ஏற்கனவே இருந்த அளவோடு 15 அடி நீளம் கூடுதலாக விரிவாக்கப்பட்டு தரைத்தளம் மற்றும் முதல்மாடி அமைக்கப்பட்டது.
358 / 575
Church Day
அத்துடன் சமூகநலக்கூடம் புதுசமையல் அறை, முன்புற மேல்தள கூரை, அழகுபடுத்துதல், மழைநீர் வடிகால், குளிரூட்டல், மேல்நிலைத் தொட்டி போன்ற பல பணிகள் ரூ. 77,43,525
359 / 575
Church Day
செலவில் செய்யப்பட்டு புனரமைக்கட்டு 01-04-2018 அன்று அப்போதைய சேகரத்துப் போதகர் அருட்திரு. G.N. ராஜகுமார் அவர்களால் சபைக்குழு மற்றும் சபை மக்கள்
360 / 575
Church Day
முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சமூக நலக்கூட புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 10,000 நன்கொடை கொடுப்பவர்களுக்கு
361 / 575
Church Day
அவர்கள் விரும்பும் ஒரு நிகழ்விற்கு சமூகநலக் கூடத்தை வாடகையின்றி பயன்பத்தும் சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இச்சிறப்புத் திட்டத்தில் 198 பேர்
362 / 575
Church Day
தங்களை இணைத்துக் கொண்டனர்.
363 / 575
Church Day
ஆலயத்தில் தாழ்தளக்கூரை அமைத்தல், ஆல்ட்டர் புனரமைப்பு, புதிய மின்விசிறி அமைத்தல் மற்றும் ஏற்கெனவே இருந்த ஆலய கோபுரத்தின் முன்பு மாற்று
364 / 575
Church Day
தோற்றச் சுவர் அமைத்தது ஆகிய பணிகள் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 04-08-2019 அன்று அப்போதைய சேகரத்துப் போதகர் அருட்திரு. Y. தேவதாசன்
365 / 575
Church Day
அவர்கள் தலைமையில் உதவி போதகர் திரு. J. யாபேஸ் அவர்கள் முன்னிலையில் பேராயர் உயர் மறைதிரு.அறிவர் A.R. செல்லையா அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது.
366 / 575
Church Day
உதவிப்போதகர் இல்லம் ரூ. 5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு 27-09-2020 அன்று சேகரத்துப் போதகர் அருட்திரு. Y. தேவதாசன் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது.
367 / 575
Church Day
சினாட் மாமன்றத்தின் C.S.I. உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் தொடர் ஒளிதீபம் 13-04-2022 அன்று நமது சபையில் கொண்டுவரப்பட்டது.
368 / 575
Church Day
14-04-2020 அன்று பேராய றாலிபெருவிழா நமது சபையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. ஆலய முன் புற மைதான கிழக்கு பகுதியில் வாய்க்கால் ஓரத்தில் மதிற்சுவர் மற்றும்
369 / 575
Church Day
gate அமைக்கப்பட்டு 12-11-2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் சட்டசபை உறுப்பினர் திரு. J.G. பிரின்ஸ் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சம் செலவில்,
370 / 575
Church Day
ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன் அவர்கள் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட பாலத்தின் வடபுறம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகநலப்
371 / 575
Church Day
பயன்பாட்டிற்கான ரூ. 3,60,728/- செலவில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு 20-07-2024 அன்று சேகரத்துப் போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்களால் பிரதிஷ்டை
372 / 575
Church Day
செய்யப்பட்டு சபைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. திருச்சபை அங்கத்தினர்கள் செலுத்தும் காணிக்கைகள் வரவு வைக்கப்பட்ட விவரங்களை அவரவர் கைபேசி
373 / 575
Church Day
எண்ணிற்கு குறுஞ்செய்திமூலம் தெரிவிக்கும் சேவை 16-03-2025 அன்று சேகரத்து போதகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
374 / 575
Church Day
சேகரத்துப்போதகர் இல்ல வளாகத்தில் ரூ. 83,800/- செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு 02-04-2025 அன்று சேகரத்துப் போதகரால் சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
375 / 575
Church Day
ஆலயத்தின் வடபுறமுள்ள திறந்தவெளிக் கிணற்றில் ரூ.61,600/- செலவில் மின்மோட்டார் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்பட்டு 21-05-2025 அன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
376 / 575
Church Day
ரூ. 58,000/- க்கான Inverter வாங்கி சபை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கான வருடாந்திர புத்துணர்வு நிகழ்ச்சி
377 / 575
Church Day
நமது சபையில் 22-03-2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆலயம் மற்றும் வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 20-07-2025 அன்று சேகரத்துப் போதகரால் இயக்கி வைக்கப்பட்டது.
