யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார். யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே, ஓடிடவே உருகி வாடிடவே. யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே, துதித்திடவே பரனைத் துதித்திடவே. யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன, தெறிபட்டன நொடியில் முறிபட்டன. யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே, எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே. யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார், அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார். யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை, மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம், பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம். யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார். யூதராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்.