கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! (2)
கர்த்தருக்கு காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்,
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும்.
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!
1. அநியாயம் நீங்க வேணும், - உலகிலே மெய்
அறிவு வளர வேணும்,
தனியேக மெய்த்தேவனை - நந்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்
கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்,
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும், அய்யா!
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!
2. ஆபிரகாம் பத்திலொன்றையே- மெல்கிசே தேக்குக்கு
அனைத்திலும் தந்தையே!
மா பிரியமாக வாசித்தேன், - இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே
ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம் தமதடி கீழ்த்
தந்தளித்த தெல்லாம் கேட்டேன்.
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!
3. கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்- இதோ! இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்,
நஞ்சைவிளைவினி லோர்பாகம் - சேர்த்து வைத்தேனான்,
நாலாவகை வரத்திற் கொஞ்சம்,
புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
சிந்தனை தொகையுமாச்சு.
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!