378 / 575
Church Day
திருச்சபையின் ஆரம்பகாலம் முதல் இதுநாள் வரை வழி வழியாக திருச்சபையின் அங்கங்களாக தங்களை இணைத்து, கூலித் தொழில் செய்து, நெஞ்சதனை பனைமரச் செதில்
379 / 575
Church Day
கிழிக்க பனைமரம் ஏறி பதனீர் எடுத்து, இறக்கிய பதனிதனை காய்க்க விறகின்றி, தன் மனைவி காட்டுப் புறத்துக்கு சென்று தருவைப் புல்லறுத்து சுமந்து வந்து காய்த்து
380 / 575
Church Day
வெல்லமாக்கி, அந்திக் கடைக்கு நடந்து கொண்டு சென்று விற்று அன்றைய நாள் பசி தீர்க்க அரை வயிற்றிற்கான மரவள்ளி கிழக்கு வாங்கியும், மலை உச்சிவெயில்
381 / 575
Church Day
உடலை அலைக்கழிக்க, தாங்க முடியாமையால் தென்னை ஓலை கிடுகு பின்னி சற்று மறைப்புக்காக முதுகுமேல் தொங்கவிட்டு காலை முதல் மாலைவரை கல் உடைத்து,
382 / 575
Church Day
மண் வெட்டி, வயல் வெளியில் ஏர் ஓட்டி உழவு செய்து, பாக்களங்களில் பாவாற்றி, வீடுகளில் மகளிர் இராட்டையில் நூல் நூற்று, கைத்தறிகளில் நெசவு செய்து,
383 / 575
Church Day
பனை ஓலைகளில் கடவம் என்றழைக்கப்படும் பெரிய வசை ஓலைப் பெட்டிகள், சிறு ஓலைப்பெட்டிகள் பின்னி, தென்னை ஓலை பின்னி, தென்னை பயிரிட்டு,
384 / 575
Church Day
பசிபோக்க மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற உணவு வகைகள், விவசாயம் செய்து தனக்கு உணவளிக்க ஆடுமாடுகளை மேய்த்து இல்லத்தில் வளர்த்து
385 / 575
Church Day
கடினமாக உழைத்தும் அரிசி சோறதனை அவ்வப்போது கண்ணால் பார்ப்பவர்களாக அரை வயிற்றுக்குகூட உணவின்றி பதனீர் பனங்கருப்புக்கட்டி போன்றவற்றை
386 / 575
Church Day
உணவாகக் கொண்டு, உடுக்க உடையின்றி அரைகுறை ஆடையோடு பசிதாங்க முடியாமல் அரைதனை இறுக கட்டிக்கொண்டு கேள்விக்குறிபோல் முதுகுவளைய
387 / 575
Church Day
கடினமாக உழைத்து, கடற்கரை மணல்போல் பெருக ஓரேழிற்குக் குறையாமல் இறைவன் அளித்த பிள்ளைச் செல்வங்கள் மண் சுவர்மேல் ஓலை வேய்ந்த கூரை வீடுகளில்
388 / 575
Church Day
மின்னொளி எப்படி இருக்குமென தெரியாமல் மண்ணெண்ணெய் விளக்கொளியில் சாணி மெழுகிய தரையில் உருண்டு புரண்டு ஒன்றாக வாழ, பழுதடைந்த ஓட்டை
389 / 575
Church Day
ஓலைக்கூரை வழி வீட்டினுள் சூரியன் எட்டிப்பார்க்க, மழை தானும் விட்டிடாமல் உள்ளே பாய, ஒழுகும் நீரை பாத்திரத்தில் வடியவிட்டு உறக்கமின்றி ஓரமாக ஒதுங்கிப்போய்
ஆரம்ப பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பி படிக்கச் சொல்லி பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாத்த நிலையிலும் தங்கள் கடின உழைப்பின் ஒரு பகுதியையும்
392 / 575
Church Day
கோழிமுட்டை, கருப்புக்கட்டி, நெல், தேங்காய், கிழங்கு என இறைவனளித்த உழைப்பின் பலன்களுடன் ஒருகாசு, இரண்டு காசு, அரை அணா, ஐந்து காசு என திருச்சபைக்கு
393 / 575
Church Day
காணிக்கையாக அளித்து திருச்சபையை வளர்த்ததன் பயனாக இத்திருச்சபைமூலம் பெற்ற ஆசியால் இன்று எம் சபை மக்கள் சொந்தமாக இருசக்கர,
394 / 575
Church Day
நான்கு சக்கர சொகுசு வாகனங்கள், ஏர் கண்டிஷன் இல்லாமல் தூங்க முடியவில்லை என குளிரூட்டப்பட்ட மாட மாளிகைகள், வசதியான வாழ்க்கை,
395 / 575
Church Day
கல்விமான்கள், அதிகாரிகள், அந்தஸ்தான பணியுடையவர்கள், உலக நாடுகளிலெல்லாம் பரவி அந்நாடுகளுக்கே வழிகாட்டுபவர்கள் என தலைநிமிர்ந்து வாழ்வதோடு
396 / 575
Church Day
மேலாடை அணிய அனுமதியின்றி வெட்கி நாணி வேதனையில் வாழ்ந்த எம் குலப்பெண்கள் இன்று முழு நாகரீகத்துடன் சுதந்திரமாக தலைநிமிர்ந்து வாழவும்
397 / 575
Church Day
இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை இயக்கி கெம்பீரமாக சாலைகளில் உலாவரும் கண்கொள்ளாக் காட்சி காண முடிகிறதென்றால் கிறிஸ்து
398 / 575
Church Day
என்னும் ஜீவ ஒளியாகிய விதையை றிங்கள் தோபே போன்ற மிஷினெரிகளுடன் ஆபிரகாம், வேதமாணிக்கம், செபஞானம் போன்ற நம் முற்பிதாக்கள் ஆயினிவிளை
399 / 575
Church Day
வீட்டில் 203 ஆண்டுகளுக்கு முன்விதைத்து அது முளைத்து நம் மூதாதையரின் வேர்வை தியாகம் என்றும் ஊட்டச்சத்துக்களால் வளர்ந்து பயிராகி பூப்புத்து, காய்காய்த்து,
400 / 575
Church Day
கனியாகி இன்று நாம் சுவைக்கின்றோம் என்பதனை முன்னோருக்குத் தலைவணங்கி கடந்து வந்த முட்களும் கரடுமுரடானதுமான பாதைகளை இளைய தலைமுறை
401 / 575
Church Day
அறிய சமர்ப்பிக்கிறேன்.
