1 / 2
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட - (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன் பிறந்தார் - (2)
நேசர் பிறந்தாரே - (2)
1. மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே - (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி
2. மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே - (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே
பணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி