கருத்தாய் நான் ஜீவிக்கவே
பின்மாரியாய் முன்மாரியாய்
பொழிந்திட வேண்டுகிறேன்.
1. தன்னலம் நிறைந்த உலகமதில்
தீமைகள் செய்வார் உண்டு
அன்புள்ளம் கொண்டு நீ மன்னித்தது போல்
என்னையும் ஏவிடுமே.
கல்வாரியே கல்வாரியே
கருத்தாய் நான் ஜீவிக்கவே
பின்மாரியாய் முன்மாரியாய்
பொழிந்திட வேண்டுகிறேன்.
2. மாறிடும் மாந்தர் வருந்தும்போது
மாறாத உம்மைப் போல
மன்னவா உந்தன் சித்தம் நான் செய்து
சிநேகிக்க அருள்தாருமே.
கல்வாரியே கல்வாரியே
கருத்தாய் நான் ஜீவிக்கவே
பின்மாரியாய் முன்மாரியாய்
பொழிந்திட வேண்டுகிறேன்.
3. கல்வாரியின் உம் தியாகத்தைப் போல்
உள்ளதைப் படைத்திடவே
உள்ளதை எல்லாம் உம்பாதம் வைத்து
ஜீவிக்க வரம் தாருமே.
கல்வாரியே கல்வாரியே
கருத்தாய் நான் ஜீவிக்கவே
பின்மாரியாய் முன்மாரியாய்
பொழிந்திட வேண்டுகிறேன்.