402 / 575
Church Day
இன்றைய நமது திருச்சபையின் வளர்ச்சிக்கு அஸ்திபாரமாக ஆரம்ப காலம் முதல் ஆயர்மண்டில அந்தஸ்து பெறும்வரை பணியாற்றிய திருப்பணி விடையாளர்கள் திருவாளர்கள் :
மோசே, விசுவாசம், ஈசாக்கு. ஏசுதாஸ், ஜாண், மதுரநாயகம், பொன்னையா, சைமன், ஜார்ஜ் ஆகியோர்களும் ஆயர்மண்டில அந்தஸ்து பெற்றபின் பணியாற்றிய
405 / 575
Church Day
அருட்திருவாளர்கள் : G. தேவதாசன், G. ஐசக், J. ஜோன்ஸ் ரெத்தினம், M. ராஜையன், A. டேனியல், A. ஈனோஸ், G. நெகேமியா, Y. கிறிஸ்டோபர் லேவி,
406 / 575
Church Day
J. ஞானதாசன், S. ஆர்தர் சாமுவேல், G. தேவகடாட்சம், C. டைட்டஸ், சேகர சபையாக உயர்த்தப்பட்ட பின் சேகரத்து போதகர்களாக பணியாற்றிய அருட்திருவாளர்கள் S.P.வில்சன்,
407 / 575
Church Day
D.M. நல்லதம்பி, A.D. ரெஜினால்ட் ஜோசப், E. சுகுமார் ஜெபசிங், S. ஐசாயா, R. ஜஸ்டஸ், S. ஜாண் விக்டர், D. ஐசக், T. ஜாண்பீட்டர், P. செல்லக்கண், G.N. ராஜகுமார்,
408 / 575
Church Day
Y. தேவதாசன். Dr. பிரின்ஸ் வேதமாணிக்கம் ஆகியோர்களும் 01-06-1991 முதல் உதவி போதகர்களாக இருந்த திருவாளர்கள் ஜெபசுஜி, செல்வராஜ், செல்வம், ஆப்ரகாம்,
409 / 575
Church Day
ஹென்சிலின் நேசராஜ், ஜெப ஐசக் வெஸ்லி, மார்ட்டின் ஜெபலால், சுனில் பெல்ஸ் பெல், ஜேக்குலின் ஜெகன்சிங், J. யாபேஸ் ஆகியவர்களும் முக்கிய
410 / 575
Church Day
காரணமானவர்கள் ஆவர்.
411 / 575
Church Day
மேற்சொன்ன திருச்சபை ஊழியர்களுடன் திருச்சபையின் ஆரம்பகாலம் முதல் தற்காலம் வரையிலும் திருச்சபையைக் கட்டி எழுப்பிப் பல முன்னேற்ற பணிகள் புரிந்து,
412 / 575
Church Day
திருச்சபையின் வாழ்வு ஒன்றையே கருதி பல திட்டங்களை வகுத்து ஒரு மாபெரும் திருச்சபையாக நமது திருச்சபையை உயர்த்திய முன்னாள் சபைக்குழு உறுப்பினர்களான
413 / 575
Church Day
திருவாளர்கள் : சாமுவேல், தாவீது, மோசே, யோசுவா, வேதக்கண், N. யோசேப்பு. M.யோசேப்பு. S. ராஜையா. S. நல்லதம்பி, யோவான், சின்னையன், எலியா,
414 / 575
Church Day
யாக்கோபு, நேசமணி, V. செல்லையன், பொன்னையன், செல்லக்கண், வேதமுத்து. P. தேவகடாட்சம், G. ஞானசிகாமணி. G. ஜெயதாஸ், S. இஸ்ரவேல்,
415 / 575
Church Day
P. ராஜையா, P. சின்னையன், Y. ஜான்றோஸ், G. முத்துநாயகம்,E. தேவராஜ், M. ராஜேந்திரன், E. ஜஸ்டஸ் சாமுவேல், C. ஜோபி பென்சாம், N. ஜாண்சன் சுதேர சுந்தரம்,
416 / 575
Church Day
T. ஏசுதாஸ், P. தங்கையா, P. ஞானராஜ், J. ஜஸ்டின் சாமுவேல், J. லாறன்ஸ், J. அன்பையா, J. சேம் மங்கள சுகி, R. விஜயன், M. கிறிஸ்து தாஸ், A. சகரியா ஜெயக்குமார்,
417 / 575
Church Day
N, செல்வராஜ், C. டேவிட்ராஜ், J. சோபிதராஜ், S. சுஜிர்ராஜ் Y. பாலசுந்தர் ராஜ், S. சுனில், M.ரமேஷ், J.S.ஜோஸ்ராஜ், திருமதிகள் ஸ்டெல்லா சுலோசனாபாய்,
418 / 575
Church Day
T. மேரி பத்மா, A. சாந்தி அப்பாவு, A. மேபல் அக்லா ஆகியோரது பணிகள் திருச்சபையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது. 25-09-2023 முதல் அருட்திரு. S. பெல்சன் கிராமணி
419 / 575
Church Day
அவர்கள் சபையின் சேகரத்து போதகராகவும் 06-05-2024 முதல் அருட்திரு. I. தங்கச்சன் அவர்கள் நமது திருச்சபையின் உதவி போதகராகவும் பெறுப்பேற்று பணிபுரிந்து
420 / 575
Church Day
வருகிறார்கள். அவர் தம் பணிகள் இறைவனுக்கு ஏற்புடையதாக அமைய இறைவனை வேண்டுவோம்.
421 / 575
Church Day
முன்னோர்களின் நல்வழியிலேயே 28-04-2024 முதல் சபைக்குழு உறுப்பினர்களாக பணியாற்றும் திருவாளர்கள்/திருமதி T. ஐசன், J. எலிசா ரெஜின், S. பெல்லா,
422 / 575
Church Day
T. ராஜசேகர், J.B. ஜாண் ஜெபா, J. ராஜசேகர், I. ரூபன் ஆஸ்டின், A. பிளாட்பின், பொன். சாலமன், G. சிசில் R. ஜஸ்டின், A. ஆர்தர்லிப்னிக்ஷால்
423 / 575
Church Day
ஆகியோராகிய எமக்கு இறைவனின் திருப்பணியை அவர் சித்தப்படி தொடர்ந்து நிறைவேற்ற சுகமும், பெலனும், ஞானமும். தேவகிருபைகளையும் கடவுள்தாமே
424 / 575
Church Day
பொழிந்தருள இறைவனிடம் இறைஞ்சி மன்றாடி நிற்கின்றோம். மாமன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள்: E. தேவராஜ், A. சகரியா ஜெயக்குமார், T. ராஜசேகர்,
425 / 575
Church Day
D. ரவி, S. சுனில், S. பெர்லின் ஜாஸ்பர், S. சுஜிர் ராஜ் ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக நிறைவேற்ற ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
426 / 575
Church Day
வளர்ச்சி பணிகளோடு நின்றுவிடாதபடி எமது திருச்சபை சார்பில் நமது பேராயம் மற்றும் பல அமைப்புகள் மூலமாக மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்துவரும்
427 / 575
Church Day
அருட்திருவாளர்கள் H. அருமை ராஜ். K.G. மோகன், A. மகேர்ஷால் அஸ்பாஸ், S. ஜஸ்டின் புஷ்பராஜ், J.S. ஜெயசிங், J. ஹட்சன், R. சுவாமிதாஸ், G. ஞானசெபுலோன்,
428 / 575
Church Day
S. பிளசின், A. டார்வின் ரிச்சர்ட் லாஸ், மிஷினரிகளாக திருவாளர்கள் T. ஆல்வின் கிஷான்சிங், A.B. தேவ சுபிர். R. கிறிஸ்டோபர் ராஜ், S. பிபின் K. தாஸ்,
429 / 575
Church Day
செல்வி. S. கமலபாய் ஆகியோரையும் உருவாக்கியுள்ளது. மேலும் நமது பேராயத்தின் முதல் அருட்பொழிவு பெற்ற பெண் போதகர் அருட்திருமதி. தங்க ஜாய் தேவராஜ்
430 / 575
Church Day
அவர்கள் எமது சபையின் உறுப்பினர் என்பதும் திருச்சபைக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.
