தீவினை செய்யாதே 1 தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில், வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய், யேசையரை நம்பி வென்றேகிப் போவாய். ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார், மீட்பர் பெலனை ஈவார், ஜெயம் தந்திடுவார். 2 வீண் வார்த்தை பேசாமல், வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய், யேசையரை நம்பி வென்றேகிப் போவாய். 3 மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன்தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான்; மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய், யேசையரை நம்பி வென்றேகிப் போவாய்