431 / 575
Church Day
இறைப்பணியாற்றி ஓய்வுபெற்ற அருட்திருவாளர்கள் E. செல்வராஜ். T. எடிசன் ஞான ஜாண் லாஸ், Dr. விஜி தம்பி சாலமன், T. ஆஸ்டின் எட்வின் ரிச்சர்ட்,
432 / 575
Church Day
அருட்திருமதி. தங்க ஜாய், திரு. C. டேவிட் அருள்தாஸ், திரு. G. ஐசக் ஆகியோர் நமது சபையின் அங்கங்கள் என்பது நமது திருச்சபைக்கு சிறப்பு ஆகும்.
433 / 575
Church Day
நமது கிளை சபைகள்:
434 / 575
Church Day
1. வண்டவிளை
435 / 575
Church Day
நமது கிளை சபையான வண்டவிளை சபையின் ஊழியங்கள் நன்முறையில் நடைபெற்று வருகின்றன. இச்சபை மேலும் வளர்ச்சியடையவும்,
436 / 575
Church Day
ஊழியங்கள் சிறப்பாக நடைபெறவும், ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆலய கட்டிட விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவுற்று, புது ஆலயத்தில் புதுப்பொலிவுடன் இறைவனை
437 / 575
Church Day
ஆராதிக்கவும், விரைவில் ஆயர்மண்டலம் அந்தஸ்தடையவும், இதே ஒருமைப்பாட்டுடன் இணைந்து சபையைக் கட்ட இறைவன் கிருபை செய்ய வேண்டி வாழ்த்துகிறோம்.
438 / 575
Church Day
2. இலுப்பக்காவிளை
439 / 575
Church Day
21-01-2012 அன்று தற்காலிக சிற்றாலயம் அமைக்கப்பட்டு, ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 81.25 சென்ட் நிலத்தை சொந்தமாக்கி,
440 / 575
Church Day
1-7-2015 முதல் C.S.I. குமரி பேராயத்தின் கீழ், கஞ்சிக்குழி சேகரசபையின் கிளை சபையாக அங்கீகரிக்கப்பட்ட இச்சபை, கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல்
441 / 575
Church Day
2-8-2015 அன்று நாட்டப்பட்டு, 22-4-2018 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இச்சபையின் வளர்ச்சிக்காகவும் இறைவனிடம் வேண்டுகிறோம்.
442 / 575
Church Day
3. மருதூர்குறிச்சி குஞ்சன் தண்டலார் நினைவு ஆலயம்
443 / 575
Church Day
இறைவனுக்காக ரத்த சாட்சியாய் மரித்த குஞ்சன் தண்டலார் பெயரைத் தாங்கிய மருதூர்குறிச்சி சபையும், இறைவனுக்குள் எழுச்சி பெற்று வளர்வதைக்கண்டு
444 / 575
Church Day
மகிழ்சியுறுவதோடு, இச்சபையும் ஒரு மாபெரும் ஆயர் மண்டில சபையாய் வளரவும் இறைவன் அருள்புரிய மன்றாடுகிறோம்.
445 / 575
Church Day
4. சபை D.M.P.B. பணிகள் :
446 / 575
Church Day
நமது திருச்சபையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி என்னும் இடத்தில் D.M.P.B. பணிக்கள ஆலயம் கட்டப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
447 / 575
Church Day
இப் பணிக்களத்தில் முதல் திருமுழுக்கு 21-05-2017 அன்று ஒரு நபருக்கு கஞ்சிக்குழி சேகரசபையின் சேகரத்து போதகர் அருட்திரு. G.N.ராஜகுமார் அவர்களால் அளிக்கப்பட்டது.
448 / 575
Church Day
10-08-2017 அன்று 4 நபர்களுக்கு சேகரத்து போதகர் அவர்களால் திருமுழுக்கு அளிக்கப்பட்டது.
449 / 575
Church Day
5. சபை HMS பணிகள் :
450 / 575
Church Day
நமது சபை மாதந்தோறும் ரூ. 5,000/- கொடுத்து HMS பணிகளை தாங்கி வருகிறது.
451 / 575
Church Day
6. நமது திருச்சபையின் இந்திய வேதாகம சங்க கிளை பணிகள் :
452 / 575
Church Day
நமது திருச்சபையில் இந்திய வேதாகம சங்க கிளை கர்த்தரின் பெரிதான கிருபையால் 14-06-2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மொழியில் வேதாகமம் முழுமையும்
453 / 575
Church Day
மொழிபெயர்ப்புக்கான ரூபாய் 15 லட்சத்தை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் ரூ. 16 லட்சம்
454 / 575
Church Day
தேவைப்படுவதாக வேதாகம சங்கம் வேண்டுகோள் வைத்ததால் இறைவனின் ஆசியால் சபை மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஈகையோடு ,
455 / 575
Church Day
சுமார் 6 வருட காலத்தில் ரூபாய் 16 லட்சமும் 6-11-2015 அன்று செலுத்த தேவன் அருள்புரிந்தார். இத்தொகை மூலம் ராபா
மொழியில் திருமறை
456 / 575
Church Day
மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த வேதபுத்தகம் சீக்கிரம் வெளியிடப்பட சபை மக்களின் ஜெபத்தை வேதாகம சங்கம் நாடுகிறது. பிரெய்லி வேதாகமத்திற்காகவும்
457 / 575
Church Day
ரூ. 2,92,505/- கொடுக்கப்பட்டது. இப்பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஜெபத்துடனும் செய்து வரும் பொறுப்பாளர்களையும் உற்சாகமாய் கொடுத்து
458 / 575
Church Day
ஜெபித்து தாங்கிவரும் சபை மக்களையும் சபை நன்றியுடன் பாராட்டுகிறது.
459 / 575
Church Day
7. நமது புதிய பணிக்களம் :
460 / 575
Church Day
கணியாரம் பொற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை நடைபெற்று வரும் இடத்தில் மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு அந்த இடத்தை ஒரு பணிக்களமாக
461 / 575
Church Day
மாற்றி காலஞ்சென்ற திரு. J. தங்கமணி, தெற்கு காட்டுவிளை அவர்களது நிலத்தில் திரு. T. ராஜசேகர் டீக்கனார் செலவில் ஒரு தற்காலிக shed அமைக்கப்பட்டு
462 / 575
Church Day
1-11-2015 முதல் அந்த ஊழிய பொறுப்பாளராக திரு. V. ஜெபமணி அவர்கள் சபையால் நியமிக்கப்பட்டு திருமறைப்பள்ளியுடன் பணிக்கள ஊழியங்களும் நடைபெற்றன.
463 / 575
Church Day
தேவனை அறியாத மக்கள் பலர் இங்கு ஆராதனையில் கலந்து கொள்கின்றனர். இப்பணிக்களத்தில் முதல் திருமுழுக்கு ஆறு நபர்களுக்கு 23-04-2017 அன்று சேகரத்து போதகர்
464 / 575
Church Day
அருட்திரு. G.N. ராஜகுமார் அவர்களால் அளிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது. இப்பணிக்களம் மூலம் ஏராளமான ஆத்தும அறுவடை
465 / 575
Church Day
நடைபெற இறைவன் அருள்புரிய இறைவனை வேண்டுவோம்.
466 / 575
Church Day
இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்தி உற்சாகத்துடன் நல்ல பணி ஆற்றிய ஆண்கள் சங்கம், பெண்கள் சங்கம், பக்தி முயற்சி சங்கம், ஓய்வுநாட்பாடசாலை,
467 / 575
Church Day
பாடகர்குழு, ஜெபக்குழு, இந்திய வேதாகம சங்க கிளை, நூலகம், வண்டவிளை கிளை சபை, இலுப்பக்காவிளை கிளை சபை, மருதூர்குறிச்சி கிளை சபை,
468 / 575
Church Day
கணியாரம் பெற்றவிளை ஓய்வு நாள் பாடசாலை மற்றும் பணிக்களம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தினர்களுக்கு சபை நன்றி பாராட்டி வாழ்த்துகிறது.
469 / 575
Church Day
நடப்பாண்டு பணிகள் :
470 / 575
Church Day
திருச்சபை ஊழியங்கள் :
471 / 575
Church Day
இவ்வாண்டு ஆலய ஆராதனைகள் மற்றும் இறைபணிகள் ஒழுங்காக நடைபெற்றன. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை ஆராதனை மற்றும் புதன்,
472 / 575
Church Day
வெள்ளி இரவு ஆராதனைகள் ஒழுங்காக நடைபெற்றன. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்று வருகின்றது.
473 / 575
Church Day
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அதிகாலை அருணோதய ஆராதனை திருவிருந்து ஆராதனையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில்
474 / 575
Church Day
உபவாச ஜெபமும், மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் முன் இரவு விழிப்பு ஜெபமும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஞாயிறு காலை ஆராதனைக்குப்பின் Fellowship Tea வழங்கப்படுகிறது.
475 / 575
Church Day
ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை உபவாச கூட்டத்திற்குபின் அன்பின் விருந்தும், 3-ம் வெள்ளி முன்னிரவு ஜெபத்திற்குபின் தேனீர் மற்றும் Snacks வழங்கப்பட்டு வருகிறது.
476 / 575
Church Day
2025 அக்டோபர் சங்கப்பண்டிகை 19-10-2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கு பெற்றவர்களுக்கு தேனீர் Snacks வழங்கப்பட்டது.
477 / 575
Church Day
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்பைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு செய்தியாளர்களைக் கொண்டு திறந்த வெளிக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
478 / 575
Church Day
15-02-2026 அன்று கஞ்சிக்குழி C.S.I. சேகரசபையைச் சேர்ந்த 56 அங்கத்தினர்களுக்கு சேகரத்துப்போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்களால் கஞ்சிக்குழி
479 / 575
Church Day
C.S.I. சேகரசபையில் வைத்து திடப்படுத்தல் வழங்கப்பட்டது. 2025 நவம்பர் 19 முதல் டிசம்பர் 20-ம் நாள் வரை கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப்பாடல் நடைபெற்றது.
480 / 575
Church Day
2025 நவம்பர் 19 முதல் 23 வரை வெளியூரில் வசிக்கும் நமது சபை அங்கத்தினர்களின் இல்லங்களை சந்தித்து கிறிஸ்துபிறப்பு வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு 23-ம் நாள்
481 / 575
Church Day
சென்னையில் வசிக்கும் நமது சபை அங்கத்தினர்களை ஒருங்கிணைத்து சென்னை நந்தனம் YMCA வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் வைத்து சிறப்பு கூடுகைநடத்தி
482 / 575
Church Day
அன்பின்விருந்து வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பு பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் ஆராதனைகள் யாவும் நன்முறையில் நடைபெற்றன.
483 / 575
Church Day
கிறிஸ்து பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நலிந்தோருக்கு இலவச துணிகள் வழங்கப்பட்டன. கிறிஸ்து பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நமது சபையின் 75 வயது நிரம்பிய
484 / 575
Church Day
அங்கத்தினர்களை அவர்கள் இல்லங்களில் சந்தித்து ஜெபித்து பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
485 / 575
Church Day
சேகர ஐக்கிய திருவிருந்து ஆராதனை நமது சபையில் 04-01-2026 அன்று நடத்தப்பட்டு நமது திருச்சபையார் மற்றும் கிளைச் சபைகளின் திருச்சபையாளர்களுக்கும் ஐக்கிய விருந்து
486 / 575
Church Day
வழங்கப்பட்டது. ஆண்டு இறுதி மற்றும் வருட பிறப்பு ஆராதனைகளும், புதுவருட சிறப்பு ஆராதனையும், புதுவருட வார ஜெப ஆராதனைகளும் நடைபெற்றன.
487 / 575
Church Day
புது வருட பிறப்பை முன்னிட்டு சபை குடும்பங்களுக்கு இலவசமாக நாள்காட்டி வழங்கப்பட்டது. நமது D.M.P.B. பணித்தளமான நரிப்பள்ளி பணித்தள நடப்பாண்டு சபைநாள்
488 / 575
Church Day
விழா திரளான கஞ்சிக்குழி திருச்சபையின் மக்களுடன் சேகரத்துப் போதகர் மற்றும் சபைக்குழுவுமாக சென்று 25-01-2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. அங்குள்ள
489 / 575
Church Day
மக்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. நமது திருச்சபை மாதந்தோறும் ரூ. 12,000/- அளித்து D.M.P.B. மூலம் 3 மிஷினரிகளை தாங்கி வருகிறது.
490 / 575
Church Day
லெந்து கால ஆராதனைகளும், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகை ஆராதனைகளும் நடைபெற்றன. லெந்து கால சிறப்பு நிகழ்வாக லெந்து காலம் முழுவதும்
491 / 575
Church Day
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை நேரங்களில் சபைக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சிறப்பு செய்தியாளர்களைக் கொண்டு திறந்தவெளி சிறப்பு ஆராதனைகள்
492 / 575
Church Day
நடத்தப்பட்டன. திரளாக மக்கள் கலந்துகொண்டு இறை ஆசி பெற்றுச் சென்றனர். இக்கூட்டங்களை நடந்த ஆலோசனை தந்து தலைமை தாங்கி சிறப்பாக நடத்தித்தந்த
493 / 575
Church Day
சேகரத்துப் போதகர், முன்னிலை வகித்து சிறப்பித்த உதவிப்போதகர் மற்றும் அனைத்து திறந்த வெளி கூட்டங்களுக்கும் திருச்சபை நிதியிலிருந்து எந்த செலவும்
494 / 575
Church Day
செய்யாமல் ஒலி, ஒளி மற்றும் இசை ஆகியவற்றை தன் சொந்த உபகரணங்களைக் கொண்டு நடத்தித் தந்த திரு. T. ராஜசேகர் டீக்கனார் மற்றும் இந்த அனைத்து
495 / 575
Church Day
உபகரணங்களையும் எடுத்துச் சென்று எல்லா ஒழுங்குகளையும் குறித்த நேரத்தில் செய்து தரும் திருச்சபையின் தன்னார்வ குழு நண்பர்களையும் திருச்சபை வாழ்த்தி
496 / 575
Church Day
நன்றி தெரிவிக்கின்றது. லெந்து நாட்களை முன்னிட்டு 2026 மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஆன்மீக எழுப்புதல் துறை மூலம் கஞ்சிக்குழி சேகர ஐக்கிய நற்செய்தி
497 / 575
Church Day
பெருவிழா நமது சபையில் வைத்து சேகரத்து போதகர் அருட்திரு. S. பெல்சன் கிராமணி அவர்கள் தலைமையில், உதவிப்போதகர் அருட்திரு. I. தங்கச்சன் அவர்கள்
498 / 575
Church Day
முன்னிலையில் நடைபெற்றது. குமரிப்பேராய ஆன்மீக எழுப்புதல் துறை இயக்குநர் அருட்திரு. லிபின்ராஜ் அவர்கள் சிறப்பு செய்தி அளித்தார்கள்.
499 / 575
Church Day
புனித வார சிறப்பு நிகழ்வாக 01-04-2026 புதன் இரவு 'THE PASSION OF THE CHRIST' ஒலி ஒளி காட்சிமூலம் இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் காண்பிக்கப்பட்டன.
500 / 575
Church Day
05-04-2026 அன்று அதிகாலை நடைபெற்ற உயிர்த்தெழுதல் நாள் சிறப்புத்தொழுகையில் C.S.I. கன்னியாகுமரி பேராயர் உயர்மறைதிரு. முனைவர் S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்கள்
501 / 575
Church Day
கலந்துகொண்டு சிறப்பு செய்தி அளித்து சிறப்பித்தார்கள்.
502 / 575
Church Day
பெண்கள் ஞாயிறு ஆராதனை, வாலிபர் ஞாயிறு ஆராதனை ஆகியவை நடைபெற்றன. நமது திருச்சபையின் ஏப்ரல் சங்க ஆராதனை 19-04-2026 அன்று சங்கப்பண்டிகை
503 / 575
Church Day
மற்றும் அறுப்பின் பண்டிகையாக நடைபெற்றது. சங்கப்பண்டிகை நிறைவு விழா இரவு ஆராதனை சிறப்பு நிகழ்ச்சியாக பூவன்கோடு “இறைத்தென்றல்” குழுவினரின்
504 / 575
Church Day
இன்னிலை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. பங்கு பெற்றவர்களுக்கு தேனீர் மற்றும் Snacks வினியோகிக்கப்பட்டது.
05-10-2025 அன்று நமது திருச்சபையின்
505 / 575
Church Day
நடப்பாண்டு குடும்பவிழா நடைபெற்றது. குடும்பவிழா காலை தொழுகையில் Dr. வில்லியம் தர்மராஜா அவர்கள் சிறப்பு செய்தி அளித்தார்கள். காலை
506 / 575
Church Day
ஆராதனையைத் தொடர்ந்து மதியம் அன்பின் விருந்தும் அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இரவு சிறப்பு நிகழ்ச்சியாக "ARMY OF JESUS" பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
507 / 575
Church Day
அதனைத் தொடர்ந்து இரவு விருந்தும் அளிக்கப்பட்டது. 10-05-2026 முதல் 17-05-2026 வரை நடப்பாண்டு VBS சிறப்பாக நடைபெற்றது. நிறைவு தினத்தன்று கலந்துகொண்ட
508 / 575
Church Day
பிள்ளைகளுக்கு சபை சார்பில் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
509 / 575
Church Day
சபை பிள்ளைகளின் படிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் சபைக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள்
510 / 575
Church Day
வழங்கப்பட்டன. மேலும் 12-ம் வகுப்பில் 500 / 600 மற்றும் 10-ம் வகுப்பில் 400 / 500 மற்றும் அதற்கு மேலும் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் அளித்து ஊக்குவிக்கப்பட்டனர்.
511 / 575
Church Day
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாம் இவ்வாண்டு 07-03-2026 அன்று அருட்திரு. S. பெல்சன் கிராமணி
512 / 575
Church Day
அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி தூய பேதுரு C.S.I. திருச்சபையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. நமது சபையின் மூத்த குடிமக்கள் பலர் ஆர்வத்தோடு
513 / 575
Church Day
கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இக்கூடுகைக்கான முழுச் செலவையும் வெளிநாடுகளில் பணிபுரியும் நமது சபை அங்கத்தினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
514 / 575
Church Day
அவர்கள் அனைவருக்கும் சபை மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.
515 / 575
Church Day
வளர்ச்சிப் பணிகள்:
516 / 575
Church Day
1. சமூக நலக்கூட சமையலறையிலிருந்து புகை உள்ளே வருவதை தடுக்க ரூ. 91,640/- செலவில் புகையில்லா அடுப்பு அமைக்கப்பட்டு தரை செப்பனிடப்பட்டது.
517 / 575
Church Day
2. ஆலய முன்புற மைதானத்தில் ரூ. 1,35,000/- செலவில் டிஜிட்டல் வசனப் பலகை அமைக்கப்பட்டது. முழுத்தொகையும் அன்பளிப்பாக வழங்கிய திரு. T. கிறிஸ்டோபர் ராஜ்,
518 / 575
Church Day
மேற்குக் காட்டுவிளை அவர்களுக்கு சபை நன்றி தெரிவிக்கிறது.
519 / 575
Church Day
3. ஆலயத்தின் வடபுறத்திலுள்ள Stage ரூ. 30,300/- செலவில் செப்பனிடப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.
520 / 575
Church Day
4. ஆலயத்தின் உட்புற முன்பகுதியில் இருபுறமும் ஆராதனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வசதியாக இரண்டு டிஜிட்டல் பலகைகள் ரூ.5,50,000/- செலவில் அமைக்கப்பட்டன.
521 / 575
Church Day
5. C.S.I. நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனைக்கு Linear Accelenator வாங்க ரூ. 5,50,000/- வழங்கப்பட்டது.
522 / 575
Church Day
6. சிறு குழந்தைகளுக்கு மகளிர் பாலூட்ட வசதியாக பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு 19-07-2026 அன்று திருச்சபைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
523 / 575
Church Day
7. திருச்சபையில் ஏற்கெனவே 28-04-2024க்கு முன் உள்ள திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையில் இவ்வாண்டு ரூ.11,85,350/- சம்மந்தப்பட்டவர்களுக்கு திருப்பி செலுத்தப்பட்டது.
524 / 575
Church Day
சேவைத் திட்ட பணிகள்:
525 / 575
Church Day
1. நலிவடைந்த நிலையிலுள்ளோர், நலிவடைந்த நிலையில் மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் நலிவடைந்த சிறுவர்கள் என 49 பேருக்கு மாதந்தோறும் மொத்தம்
526 / 575
Church Day
ரூ.47,500/- வழங்கப்பட்டு வருகிறது.
527 / 575
Church Day
2. நலிவடைந்த நிலையிலுள்ள மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தங்கள் எழுதுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.
528 / 575
Church Day
3. மிகவும் நலிந்த நிலையில் நோயால் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்த இரு நபருக்கு மொத்தம் ரூ. 50,000/- உதவித்தொகை வழங்கப்பட்டது.
529 / 575
Church Day
4. கிறிஸ்துபிறப்பு பண்டிகையை முன்னிட்டு நலிந்த நிலையில் உள்ள தேவைப்பட்டோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
நலிந்தோருக்கு உதவிட தாராளமாய்
530 / 575
Church Day
கொடுத்துவரும் அன்பு உள்ளங்களுக்கு சபை நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
531 / 575
Church Day
திருமறைப்பள்ளி பணிகள் :
532 / 575
Church Day
நமது திருச்சபையின் திருமறைப்பள்ளி நன்முறையில் நடைபெற்று வருகிறது.
533 / 575
Church Day
திருச்சபை பக்தி முயற்சி சங்க பணிகள்:
534 / 575
Church Day
நமது சபையின் பக்திமுயற்சி சங்கம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. 01-02-2026 அன்று அகில உலக பக்தி முயற்சி சங்க தினவிழா றாலி கொண்டாடப்பட்டது.
535 / 575
Church Day
சபை பாடகர் குழு பணிகள் :
536 / 575
Church Day
ஆராதனைக்கு அழகு சேர்ப்பது பாடகர்குழு. நமது பாடகர்குழுவும் நல்முறையில் சபையின் ஆரதனைகளிலும், மற்றும் சிறப்பு ஆராதனைகளிலும் பங்கெடுத்து சிறப்பித்து வருகிறது.
537 / 575
Church Day
திருச்சபை பெண்கள் சங்கம்:
538 / 575
Church Day
நமது திருச்சபையின் பெண்கள் சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் பெண்கள் சங்கம் சபையில் கூடி சபையின் பல்வேறு ஊழியங்கள், தேவைகள்,
539 / 575
Church Day
குடும்பங்களுக்காக ஜெபித்து வருகிறது. மேலும் நோயுற்றோரை சந்தித்து ஜெபித்தும், துயருற்றோருக்கு ஆறுதல் கூறியும் பணி செய்கின்றனர்.
540 / 575
Church Day
ஒவ்வொரு மாதமும் பெண்கள் சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் சபை குடும்பங்களை சந்தித்து ஜெபித்து வருகின்றனர்.
541 / 575
Church Day
08-03-2026 அன்று பெண்கள் ஞாயிறு சிறப்பு ஆராதனை மற்றும் விற்பனை விழா நடைபெற்றது. ஐரேனிபுரம் பார்வையற்ற பள்ளி பிள்ளைகளுக்கும்,
542 / 575
Church Day
குளச்சல் தொழுநோய் மருத்துவமனை மக்களுக்கும் ஒருநாள் மதிய உணவு வழங்கப்பட்டது. C.S.I. நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையில்
543 / 575
Church Day
Linear Accetarator வாங்க ரூ. 1,47,000/- கொடுக்கப்பட்டது.
544 / 575
Church Day
சபை ஜெபக்குழு:
545 / 575
Church Day
நமது திருச்சபையின் ஜெபக்குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகலில் ஆலயத்தில் மகளிர் கூடி ஜெபித்து வருகிறார்கள்.
546 / 575
Church Day
தினமும் காலை 5 மணியிலிருந்து மாலை 7 மணி வரை சபை மக்கள் ஜெபிப்பதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
547 / 575
Church Day
திருச்சபை ஆண்கள் சங்கம்:
548 / 575
Church Day
நமது திருச்சபையின் ஆண்கள் சங்கம் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. ஆண்கள் சங்கம் சார்பில் ரூ. 4,000/- கொடுத்து DMP மூலம் ஒரு மிஷினரி தாங்கப்பட்டு வருகிறார்.
549 / 575
Church Day
22-03-2026 அன்று சமூகநலக்கூட்டத்தில் வைத்து இலவச கண்சிகிட்சை முகாம் நடைபெற்றது. 27-07-2025 அன்று மூலச்சல் ஹோமிலுள்ள பிள்ளைகளுக்கும், 05-07-2026
550 / 575
Church Day
அன்று ஆலங்கோட்டிலுள்ள பிள்ளைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
551 / 575
Church Day
நூலக பணிகள் :
552 / 575
Church Day
திருச்சபை மக்கள் வேத அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நூலக அருட்பணி இயக்கம் வழியாக ஒரு நூலகம் அமைக்கப்பட்டு நன்முறையில் செயல்பட்டு
553 / 575
Church Day
வருகின்றது. நூலகம் சார்ந்த போட்டிகளிலும் பங்குபெற்று பரிசுகளை பெற்று வருகின்றனர்.
554 / 575
Church Day
1. இந்த ஆண்டு நமது சபையில் பிறந்த பிள்ளைகள் - 14
555 / 575
Church Day
2. இந்த ஆண்டு நமது சபையில் திருமுழுக்கு பெற்றவர்கள் -30
556 / 575
Church Day
3. திருமண வாழ்க்கையில் பிரவேசித்தவர்கள் - 24
557 / 575
Church Day
திருமண வாழ்க்கைக்குள் பிரவேசித்த நமது சபை பிள்ளைகளை, எல்லா வளமும் பெற்று வாழ சபை வாழ்த்துகிறது.
558 / 575
Church Day
4. இவ்வுலக வாழ்வை முடித்து மறுமை எய்தியவர்கள் - 23
559 / 575
Church Day
இவ்வுலக வாழ்வை முடித்து மறுமை எய்திய நமது சபை அங்கத்தினர்கள், இவ்வுலக வாழ்வின்போது சபைக்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய சேவையை சபை நினைவு
560 / 575
Church Day
கூருவதோடு பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் சமாதானத்தையும் ஆறுதலையும் அளிக்க சபை பிரார்த்திக்கின்றது.
561 / 575
Church Day
வருங்கால திட்டங்கள்:
562 / 575
Church Day
நமது திருச்சபையை இறைப்பணியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் கீழ்க்காணும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
563 / 575
Church Day
1. HMS முருங்கவிளை மற்றும் HMS வலிய வீட்டு வளாகம் திருச்சபைகளை அச்சபை மக்களின் விருப்பத்திற்கிணங்க நமது திருச்சபையின் கிளை சபையாக இணைக்க
564 / 575
Church Day
உரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
565 / 575
Church Day
2. கணியாரம் பொற்றைவிளை பணித்தளத்தை நமது திருச்சபையின் கிளை திருச்சபையாக இணைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
566 / 575
Church Day
3. ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சகோ. மோகன் சி. லாசரஸ், நாலுமாவடி அவர்களைக் கொண்டு நமது சபை வளாகத்தில்
567 / 575
Church Day
நடத்தவிருக்கும் நற்செய்தி பெருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டும் நாம் சபையாக கூடி
568 / 575
Church Day
ஒன்றிணைந்து சபைநாள் விழா கொண்டாட எல்லா சூழ்நிலைகளையும், வாய்ப்பையும், ஐக்கியத்தையும். சுகத்தையும் தந்த இறைமகன் இயேசுவுக்கே எல்லா துதிகளையும்,
569 / 575
Church Day
மகிமைகளையும், ஸ்தோத்திரங்களையும் காணிக்கையாக்குகிறோம். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த Rev.J. பிரகாஷ் நாயகம் அவர்கள்,
570 / 575
Church Day
முன்னாள் போதகர்கள், ஊழியர்கள், விருந்தினர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
571 / 575
Church Day
வளர்ந்து வரும் நமது திருச்சபையின் வளர்ச்சி எவ்வளவேனும் குறையாத நிலையில் நாம் இணைந்து செயல்படவும் பிரிவினை என்னும் சாத்தானுக்கு இடங்கொடாமல் ஒன்றுபட்டு
572 / 575
Church Day
உழைத்து சோதனைகளை முறியடித்து முன்னேற இயேசுகிறிஸ்துவின் கிருபை நம் சபை பணிகளோடு எப்போதும் இருக்க நமது ஜெபங்களில் இறைவனிடம் வேண்டுவோம்.
573 / 575